என் மலர்

  கார்

  முதல் நாளில் 10 ஆயிரம் யூனிட்கள் - முன்பதிவில் அசத்திய டாடா டியாகோ EV
  X

  முதல் நாளில் 10 ஆயிரம் யூனிட்கள் - முன்பதிவில் அசத்திய டாடா டியாகோ EV

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ EV கார் இந்திய முன்பதிவு நேற்று துவங்கியது.
  • முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டதாக பலர் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர்.

  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் புதிய டியாகோ EV கார் விலை ரூ. 8 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

  இந்த விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ EV மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் நேற்று துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

  முன்பதிவின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், முதல் நாளில் புதிய டியாகோ EV காரை வாங்க 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.

  புதிய டாடா டியாகோ EV மாடல் நான்கு வேரியண்ட்கள், இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்ட மாடலை முதலில் வினியோகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டியாகோ EV மாடல் இந்த மாதம் துவங்கி முன்னணி நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

  டிசம்பர் 2022 வாக்கில் டியாகோ EV மாடலுக்கான டெஸ்ட் டிரைவ்கள் துவங்க உள்ளன. இந்த காரின் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா டியாகோ EV மாடல் 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார்கள் முறையே 60 ஹெச்பி பவர் மற்றும் 74 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

  இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர் வரை ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன. இவற்றுடன் 3.3 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ EV XZ+ மற்றும் XZ+ டெக் லக்ஸ் வேரியண்ட்களை வாங்குவோருக்கு 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.

  டாடா டியாகோ EV மாடல் டாடா டியாகோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் லெதரெட் இருக்கைகள், டிரை-ஆரோ பேட்டன், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், எலெக்ட்ரிக் போல்டபில் மிரர்கள், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

  Next Story
  ×