search icon
என் மலர்tooltip icon

    கார்

    எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் மற்றொரு காரின் சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புதிய சிஎன்ஜி கார் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 95 ஆயிரம் வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சிஎன்ஜி காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இம்முறை எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த கார் LXi மற்றும் VXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி விலை அதன் ஸ்டாடர்டு மாடல் விலை ரூ. 95 ஆயிரம் அதிகம் ஆகும். இந்தியாவில் மாருதி சுசுகி அறிமுகம் செய்து இருக்கும் பத்தாவது சிஎன்ஜி மாடலாக எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி அமைந்துள்ளது.

    இந்த மாடலில் 1.0 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 56 ஹெச்பி பவர், 82.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 32.73 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய சிஎன்ஜி காரில் சிஎன்ஜி டேன்க் மட்டுமின்றி எஸ் பிரெஸ்ஸோ மாடலின் சஸ்பென்ஷன் செட்டப் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ VXi சிஎன்ஜி மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    Next Story
    ×