search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் கார் விலையை திடீரென உயர்த்திய சிட்ரோயன்
    X

    இந்தியாவில் கார் விலையை திடீரென உயர்த்திய சிட்ரோயன்

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய C3 ஹேச்பேக் மாடல் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடல் இக்னிஸ் மர்றும் டாடா பன்ச் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடலின் விலை இதுவரை மூன்று முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை உயர்வுக்கு சிட்ரோயன் இதுவரை எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை சிட்ரோயன் C3 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் இரண்டு 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முதல் என்ஜின் 83 ஹெச்பி பவர், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இதன் இரண்டாவது என்ஜின் 110ஹெச்பி பவர், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த காரில் இதுவரை ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    சிட்ரோயன் C3 1.2 லிட்டர் பெட்ரோல் லைவ் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரம்

    சிட்ரோயன் C3 1.2 லிட்டர் பெட்ரோல் ஃபீல் ரூ. 7 லட்சத்து 08 ஆயிரம்

    சிட்ரோயன் C3 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஃபீல் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் C3 மாடல் மாருதி இக்னிஸ், டாடா பன்ச், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களின் மேனுவல் வெர்ஷன்களுக்கு போட்டியாக அமைகிறது. விலையை பொருத்தவரை சிட்ரோயன் C3 பேஸ் வேரியண்ட் விலை பன்ச் மற்றும் மேக்னைட் மாடல்களை விட ரூ. 16 ஆயிரம் அதிகம் ஆகும்.

    Next Story
    ×