search icon
என் மலர்tooltip icon

    கார்

    நிசான் X டிரெயில் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    நிசான் X டிரெயில் இந்திய வெளியீட்டு விவரம்

    • நிசான் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X டெரியில் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது கார்கள் பற்றிய தகவல்களை நிசான் வெளியிட்டு உள்ளது.

    நிசான் இந்தியா நிறுவனம்- நிசான் ஜூக், நிசான் கஷ்கெய் மற்றும் நிசான் X டிரெயில் என மூன்று சர்வதேச மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது. இவற்றில் இரு மாடல்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என நிசான் அறிவித்து இருக்கிறது. இவை இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல்களாக இருக்குமா என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் எட்டு ஆண்டுகளுக்கு பின் ரி-எண்ட்ரி கொடுக்கும் நிசான் X டிரெயில் பல்வேறு விஷயங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய X டிரெயில் மாடல் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கிட முடியும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹைப்ரிட் வெர்ஷன் "இ-பவர்" என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இதில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் இயங்கும் போது, வீல்களில் இருந்து பேட்டரி சார்ஜ் செய்யப்படும். முன்புற வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

    இதன் முன்புற வீல் டிரைவ் மாடல் 201 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 210 ஹெச்பி பவர், 525 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடலில் வி மோஷன் முன்புற கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நிசான் X டிரெயில் மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் இருவித இருக்கை அமைப்புகளுடன் வெளியிடப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×