search icon
என் மலர்tooltip icon

    கார்

    விரைவில் அறிமுகம் - இன்னோவா ஹைகிராஸ் அசத்தல் டீசர் வெளியானது
    X

    விரைவில் அறிமுகம் - இன்னோவா ஹைகிராஸ் அசத்தல் டீசர் வெளியானது

    • டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • மேம்பட்ட புது எம்பிவி மாடல் முற்றிலும் புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் அசத்தலான வெளிப்புற ஸ்டைலிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் படி புது மாடலில் மேம்பட்ட புதிய ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் அசத்தல் ஸ்டைலிங் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    டீசரின் படி புதிய காரின் முன்புறம் அளவில் பெரிய கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை எல்இடி யூனிட்களாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் எலிஇடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகின்ன. இதன் பொனெட் உறுதியாக கிரீஸ் லைன்கள், முன்புற பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட பாக் லேம்ப் கேசிங் வழங்கப்படும் என தெரிகிறது.

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இன்னோவா ஹைகிராஸ் மாடலுடன் மோனோக் ஆர்கிடெக்ச்சர் மற்றும் முன்புற வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம். இத்துடன் 360 டிகிரி கேமரா, பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் புதிய இன்னோவா காரின் டெஸ்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Next Story
    ×