என் மலர்
கார்
- டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் ஸ்டாண்டர்டு 4x4 MT வேரியண்ட் விலை அதிரடியாக மாற்றப்பட்டது.
டொயோட்டா இந்தியா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் ஹை வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு MT வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஹை MT மற்றும் ஹை AT வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை மாற்றத்தின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிலக்ஸ் மாடலின் இரண்டாவது கட்ட யூனிட்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹிலக்ஸ் மாடல் இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இதில் டபுள் கேபின், மஸ்குலர் முன்புறம், க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹிலக்ஸ் மாடலில் ஃபார்ச்சூனரில் வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 210 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹிலக்ஸ் மாடல் 4-வீல் டிரைவ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
டொயோட்டா ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு 4x4 MT ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம்
டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 MT ரூ. 37 லட்சத்து 15 ஆயிரம்
டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 AT ரூ. 37 லட்சத்து 90 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- கியா நிறுவனத்தின் புதிய கரென்ஸ் மாடல் பிஎஸ்6 2 ரக என்ஜின்கள், iMT கியர்பாக்ஸ் கொண்டுள்ளன.
- புதிய மாடலில் 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் 2023 கியா கரென்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கியா கரென்ஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய என்ஜின்கள் பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய அப்டேட்களுக்கு ஏற்ப கரென்ஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. புதிய கியா கரென்ஸ் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் iMT மற்றும் 7 ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.
டீசல் என்ஜினுடன் iMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை கியா கரென்ஸ் மாடலில் 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் அலெக்சா கனெக்டிவிட்டி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் புது வேரியண்டை அறிமுகம் செய்தது.
- புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடல் மேனுவல் மற்றும் AMT என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யூடிவ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கிராண்ட் i10 நியோஸ் விலை ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்ட் மேனுவல் மற்றும் AMT என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 7 லட்சத்து 16 ஆயிரம் என்றும் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய வேரியண்ட் மேக்னா வேரியண்டின் மேல், ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
2023 ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஸ்போர்ட்ஸ் எக்சிக்யுடிவ் வேரியண்டில் எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், 15 இன்ச் டூயல் டோன் ஸ்டைல் கொண்ட வீல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ரியர் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஹேச்பேக் மாடல் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
- இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடல் இக்னிஸ் மர்றும் டாடா பன்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடலின் விலை இதுவரை மூன்று முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வுக்கு சிட்ரோயன் இதுவரை எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை சிட்ரோயன் C3 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் இரண்டு 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முதல் என்ஜின் 83 ஹெச்பி பவர், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இதன் இரண்டாவது என்ஜின் 110ஹெச்பி பவர், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த காரில் இதுவரை ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய விலை விவரங்கள்:
சிட்ரோயன் C3 1.2 லிட்டர் பெட்ரோல் லைவ் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரம்
சிட்ரோயன் C3 1.2 லிட்டர் பெட்ரோல் ஃபீல் ரூ. 7 லட்சத்து 08 ஆயிரம்
சிட்ரோயன் C3 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஃபீல் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களின் மேனுவல் வெர்ஷன்களுக்கு போட்டியாக அமைகிறது. விலையை பொருத்தவரை சிட்ரோயன் C3 பேஸ் வேரியண்ட் விலை பன்ச் மற்றும் மேக்னைட் மாடல்களை விட ரூ. 16 ஆயிரம் அதிகம் ஆகும்.
- இந்தியாவில் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு தொடரந்து அதிகரித்து வருகிறது.
- ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா 2023 மாடலை மார்ச் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கிரெட்டா, வென்யூ, வெர்னா, கிராண்ட் i10 நியோஸ், i20 மற்றும் ஆரா போன்ற மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இந்த மாதம் ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் கிரெட்டா, வென்யூ, அல்கசார் அல்லது டக்சன் போன்ற மாடல்களை வாங்கும் பட்சத்தில் எவ்வித சலுகைகளும் தற்போது வழங்கப்படவில்லை. இந்தியாவில் எஸ்யுவி மாடல்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இவற்றின் காத்திருப்பு காலம் அதிகரிப்பதால், இவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை.

எனினும், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் அல்லது i20 மாடல்களை வாங்கும் பட்சத்தில் அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 38 ஆயிரம் வரையிலான சலுகைகளும், i20 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் ஆரா மாடலுக்கு ரூ. 33 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா 2023 மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. புதிய மிட் சைஸ் எஸ்யுவி மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2023 ஹூண்டாய் வெர்னா மாடல் ஹோண்டா சிட்டி 2023, ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் சுசுகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்படுகிறது.
- பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு எஸ்யுவி மாடல்களின் புதிய விலை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு எஸ்யுவி-க்கள் புதிய RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதால் இவற்றின் விலை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தப்படுகிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 31 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. பொலிரோ நியோ மாடலின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்கிறது.
புதிய விலை விவரங்கள்:
பொலிரோ நியோ ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்தில் துவங்கி ரூ. 12 லட்சத்து 14 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 79 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொலிரோ நியோ மாடலின் N10 லிமிடெட் எடிஷன் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொலிரோ B4 வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதன் டாப் எண்ட் B6 (O) விலை ரூ. 31 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ B6 விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 10 லட்சம் என்றே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 100 பிஎஸ் பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பொலிரோ மாடலில் 75பிஎஸ் பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு எஸ்யுவி-க்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
- எம்ஜி நிறுவனத்தின் புதிய கோமெட் EV மாடல் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.
- இந்திய சந்தையில் புதிய கோமெட் EV எம்ஜி நிறுவனத்தின் இரண்டவாது எலெக்ட்ரிக் கார் ஆக வெளியாகிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கோமெட் EV சிறிய மாடலை ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் காருக்கான டீசர்களுடன் அதன் விவரங்களும் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.
இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டவாது எலெக்ட்ரிக் கார் கோமெட் EV மாடலில் பெரிய எல்இடி லைட் பார் காரின் முன்புறம் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் சார்ஜிங் போர்ட் மூடியின் மேல் எம்ஜி மோட்டார் லோகோ இமட்பெற்று இருக்கிறது.
மேலும் டூயல் டோன் முன்புற பம்ப்பர், அகலமான ஏர் டேம், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிடைமட்டமாக இண்டிகேட்டர்கள், க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

நிறங்களை பொருத்தவரை புதிய எம்ஜி கோமெட் EV மாடல்: வைட், புளூ, கிரீன், எல்லோ மற்றும் பின்க் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும். அம்சங்கள் மற்றும் விலை அடிப்படையில் புதிய எம்ஜி கோமெட் EV மாடல் ZS EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. எம்ஜி கோமெட் EV தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் செண்டர் கன்சோலில் மெல்லிய ஏசி வெண்ட்கள், ஏசி கண்ட்ரோல்-க்கு சுழலும் நாப்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.
எம்ஜி கோமெட் EV பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த எலெக்ட்ரிக் காரில் 17.3 கிலோவாட் ஹவர் மற்றும் 26.7 கிலோவாட் ஹவர் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. இவை முறையே 200 மற்றும் 300 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டிருக்கும்.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி எம்ஜி கோமெட் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி கோமெட் EV மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அல்கசார் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய வேரியண்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய அல்கசார் மாடலின் டர்போ பெட்ரோல் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதே என்ஜின் அல்கசார் மாடலின் நான்கு வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. புதிய அல்கசார் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பழைய 2.0 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ற வகையில் E20 எரிபொருளில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே என்ஜின் புதிய வெர்னா மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட உள்ளது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது.
அல்கசார் மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் ஐடில் ஸ்டார்ட் / ஸ்டாப் தொழில்நுட்பத்தை ஸ்டாண்டர்டு அம்சமாக கொண்டுள்ளன. இத்துடன் இந்த காரில் புதிய முன்புற கிரில், ரிவைஸ்டு லேம்ப் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெல்ஃபயர் மாடலை சிபியு வகையில் விற்பனை செய்கிறது.
- டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெல்ஃபயர் மாடல் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. இந்திய சந்தையில் சிபியு மாடலாக விற்பனை செய்யப்படும் வெல்ஃபயர் எம்பிவி மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா வெல்ஃபயர் ஒற்றை, ஃபுல்லி லோடட் ஹைப்ரிட் வேரியண்ட் வடிவில் விற்பனை செய்யப்டுகிறது.
விலை உயர்வின் படி டொயோட்டா வெல்ஃபயர் விலை தற்போது ரூ. 96 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2020 பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா வெல்ஃபயர் 7 சீட்டர் எம்பிவி வடிவில் கிடைக்கிறது. இதுவரை வெல்ஃபயர் மாடலின் விலை ரூ. 17 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஸ்லைடிங் ரியர் கதவுகளை கொண்ட டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் ரிக்லைனிங், ஹீடிங் மற்றும் கூலிங் வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 16 நிற ரூஃப் லைட்கள், டுவின் சன்ரூஃப், ஹீடெட் ஸ்டீரிங் வீல், ரியர் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா வெல்ஃபயர் மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் என்ஜின் 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. முன்புறம் மற்றும் ஆக்சிலில் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 140 ஹெச்பி மற்றும் 67 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன.
- மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 காரை பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது.
- புதிய XUV300 மாடலின் பெட்ரோல் பேஸ் வேரியண்ட் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV300 மாடலை புதிய என்ஜின்களுடன் அப்டேட் செய்தது. அந்த வகையில், XUV300 மாடல் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. என்ஜின் அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து மஹிந்திரா நிறுவனம் XUV300 பிஎஸ்6 2 விலையை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகரித்து இருக்கிறது.
அதன்படி மஹிந்திரா XUV300 பிஎஸ்6 2 விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மஹிந்திரா XUV300 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டீசல் என்ஜின் 115 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் தற்போது பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில் ஏப்ரல் 1, 2023 முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வருகின்றன.
இந்திய சந்தையில் XUV300 அப்டேட் செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அதன் விலைகளும் மாறி இருக்கின்றன. மஹிந்கிரா XUV300 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் W4 மற்றும் W6 வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றின் விலை முறையே ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
மஹிந்திரா XUV300 பெட்ரோல் AMT வேரியண்ட் W6 விலை தற்போது ரூ. 20 ஆயிரம் அதிகரித்து ரூ. 10 லட்சத்து 71 ஆயிரம் என மாறி இருக்கிறது. பெட்ரோல் என்ஜின் கொண்ட மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. டீசல் என்ஜின் கொண்ட W4, W6 மற்றும் W8 வேரியண்ட்களின் விலை ரூ. 20 ஆயிரம் உயர்ந்துள்ளது. W8(O) விலை ரூ. 22 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோமெட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் பெயர் விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் கோமெட் என அழைக்கப்பட இருக்கிறது. மேலும் புதிய எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் டிசைன் மற்றும் நிற ஆப்ஷன்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டிசைனை பொருத்தவரை எம்ஜி கோமெட் மாடலில் பெரிய எல்இடி லைட் பார் காரின் முன்புறம் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் சார்ஜிங் போர்ட் மூடியின் மேல் எம்ஜி மோட்டார் லோகோ இமட்பெற்று இருக்கிறது. மேலும் டூயல் டோன் முன்புற பம்ப்பர், அகலமான ஏர் டேம், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிடைமட்டமாக இண்டிகேட்டர்கள், க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

2023 எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில் பிளாக்டு-அவுட் பில்லர்கள், ரூஃப் மற்றும் ORVMகள், பெரிய ரியர் குவாட்டர் கிளாஸ் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ரியர் டிசைன் எப்படி இருக்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த காரில் எல்இடி டெயில் லைட்கள், எல்இடி லைட் பார், ரிஃப்ளெக்டர்கள் கொண்ட ரியர் பம்ப்பர் மற்றும் நம்பர் பிளேட் ஹோல்டர் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் மாடல் எம்ஜி ZS EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த கார் வைட், புளூ, கிரீன், எல்லோ மற்றும் பின்க் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய எம்ஜி கோமெட் மாடல் சிட்ரோஎன் eC3 மற்றும் டாடா டியாகோ EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் காரின் பின்புறம் புதிய டிசைன் கொண்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்தாம் தலைமறை சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி, அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 39 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறு காஸ்மடிக் மாற்றங்கள், அதிக உபகரணங்கள், எண்ட்ரி லெவல் வேரியண்ட்கள் மற்றும் புதிய நிற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா சிட்டி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். ஆஃப்லைனில் முன்பதிவு செய்யும் போது ரூ. 21 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் முழுமையாக சிறிதளவு காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர்கள் டுவீக் செய்யப்பட்டு, கிரில் மெல்லியதாகவும் க்ரோம் பார் வழங்கப்பட்டு இருக்கிறது. கிரில் டிசைன் மேம்படுத்தப்பட்டு, டாப் வேரியண்ட்களில் ஹனிகொம்ப் பேட்டன், பேஸ் வேரியண்ட்களில் செங்குத்தாக ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய எண்ட்ரி லெவல் வேரியண்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய SV வேரியண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் தற்போது- SV, V, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. SV வேரியண்ட் தவிர மற்ற வேரியண்ட்களில் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

உபகரணங்களை பொருத்தவரை சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ADAS அம்சங்களான- அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோனோமஸ் பிரேகிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த அம்சங்கள் சிட்டி ஹைப்ரிட் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெட்ரோல் மாடல்களிலும் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டாப் எண்ட் மாடல்களில் ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 121 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் அட்கின்சன் சைக்கிள் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹைப்ரிட் என்ஜினுடன் eCVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த பிரிவு மாடல்களில் ஸ்டிராங் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட ஒற்றை கார் மாடலாக புதிய ஹோண்டா சிட்டி உள்ளது. புதிய காரில் உள்ள பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின்கள் RDE மற்றும் E20 விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய வெர்னா மாடலை மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.






