search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவுக்கான சிறிய எலெக்ட்ரிக் கார் - எம்ஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்
    X

    இந்தியாவுக்கான சிறிய எலெக்ட்ரிக் கார் - எம்ஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோமெட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் பெயர் விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் கோமெட் என அழைக்கப்பட இருக்கிறது. மேலும் புதிய எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரின் டிசைன் மற்றும் நிற ஆப்ஷன்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    டிசைனை பொருத்தவரை எம்ஜி கோமெட் மாடலில் பெரிய எல்இடி லைட் பார் காரின் முன்புறம் முழுக்க இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் சார்ஜிங் போர்ட் மூடியின் மேல் எம்ஜி மோட்டார் லோகோ இமட்பெற்று இருக்கிறது. மேலும் டூயல் டோன் முன்புற பம்ப்பர், அகலமான ஏர் டேம், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிடைமட்டமாக இண்டிகேட்டர்கள், க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 எம்ஜி கோமெட் எலெக்ட்ரிக் காரில் பிளாக்டு-அவுட் பில்லர்கள், ரூஃப் மற்றும் ORVMகள், பெரிய ரியர் குவாட்டர் கிளாஸ் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ரியர் டிசைன் எப்படி இருக்கும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த காரில் எல்இடி டெயில் லைட்கள், எல்இடி லைட் பார், ரிஃப்ளெக்டர்கள் கொண்ட ரியர் பம்ப்பர் மற்றும் நம்பர் பிளேட் ஹோல்டர் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் மாடல் எம்ஜி ZS EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த கார் வைட், புளூ, கிரீன், எல்லோ மற்றும் பின்க் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய எம்ஜி கோமெட் மாடல் சிட்ரோஎன் eC3 மற்றும் டாடா டியாகோ EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×