search icon
என் மலர்tooltip icon

    கார்

    ஏப்ரலில் இந்தியா வரும் எம்ஜி கோமெட் EV
    X

    ஏப்ரலில் இந்தியா வரும் எம்ஜி கோமெட் EV

    • எம்ஜி நிறுவனத்தின் புதிய கோமெட் EV மாடல் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.
    • இந்திய சந்தையில் புதிய கோமெட் EV எம்ஜி நிறுவனத்தின் இரண்டவாது எலெக்ட்ரிக் கார் ஆக வெளியாகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கோமெட் EV சிறிய மாடலை ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் காருக்கான டீசர்களுடன் அதன் விவரங்களும் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

    இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டவாது எலெக்ட்ரிக் கார் கோமெட் EV மாடலில் பெரிய எல்இடி லைட் பார் காரின் முன்புறம் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் சார்ஜிங் போர்ட் மூடியின் மேல் எம்ஜி மோட்டார் லோகோ இமட்பெற்று இருக்கிறது.

    மேலும் டூயல் டோன் முன்புற பம்ப்பர், அகலமான ஏர் டேம், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிடைமட்டமாக இண்டிகேட்டர்கள், க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    நிறங்களை பொருத்தவரை புதிய எம்ஜி கோமெட் EV மாடல்: வைட், புளூ, கிரீன், எல்லோ மற்றும் பின்க் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும். அம்சங்கள் மற்றும் விலை அடிப்படையில் புதிய எம்ஜி கோமெட் EV மாடல் ZS EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. எம்ஜி கோமெட் EV தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் செண்டர் கன்சோலில் மெல்லிய ஏசி வெண்ட்கள், ஏசி கண்ட்ரோல்-க்கு சுழலும் நாப்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

    எம்ஜி கோமெட் EV பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இந்த எலெக்ட்ரிக் காரில் 17.3 கிலோவாட் ஹவர் மற்றும் 26.7 கிலோவாட் ஹவர் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. இவை முறையே 200 மற்றும் 300 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டிருக்கும்.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி எம்ஜி கோமெட் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி கோமெட் EV மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    Next Story
    ×