என் மலர்
கார்
- மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் விட்டாரா மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.
- இந்த மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. இந்த மாடல் பெட்ரோல் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காரை வாங்க இதுவரை சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
புதிய கிராண்ட் விட்டாரா மாடல் மொத்தத்தில் ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் நான்கு வேரியண்ட்கள் ஸ்டாண்டர்டு பெட்ரோல், இரு வேரியண்ட் ஸ்டிராங் ஹைப்ரிட் வடிவில் இடம்பெற்றுள்ளன. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப் எண்ட் மாடலுடன் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது. இதன் ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் முன்புற டிரைவ் வசதியுடன் கிடைக்கிறது.

இதன் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் வேரியண்ட் 1.5 லிட்டர் K15 டூயல்ஜெட் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் எர்டிகா மற்றும் XL6 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் AC சின்க்ரோனஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த செட்டப் 114 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது.
- போக்ஸ்வேகன் கார்களின் விலை உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் போக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்கள் விலை 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் சந்தை பங்குகளை அதிகப்படுத்தியதில் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்கள் முக்கிய பங்காற்றி உள்ளன. எனினும், தற்போதைய விலை உயர்வு போக்ஸ்வேகன் வாகன விற்பனையை அதிகப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யுவி மற்றும் விர்டுஸ் செடான் மாடல்கள் அந்நிறுவனத்தின் இந்தியா 2.0 வியாபார யுக்தியின் அங்கமாக அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் MQB-AO IN பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செடான் பிரிவில் பெரிய மாடலாக விர்டுஸ் உருவாகி இருக்கிறது. இத்துடன் சிறப்பான வீல்பேஸ் கிடைத்துள்ளது.
டைகுன் மாடல் அளவீடுகளை பொருத்தவரை 4221 மில்லிமீட்டர் நீளம், 1760 மில்லிமீட்டர் அகலம், 1612 மில்லிமீட்டர் உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 மில்லிமீட்டர் ஆகும். அம்சங்களை பொருத்தவரை டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களில் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ஆட்டோ வைப்பர் மற்றும் ஏராளமான அம்சங்கள் உள்ளன.
- வால்வோ நிறுவனத்தின் XC40 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த எஸ்யுவி 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா பேஸ்லிப்ட் செய்யப்பட்ட XC40 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 43 லட்சம் 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் B4 அல்டிமேட் எனும் பெயரில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் ஆர் டிசைன் செய்யப்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் 5-ஸ்போக் சில்வர், அலாய் வீல்கள், பிளாக் ஸ்கிட் பிளேட்கள், ORVM-கள், ரூப் ரெயில்கள் மற்றும் இண்டகிரேடெட் பாக்ஸ் டெயில் பைப் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
- இரு கார் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் எம்ஜி ஆஸ்டர் மாடல் விலையை உயர்த்தியது. தற்போது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இம்முறை இரு கார்களின் விலை ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் டூயல் டோன் வேரியண்ட்கள் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர காரின் மற்ற வேரியண்ட்கள் விலை ரூ. 25 ஆயிரம் துவங்கி அதிகபட்சம் ரூ. 28 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

எம்ஜி ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் பெட்ரோல் என்ஜின் 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியுன் செய்யப்பட்டு உள்ளது. டீசல் என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், CVT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரையும் எம்ஜி மோட்டார் வெளியிட்டு உள்ளது.
- மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.
- இரு கார்களிலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை மட்டும் மாற்றப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி மஹிந்திரா பொலிரோ B4 மற்றும் B6 (O) வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 701 மற்றும் ரூ. 22 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று பொலிரோ நியோ N4, N10 மற்றும் N10(O) மாடல்கள் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 800, ரூ. 21 ஆயரத்து 007 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 501 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு தவிர இரு மாடல்களின் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் இரு கார்களிலும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ மட்டும் இடம்பெற்று உள்ளது. காரின் ஸ்டீரிங் வீல், முன்புற கிரில், வீல் ஹப் கேப்கள் மற்றும் டெயில் கேட் உள்ளிட்ட இடங்களில் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. பொலிரோ நியோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா பொலிரோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 ஹெச்பி பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய CNG காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் ஆகும்.
டொயோட்டா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் கிளான்சா மாடலின் CNG வேரியண்டை உருவாக்கி வருவகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா கிளான்சா மாடல் டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய கிளான்சா CNG மாடலில் 1.2 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 77 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் கிலான்சா ஸ்டாண்டர்டு மாடலில் இதே என்ஜின் 90 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. டொயோட்டா தனது கிளான்சா மாடல் லிட்ருக்கு 25 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. மேலும் இந்த வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

டொயோட்டா கிளான்சா CNG ஆப்ஷன் G, S மற்றும் V வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. டாப் எண்ட் மாடலான V வேரியண்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 9 இன்ச் தொடுதிரை வசதி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஆறு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
மற்ற CNG கார்களை போன்றே கிளான்சா CNG விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே இருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா கிளான்சா CNG விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 75 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆஸ்டர் மாடல் விலையை திடீரென மாற்றி இருக்கிறது.
- ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆஸ்டர் மிட்-சைஸ் எஸ்யுவி விலையை உயர்த்தி இருக்கிறது. புது மாற்றத்தின் படி எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விலை உயர்வு எம்ஜி ஆஸ்டர் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
விலை உயர்வின் படி எம்ஜி ஆஸ்டர் தற்போது ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 23 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

எம்ஜி ஆஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் 138 ஹெச்பி பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 108 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பரீடு மேனுவல் மற்றும் CVT யூனிட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக எம்ஜி ஆஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் மாடல் டூயல் டோன் வேரியண்ட் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- புதிய ஹைரைடர் மாடல் லிட்டருக்கு 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் நான்கு டாப் எண்ட் வேரியண்ட் விலை விவரங்களை சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தது.
அதன்படி 5 சீட்டர் S இ டிரைவ் 2WD ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம் என துவங்குகிறது. இதன் V AT 2WD நியோ டிரைவ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். ஹைரைடர் G இடிரைவ் 2WD ஹைப்ரிட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம், V இடிரைவ் 2WD ஹைப்ரிட் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், நிசான் கிக்ஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் 11 நிறங்களில் கிடைக்கிறது.
இந்த காரின் டூயல் டோன் வேரியண்ட்களின் ரூஃப் பிளாக் நிற பினிஷ் கொண்டிருக்கிறது. இதன் G இடிரைவ் 2WD ஹைப்ரிட் டூயல் டோன் விலை ரூ. 17 லட்சத்து 69 ஆயிரம் என்றும் V இடிரைவ் 2WD ஹைப்ரிட் விலை ரூ. 19 லட்சத்து 19 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இவை சிங்கில் டோன் மாடல்கள் விலையை விட ரூ. 20 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் கர்நாடகாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் இந்த கார் உற்பத்தை ஆலையில் இருந்து வெளியாக இருக்கிறது. இந்த கார் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுடன் பிளாட்பார்மை பகிர்ந்து கொண்டிருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது டியாகோ ev எலெக்ட்ரிக் கார் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் டாடா நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய டாடா டியாகோ ev மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. புதிய டாடா டியாகோ ev மாடல் டிகோர் ev மற்றும் நெக்சான் ev மாடல்களுடன் இணைய இருக்கிறது.
இந்த காரின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் மர்மமாக உள்ள நிலையில், இதன் பவர்டிரெயின் மட்டும் டிகோர் ev மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் வழங்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. எலெக்ட்ரிக் காருடனஎ் 15ஏ மற்றும் 25 கிலோவாட் சார்ஜர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முறையே 8.45 மணி நேரமும், 65 நிமிடங்களையும் எடுத்துக் கொள்கின்றன.
அம்சங்களை பொருத்தவரை டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் டிரைவர் சீட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள், பிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலை பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் வரிசையில் டியாகோ எலெக்ட்ரிக் மாடலும் விரைவில் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய வால்வோ கார் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பேஸ்லிப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் வரை அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.
புதிய XC40 மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட பிக்சல் ஹெட்லைட்கள், புதிய வீல் டிசைன் மற்றும் ரிவைஸ்டு பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பரில் பாக் லைட் சரவுண்ட்கள், ரியர் பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட ட்ரிம் எலிமண்ட் உள்ளது. இத்துடன் ஜோர்ட் புளூ, சேஜ் கிரீன், தண்டர் கிரே மற்றும் பிரைட் டஸ்க் என அதிக நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

காரின் டேஷ்போர்டு பகுதியில் மட்டும் புதிதாக மரத்தால் ஆன ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் போர்டிரெயிட் ஸ்டைல் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஒஎஸ், பானரோமிக் சன்ரூப், PM 2.5 கேபின் ஏர் பில்ட்ரேஷன் சிஸ்டம் மற்றும் 13 ஸ்பீக்கர்கள் கொண்ட டிராக் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட வால்வோ XC40 மாடலிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இது 13 பிஎஸ் பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் 197 பிஎஸ் பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் லிட்டருக்கு 15 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இந்த மாத சலுகைகள் ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இந்த சலுகைகள் நாடு முழுக்க பெரும்பாலான ஹூண்டாய் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.

அதன் படி ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த காரின் மற்ற வேரியண்ட்கள் மற்றும் ஆரா மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் i20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இவை தவிர ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, வெர்னா, கிரெட்டா, அல்கசார், கோனா, i20 N லைன் மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.
- இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- இந்த எலெக்ட்ரிக் கார் சிட்ரோயன் C3 மாடலை தழுவி எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவு கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து பல்வேறு புது மாடல்கள் அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில் சிட்ரோயன் C3 EV மாடல் புதிதாக இணைய இருக்கிறது. மேலும் சிட்ரோயன் C3 EV மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தான் சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் எஸ்யுவி சார்ந்த பி பிரிவு ஹேச்பேக் மாடலாக அறிமுகமானது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் பெரிய ஹேச்பேக் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்தியாவில் அனைவரும் வாங்கக்கூடிய எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா டியாகோ எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்த மாதமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சர்வதேச எலெக்ட்ரிக் வாகன தினத்தில் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் சிட்ரோயன் C3 மாடலும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யப்படுவது இந்திய சந்தையில் இரண்டாவது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலாக இருக்கும்.
செடான் மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹேச்பேக் கார்கள் அளவில் சிறியதாக இருப்பதால் இவற்றில் வழங்கப்படும் பேட்டரி அளவும் சிறியதாகவே இருக்கும். இதனால் இரு கார்களின் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக இந்த எலெக்ட்ரிக் கார்களின் விலையும் ஓரளவு குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.






