என் மலர்
கார்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்தது. இந்த காருக்கான முன்பதிவு அக்டோபர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு துவங்க இருக்கும் நிலையில், புதிய எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் மற்றும் வினியோக விவரங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு உள்ளது.
அந்த வகையில் டாடா டியாகோ EV மாடலின் டெஸ்ட் டிரைவ் டிசம்பர் மாத இறுதியில் துவங்குகிறது. டெஸ்ட் டிரைவை தொடர்ந்து வினியோகம் 2023 ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 79 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை காரை முதலில் வாங்கும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.

புதிய டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா டியாகோ EV காரில் சிப்டிரான் பிராண்டெட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை ஆறு நொடிகளுக்குள் எட்டிவிடும். இத்துடன் இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் 24 கிலோவாட் ஹவர் மற்றும் 19.2 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 61 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 71 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
பெரிய பேட்டரி கொண்ட டியாகோ எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை செல்லும். சிறிய பேட்டரி கொண்ட கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.3 கிலோவாட் ஏசி மற்றும் 7.2 கிலோவாட் ஏசி ஹோம் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய XUV300 டர்போஸ்போர்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய டர்போஸ்போர்ட் மாடல் மூன்று வேரியண்ட் மற்றும் மூன்று நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் புதிய XUV300 T-GDi வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா XUV300 T-GDi விலை ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மூன்று வேரியண்ட் மற்றும் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் இந்த கார் XUV300 ஸ்போர்ட்ஸ் பெயரில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
புதிய XUV300 T-GDi மாடலில் 1.2 லிட்டர் எம்ஸ்டேலியன் T-GDi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே காரின் ஸ்டாண்டர்டு டர்போ வேரியண்ட் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

வெளிப்புறம் XUV300 T-GDi மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பிளேசிங் பிரான்ஸ், பியல் வைட் மற்றும் நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் T-GDi லோகோ மற்றும் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த காரில் மஹிந்திராவின் புதிய ட்வின்-பீக் லோகோ வழங்கப்பட்டு உள்ளது.
காரின் உள்புறம் ஆல்-பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவரில் லெதர் ராப் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பெடல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய XUV300 T-GDi மாடல் ஹூண்டாய் வென்யூ N லைன் மற்றும் கியா சொனெட் 1.0 லிட்டர் டர்போ வேரியண்டிற்கு போட்டியாக அமைகிறது.
விலை விவரங்கள்:
மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W6 ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம்
மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 ரூ. 11 லட்சத்து 65 ஆயிரம்
மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 DT ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம்
மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 (O) ரூ. 12 லட்சத்து 75 ஆயிரம்
மஹிந்திரா XUV300 டர்போஸ்போர்ட் W8 (O) DT ரூ. 12 லட்சத்து 90 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- அக்டோபர் மாதத்தில் போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரு கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்களுக்கு தள்ளுபடி, எக்சேன்ஜ் தள்ளுபடி மற்றும் லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன. இரு கார்களில் போக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி பேஸ் வேரியண்ட் வாங்குவோருக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட வேரியண்ட்களுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், 1.5 லிட்டர் GT DSG வேரியண்டிற்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகிறது. டைகுன் 1.5 லிட்டர் GT மேனுவல் ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் இரண்டு டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை வாங்குவோர் ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இதன் டாப்லைன் வேரியண்டிற்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 57 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கிராண்ட் விட்டாரா எஸ்யுவி மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்திலேயே இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் முன்பே புதிய கிராண்ட் விட்டாரா மாடலை வாங்க 57 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருந்தனர்.
இதன் காரணமாக புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலை வாங்க அதிகபட்சமாக எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் வாங்குவோர் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். புதிய கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இவற்றில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல், மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்கள் அடங்கும். இத்துடன் மைல்டு ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் மட்டும் டொயோட்டா நிறுவனம் உருவாக்கியது ஆகும்.
புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மைல்டு ஹைப்ரிட் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 103 பிஎஸ் பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு MT மற்றும் 6 ஸ்பீடு AT ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு அதிகபட்சம் 21.11 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.
கிராண்ட் விட்டாரா ஸ்டிராங் ஹைப்ரிட் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 141 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 27.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
- டொயோட்டா நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்திய சந்தையில் மாற்றப்பட்டு இருக்கிறது.
- விலை மாற்றம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. இம்முறை டொயோட்டா கார் மாடல்கள் விலை ரூ. 11 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் டொயோட்டா வெல்ஃபயர் மாடலின் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து டொயோட்டா கேம்ரி மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா பார்ச்சூனர் மாடலின் வேரியண்ட்களுக்கு ஏற்ப ரூ. 19 ஆயிரத்தில் துவங்கி ரூ. 77 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோன்று இன்னோவா க்ரிஸ்டா விலை ரூ. 11 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 23 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வு தவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் தான் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மிட்-சைஸ் எஸ்யுவி-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து புதிய கிளான்சா மாடலின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கார் மைல்டு மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQS 580 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய பென்ஸ் EQS 580 எலெக்ட்ரிக் கார் மாடல் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய EQS 580 4மேடிக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 4மேடிக் மாடல் விலை ரூ. 1 கோடியே 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் AMG EQS 53 4மேடிக் மாடலை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகும் இரண்டாவது EQS மாடல் இது ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் பூனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது.
எலெக்ட்ரிக் வெஹிகில் ஆர்கிடெக்ச்சர் (EVA2) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய EQS மாடல் நீண்ட மற்றும் அதிகம் வளைந்த ரூப்லைன் கொண்டிருக்கிறது. இது "ஒன்பௌ" என அழைக்கப்படுகிறது. இந்த காரில் எல்இடி டிஆர்எல்கள் முன்புற அகலம் முழுக்க நீள்கிறது. இதே போன்று பின்புற டெயில் லைட் ஸ்ட்ரிப் முழுக்க நீள்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 20 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் உள்புறம் டூயல் டோன் நெவா கிரே/பலௌ பிரவுன் அல்லது மச்சாடியோ பெய்க்/ஸ்பேஸ் கிரே தீம் மற்றும் பிரவுன் வால்நட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபின் பகுதியில் 56 இன்ச் அளவில் ஒற்றை MBUX ஹைப்பர்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 17.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் மற்றும் 12.3 இன்ச் முன்புற பயணிக்கான டச் ஸ்கிரீன் என மொத்தம் மூன்று OLED ஸ்கிரீன்கள் உள்ளன.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 107.8 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டூயல் மோட்டார் செட்டப் 516 ஹெச்பி பவர், 855 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 857 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.
மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் 200 கிலோவாட் சார்ஜிங் திறன் கொண்டிருக்கிறது. இதை கொண்டு காரின் பேட்டரியை 10 இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 31 நிமிடங்களே ஆகும்.
- பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் முற்றிலும் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது.
- இந்த கான்செப்ட் சிட்ரோயன் நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதை குறிக்கும் வகையில் உள்ளது.
சிட்ரோயன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆல்-இ எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆல்-இ கான்செப்ட் போக்குவரத்தை குறைந்த விலையில், அதிக மகிழ்ச்சியான ஒன்றாக, மதிப்பு மிக்கதாக, பயனுள்ளதாக மாற்றும் இலக்கை கொண்டிருக்கிறது.
ஆல்-இ கான்செப்ட் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் செயல்திறன், சீரான இயக்கம் மற்றும் அதிக தரமுள்ளதாக உருவாக்கப்பட இருக்கிறது. எதிர்காலத்தில் குறைந்த விலை, எடை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய சிட்ரோயன் திட்டம் வைத்திருப்பதை உணர்த்தும் வகையில் இந்த கான்செப்ட் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

சிட்ரோயன் ஆல்-இ கான்செப்ட் பிளாட் பொனெட், ரூப், மற்றும் பிக்-அப் பெட் பேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டீல்/அலுமினியம் ஹைப்ரிட் வீல்கள் குட்-இயர் ஈகிள் கோ கான்செப்ட் டயர்களை கொண்டுள்ளன. இந்த காரில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரியை கொண்டு 400 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முியும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
மேலும் காரை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 23 நிமிடங்களே ஆகும். ஆல்-இ காரை மிக எளிதில் மறுசுழற்சி செய்திட முடியும். ஒருவேளை மறுசுழற்ச்சி செய்ய முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் இதன் பாகங்களை மற்ற மாடல்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் M8 காம்படீஷன் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்தது.
- இது M சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் சீரிசில் ஏழாவது மாடல் ஆகும்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது M சீரிசின் 50-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 10 ஸ்பெஷல் எடிஷன் M மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வரிசையில், பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் 5- ஜாரெ M எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் 50 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 2 கோடியே 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய M8 காம்படீஷன் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் சக்திவாய்ந்த வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4.4 லிட்டர், ட்வின் டர்போ வி8 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

50 ஜாரெ M எடிஷனில் M8 மாடல் ஐல் ஆப் மேன் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் M ப்ரூக்லின் கிரே மற்றும் அவென்ட்யுரின் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டேடோனா புளூ, புரோசன் பிரிலியண்ட் வைட், புரோசந் மரினா பே புளூ, புரோசன் டீப் கிரீன் மற்றும் புரோசன் டீப் கிரே போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. M கார்பன் பைபர் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ லேசர்லைட் இடம்பெற்று உள்ளது.
காரின் உள்புறம் லெதர் மெரினோ இருக்கை மேற்கவர்கள், M சீட் பெல்ட்கள், அல்காண்ட்ரா ஹெட்லைனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் M கார்பன் பேக்கேஜ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
- டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.
- புதிய ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் E, S, G மற்றும் V மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்கள் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய டொயோட்டா ஹைரைடர் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக டொயோட்டா ஹைரைடர் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை செப்டம்பர் 09 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டொயோட்டா ஹைரைடர் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டொயோட்டா ஹைரைடர் விலை விவரங்கள்:
ஹைரைடர் E மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம்
ஹைரைடர் S மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 12 லட்சத்து 28 ஆயிரம்
ஹைரைடர் S மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 13 லட்சத்து 48 ஆயிரம்
ஹைரைடர் S ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம்
ஹைரைடர் G மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 14 லட்சத்து 34 ஆயிரம்
ஹைரைடர் G மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 15 லட்சத்து 54 ஆயிரம்
ஹைரைடர் G ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம்
ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம்
ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 17 லட்சத்து 09 ஆயிரம்
ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் MT AWD ரூ. 17 லட்சத்து 19 ஆயிரம்
ஹைரைடர் V ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய டொயோட்டா ஹைரைடர் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் K15C என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடல்- E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் AWD வசதி மைல்டு ஹைப்ரிட் V மேனுவல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் பானரோமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
- இந்த வரிசையில் டாடா சபாரி புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சபாரி XMS மற்றும் XMAS புது வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 17 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டாடா சபாரி புது வேரியண்ட்கள் XM மற்றும் XT வேரியண்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

XM வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது டாடா சபாரி XMS மற்றும் XMAS வேரியண்ட்களில் கூடுதலாக பானரோமிக் சன்ரூப், டிரைவ் மோட்கள் (இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்), 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நான்கு ஸ்பீக்கர்கள், நான்கு ட்வீட்டர்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஆட்டோ ஹெட்லேம்ப், எலெக்ட்ரிக் போல்டபில் ORVM-கள் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய டாடா சபாரி மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா ஹேரியர் XMS வேரியண்டை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடல் வினியோகம் துவங்கியது.
- இந்த கார் முன்பதிவு துவங்கிய 30 நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.
மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஜூலை 30 ஆம் தேதி மஹிந்திரா ஸ்கார்பியோ N முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய முதல் 30 நிமிடங்களில் இந்த காரை வாங்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.
தற்போது வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், புதிய ஸ்கார்பியோ N மாடலின் 25 ஆயிரம் முன்பதிவுகளையும் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் வினியோகம் செய்து முடிக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. மேலும் வினியோகம் துவங்கிய பத்து நாட்களுக்குள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஆறு மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது தார் மாடல் விலையை மாற்றி அமைத்து இருக்கிறது.
- காரின் வேரியண்டுக்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது தார் எஸ்யுவி மாடல் விலையை மாற்றி இருக்கிறது. தார் எஸ்யுவி வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் AX வேரியண்ட் புதிய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனினும், மஹிந்திரா தார் பெட்ரோல் AT, கன்வெர்டிபில் ஹார்டு டாப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 678 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 271 குறைக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா தார் பெட்ரோல் MT மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 711 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார் டீசல் வேரியண்ட் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் MT ஹார்டு டாப் வேரியண்ட் மற்றும் கன்வெர்டிபில் விலை முறையே ரூ. 28 ஆயிரத்து 278 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 096 உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று மஹிந்திரா தார் டீசல் AT வேரியண்ட் கன்வெர்டிபில் மற்றும் ஹார்டு டாப் வேரியண்ட் விலை முறையே ரூ. 52 ஆயிரத்து 780 மற்றும் ரூ. 53 ஆயிரத்து 411 உயர்த்தப்பட்டு உள்ளது.
முன்னதாக இதே மாதத்தில் மஹிந்திரா தார் நிற ஆப்ஷன்கள் மாற்றப்பட்டன. இத்துடன் மஹிந்திரா XUV700 விலைகளும் மாற்றப்பட்டன. அந்த வரிசையில் தான் தற்போது தார் மாடல் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.






