என் மலர்
கார்
- ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விரைவில் களமிறங்க இருக்கிறது.
- இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டிவிடும்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக என்யாக் iV காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்த நிதியாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சந்தையில் எதுபோன்ற வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் என்யாக் iV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து எதிர்கால எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டமிடலில் ஸ்கோடா இறங்க இருக்கிறது.
ஹூண்டாய், கியா, டாடா மற்றும் மஹிந்திரா போன்ற பிராண்டுகள் இந்திய சந்தையில் குறைந்த பட்சம் ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனை செய்து வருகின்றன. அந்த வரிசையில், ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விரைவில் களமிறங்க இருக்கிறது.

"நாங்கள் என்யாக் மாடலில் இருந்து துவங்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த நிதியாண்டில் என்யாக் மாடலை அறிமுகம் செய்து சந்தையை ஆய்வு செய்ய விரும்புகிறோம். சந்தையில் சாதகமான வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், அதிக எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி முடிவு எடுப்போம்," என்று ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் பீட்டர் சால்க் தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா என்யாக் iV மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஃபோக்ஸ்வேகன் ID 4 மற்றும் ஆடி Q4 இ டிரான் போன்ற கிராஸ்ஓவர் மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய என்யாக் iV மாடல் கோடியக் காரை விட சற்றே சிறிய கார் ஆகும். ஆனாலும் இது இரண்டடுக்கு இருக்கைகள் கொண்ட ஐந்து பேர் பயணிக்கக்கூடிய கார் ஆகும்.
புதிய ஸ்கோடா என்யாக் iV மாடலில் 77 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 125 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் 265 ஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் எட்டிவிடும். WLTP சான்றின் படி, முழு சார்ஜ் செய்தால் என்யாக் iV மாடல் 513 கிலோமீட்டர்கள் வரையிலான செயல்திறன் கொண்டிருக்கிறது.
- முந்தைய திட்டப்படி இந்த காரின் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருந்தது.
- மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜிம்னி மாடலின் விலை விவரங்கள் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடலின் சர்வதேச அறிமுகம் நடைபெற்றது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஜிம்னி மாடலின் விற்பனை நெக்சா விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.
முந்தைய திட்டப்படி இந்த காரின் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருந்தது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி முற்றிலும் புதிய ஜிம்னி மாடல் வெளியீடு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. புதிய ஜிம்னி மாடலை வாங்க இதுவரை 24 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போதைய தகவல்களின் படி இந்த காரின் மேனுவல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் ஆறு மாதங்களாகவும், ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் எட்டு மாதங்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முற்றிலும் புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடல் புளூயிஷ் பிளாக், கைனடிக் எல்லோ மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் என்று மூன்று நிறங்களில் கிடைக்கும்.
மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆஃப் ரோடர் என்பதால் இந்த காரில் 4WD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் HTX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனத்தின் சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய எடிஷன் மாடல் HTX வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய சொனெட் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆரோக்ஸ் எடிஷன் மாடல் HTX மற்றும் HTX+ வேரியண்ட்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

முந்தைய ஆனிவர்சரி எடிஷனை போன்றே புதிய ஆரோக்ஸ் எடிஷனிலும் பிரமாண்ட ஸ்கிட் பிலேட்கள், முன்புற பம்ப்பர், கிரில், டோர் சில்கள், ரியர் ஸ்கிட் பிலேட் மற்றும் செண்டர் வீல் கேப்களில் டேஞ்சரைன் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கிரில் பகுதியிலும் ஆரோக்ஸ் பேட்ஜிங் டேஞ்சரைன் அக்செண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் - கிராவிட்டி கிரே, அரோரா பிளாக் பியல், ஸ்பார்க்லிங் சில்வர் மற்றும் கிலேசியர் வைட் பியல் என்று நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. HTX வேரியண்டில் உருவாக்கப்பட்டு இருப்பதால், சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மாடலில் 8.0 இன்ச் டச் ஸ்கிரின், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், சிங்கில் பான் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பிற்கு நான்கு ஏர்பேக், சீட்பெல்ட் ரிமைண்டர்கள், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடலில் 120 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 116 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு iMT, பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் கியா சொனெட் ஆரோக்ஸ் எடிஷன் மாடல் ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, மாருதி சுசுகி Fronx, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- எக்ஸ்டர் மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குளோபல் டிசைன் மொழியில் ஸ்டைலிங் செய்யப்படுகிறது.
- ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், எல்இடி லைட்டிங் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் எக்ஸ்டர் மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் EX, S, SX, SX (O) மற்றும் SX (O) கனெக்ட் என்று ஐந்து வித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய எக்ஸ்டர் மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குளோபல் டிசைன் மொழியில் ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது. ஐயோனிக் 5 மற்றும் வெர்னா மாடல்களும் இதே டிசைனிங்கில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. தோற்றத்தில் இந்த கார் எஸ்யுவி போன்ற ஸ்லைடிங், கூர்மையான மஸ்குலர் லைன், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலின் பின்புறம் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவில்லை. எனினும், ஏற்கனவே வெளியான புகைப்படங்களின் படி புதிய எக்ஸ்டர் மாடலில் கனெக்டெட் டெயில் லேம்ப்கள், எல்இடி லைட்டிங், ஃபுளோடிங் ஸ்டைல் ரூட் டிசைன், மஸ்குலர் ஹேச் மற்றும் பிரமாண்ட ரியர் பம்ப்பர் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
புதிய எக்ஸ்டர் மாடலில் E20 ரக எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஆப்ஷனல் ஸ்மார்ட் ஆட்டோ ஆட்டோமேடட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் பை-ஃபியூவல் கப்பா பெட்ரோல் + CNC என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொமெட் EV மாடல் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
- எம்ஜி கொமெட் EV வெளிப்புறத்தில் இலுமினேட் செய்யப்பட்ட எம்ஜி லோகோ உள்ளது.
எம்ஜி கொமெட் சிறிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. புதிய கொமெட் EV மாடலின் விலை அறிமுக சலுகையாக முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் என்று துவங்குகிறது. இந்த மாடலுக்கான டெஸ்ட் டிரைவ் கடந்த மாதம் துவங்கிய நிலையில், முன்பதிவு மே 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
வினியோகம் மே 22 ஆம் தேதி துவங்குகிறது. புதிய எம்ஜி கொமெட் EV மாடல் பேஸ், பிளே மற்றும் பிளஷ் என்று மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. எம்ஜி கொமெட் EV மாடல் கேண்டி வைட், அரோரா சில்வர், ஸ்டேரி பிளாக், கேண்டி வைட் மற்றும் ஸ்டாரி பிளாக் ரூப், ஆப்பிள் கிரீன் மற்றும் ஸ்டாரி பிளாக் ரூஃப் என்று ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

புதிய எம்ஜி கொமெட் EV வெளிப்புறத்தில் இலுமினேட் செய்யப்பட்ட எம்ஜி லோகோ உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புறம் மற்றும் பின்புறத்தில் எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், 12 இன்ச் ஸ்டீல் வீல் மற்றும் வீல் கவர்கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் ஸ்பேஸ் கிரே இண்டீரியர் தீம், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங், பவர் விண்டோ, லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் உள்ளன.
புதிய எம்ஜி கொமெட் EV மாடலில் உள்ள 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- டர்போ பெட்ரோல் ஆப்ஷனில் புதிதாக ஷைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- டர்போ வேரியண்ட் லிட்டருக்கு 19.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் ஹேச்பேக் C3 மாடலின் டர்போ வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய டர்போ வேரியண்ட் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு லிட்டருக்கு 19.3 கிலோமீட்டர் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்றுள்ளது.
புதிய சிட்ரோயன் C3 டர்போ வேரியண்ட்களின் விலை ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. டர்போ பெட்ரோல் ஆப்ஷனில் புதிதாக ஷைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களான ESP, ஹில் ஹோல்டு, என்ஜின் ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் மற்றும் TPMS உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், ரியர் பார்கிங் கேமரா, மேனுவல் டே/நைட் IRVM, மை சிட்ரோயன் கனெக்ட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. வெளிப்புறம் புதிய காரில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், முன்புறம் ஃபாக் லேம்ப்கள், ரியர் ஸ்கிட் பிலேட்கள், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய C3 மாடலில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 விலை விவரங்கள்:
சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஃபீல் டூயல் டோன் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம்
சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஃபீல் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம்
சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஷைன் டூயல் டோன் ரூ. 8 லட்சத்து 80 ஆயிரம்
சிட்ரோயன் C3 டர்போ பிஎஸ்6 2 ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 8 லட்சத்து 92 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- புதிய கார் எஸ்யுவி மாடலில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும்.
- முன்னதாக விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட தனது முதல் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை ஜூன் 6 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சி மூலம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் ஹோண்டா எலிவேட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்றும் இது முதற்கட்டமாக இந்தியாவில் வெளியாகி அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய கார் எஸ்யுவி மாடலில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஸ்பை படங்களில் இந்த கார் முகப்பு பகுதி பிரமாண்டமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக தாய்லாந்தில் விற்பனையாளர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.
அதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஹோண்டா எஸ்யுவி அனைவரையும் திரும்பி பார்க்க செய்வதோடு, ஹோண்டாவுக்கு சாதகமான பலன்களை பெற்றுக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். சற்றே தடிமனான கிளாடிங், மஸ்குலர் வீல் ஆர்ச்கள், அதிகளவு க்ரோம் அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் அழகிய எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
பின்புறம் டெயில் லைட்கள் புதிய ஹோண்டா வாகனங்களில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. அசத்தலான மிட்-சைஸ் மாடலை அறிமுகம் செய்வதில் ஹோண்டா மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. கிரெட்டா, செல்டோஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, ஹைரைடர், டைகுன், குஷக் போன்ற மாடல்களை போட்டியில் எதிர்கொள்ளும் வகையில் இந்த எஸ்யுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதே என்ஜின் சமீபத்திய ஹோண்டா சிட்டி மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த காரில் டீசல் யூனிட் வழங்கப்படாது என்றே தெரிகிறது.
- சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
- மூன்றாம் அடுக்கு இருக்கைகளை இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம்.
சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி C3 ஏர்கிராஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கார் மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. இந்த கார் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
C3 ஏர்கிராஸ் மாடல் C3 ஹேச்பேக் மாடலை விட நீளமாக இருக்கிறது. இந்த காரின் நீளம் 4.3 மீட்டர்கள் ஆகும். தோற்றத்தில் இந்த காரின் முகம் ஒரே மாதிரியே காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப்கள், கவர்ச்சிகரமான மோனோடோன் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

இந்த காரின் முன்புற கிரில் 2 ஸ்லாட் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர் பாடி நிறத்தால் ஆன பாகங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிளாக் கிலாடிங் உள்ளது. இத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட்கள் வழங்கப்படுகின்றன. பக்கவாட்டில் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.
டெயில்கேட் பகுதியில் C3 ஏர்கிராஸ் பேட்ஜ் மற்றும் ரியர் பம்ப்பரின் கீழ்புறத்தில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. C3 ஏர்கிராஸ் மாடலின் மிகமுக்கிய அம்சம் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் ஆகும். இவற்றை அதிக இடவசதி தேவைப்படும் போது கழற்றி வைத்துக் கொள்ளலாம். சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடல் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சீட், மேனுவல் ஏசி, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிது.
- ஸ்கோடா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது.
- முற்றிலும் புதிய தலைமுறை கோடியக் மாடல் டீசரை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன துறையில் முழுமையாக களமிறங்குவது வாகன உற்பத்தியாளர்களுக்கு சற்றே சவாலான காரியம் ஆகும். இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் படிப்படியாக களமிறங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த இலக்கை அடையும் நோக்கில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எதிர்கால திட்டம் தீட்டி ஒவ்வொரு கால இடைவெளிக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கின்றன.
அந்த வரிசையில் ஸ்கோடா நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் பல்வேறு பாடி ஸ்டைல்களில், வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற உள்ளன.

முற்றிலும் புதிய காம்பேக்ட் எஸ்யுவி துவங்கி சிறிய எலெக்ட்ரிக் வாகனம் என பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் தனது எதிர்கால ஐசி என்ஜின் மாடல்கள் பற்றியும் தகவல் தெரிவித்து இருக்கிறது.
என்யாக் குடும்ப மாடல் வரிசையில், அனைத்து எலெக்ட்ரிக் மாடல்களும் 4.1 மீட்டர் நீளமும், சிறிய மாடல்கள், 4.5 மீட்டர் நீளம் கொண்ட காம்பேக்ட் மாடல், 4.7 மீட்டரில் காம்பி எஸ்டேட் அல்லது 7 சீட்டர் ஸ்பேஸ் எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட இருக்கிறது. காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எல்ராக் என்று அழைக்கப்பட உள்ளது.

எல்ராக் மாடல் கரோக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். இந்த மாடல் 2024 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. என்யாக் சீரிசில் என்யாக் ஐவி கூப் மாடல் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்டேட் மாடல் மற்றும் 7 சீட்டர் ஸ்பேஸ் எலெக்ட்ரிக் மாடல் விஷன் 7எஸ் கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்படுகிறது. இந்த மாடல் 2026 ஆண்டு அறிமுகமாகிறது.
இந்த மாடல்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் முற்றிலும் புதிய சூப்பர்ப் மற்றும் கோடியக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கோடியக் மாடலின் டீசரையும் ஸ்கோடா வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இத்துடன் மேம்பட்ட ஆக்டேவியா மாடலும் இணைய இருக்கிறது. இதற்கு முன்பாக ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது.
- வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மாடல் 2023 நிதியாண்டில் மட்டும் விற்பனையில் 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2000-ம் ஆவது ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ மாடல் இதுவரை விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
2021 மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது. இந்தியாவில் விற்பனையான டாப் 30 யுடிலிட்டி வாகனங்கள் பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் மொத்தத்தில் 1 லட்சத்து 577 யூனிட்கள் விற்பனையாகி ஏழாவது இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் இணைந்து மாதம் 8 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் பொலிரோ மாடல் B4, B6, மற்றும் B6 (O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 9 லட்சத்து 92 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 03 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதன் மூலம் பொலிரோ மாடல் எஸ்யுவி என்பதை கடந்து, இந்தியாவின் ஊரக மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் மிகவும் பிரபலமான பெயராகவும் மாறி இருக்கிறது. 2023 நிதியாண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் விற்பனை எங்களது வாடிக்கையாளர்களின் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது," என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைவர் வீஜே நக்ரா தெரிவித்துள்ளார்.
- ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மாடலை காட்சிக்கு வைத்தது.
- மாருதி Fronx மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Fronx மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாருதி சுசுகி Fronx விலை ரூ. 7 லட்சத்து 47 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 14 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்த ஆண்டு ஜவனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx கூப் கிராஸ்ஒவர் மாடலை காட்சிக்கு வைத்தது. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய Fronx மாடல் துவக்க விலை பலேனோ மாடலை விட ரூ. 86 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

புதிய மாருதி சுசுகி Fronx மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், காண்டிராஸ்ட் நிற ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், 360 டிகிரி கேமரா, HUD, 9 இன்ச் அளவில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், யுவி கிளாஸ் கட்-அவுட், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.
மாருதி Fronx மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 147 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 22.89 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2022 டைகுன் மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பிஎஸ்6 2 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவன விற்பனையாளர்கள் டைகுன் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரமும், விர்டுஸ் செடான் மாடலுக்கு அதிகபட்சம் 1 லட்சத்து 03 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்குகின்றனர். இந்த சலுகைகள் 2022 மற்றும் 2023 மாடல் கார்கள் மற்றும் பிஎஸ்6 2 புகை விதகளுக்கு உட்பட்ட மாடல்களுக்கு பொருந்தும்.
2022 டைகுன் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 65 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. டைகுன் டாப்லைன் மேனுவல் வேரியண்டிற்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டைகுன் கம்ஃபர்ட்லைன் மேனுவல் வேரியண்டிற்கு குறைந்தபட்ச சலுகை வழங்கப்படுகிறது.

2023 டைகுன் மாடலுக்கு ரூ. 91 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் டைகுன் டாப்லைன் ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோன்று 2023 டைகுன் பிஎஸ்6 2 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டைகுன் மாடலை போன்றே விர்டுஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2022 விர்டுஸ் GT பிளஸ் ஆட்டோமேடிக் வேரியண்டுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2023 விர்டுஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி ரூ. 65 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.






