search icon
என் மலர்tooltip icon

    கார்

    விரைவில் அறிமுகமாகும் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி
    X

    விரைவில் அறிமுகமாகும் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐந்தாம் தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யுவி இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் இந்த எஸ்யுவி பாக்ஸ் வடிவ டிசைன், கூர்மையான கோடுகள், புதிய கிரில், 7 இன்ச் ஸ்லாட் பேட்டன், சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், மெல்லிய ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அப்டேட்களுடன் இந்த காரில் ஆப் ரோடிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் ஸ்கிரீன், யுகனெக்ட் யுஐ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

    சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 பெட்ரோல் என்ஜின், 5.7 லிட்டர் ஹெமி வி8 மற்றும் புதிய 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலின் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×