என் மலர்

    கார்

    ரூ. 77.50 லட்சம் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQB இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 77.50 லட்சம் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQB இந்தியாவில் அறிமுகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெர்சிடிஸ் EQB 300 4மேடிக் மாடலுக்கு மாற்றாக புதிய EQB 350 4மேடிக் மாடல் அறிமுகம்.
    • மெர்சிடிஸ் EQB 350 4மேடிக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் EQB 350 4மேடிக் மாடலை அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இதே EQB காரின் 300 4மேடிக் மாடல் இந்தியாவில் ரூ. 74 லட்சத்து 50 ஆயிரம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட EQB 300 4மேடிக் மாடலுக்கு மாற்றாக புதிய EQB 350 4மேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்கள் 288 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. 300 4மேடிக் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய 350 4மேடிக் மாடல் 130 நியூட்டன் மீட்டர் டார்க் அளவுக்கு அதிக இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மெர்சிடிஸ் EQB 350 4மேடிக் மாடல் மணிக்கு அதிகபட்சம் 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்கிறது.

    இதில் உள்ள பேட்டரியை 100 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் 10-ல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 32 நிமிடங்களே ஆகும். இதனுடன் வழங்கப்படும் 11 கிலோவாட் வால் பாக்ஸ் சார்ஜர் காரை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி 25 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 423 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இந்த காரில் MBUX டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 64 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், பவர்டு முன்புற இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லைட்கள், 18-இன்ச் டுவின் ஸ்போக் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×