என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் செப்டம்பர் முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. விரைவில் வெளியிடப்பட இருக்கும் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெக்சா விநியோகஸ்தர்களிடம் முன்பதிவு செய்யப்பட இருக்கும் எஸ்-கிராஸ் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-கிராஸ் முதல் பதிப்பு அதிகம் விற்பனையாகாத நிலையில், விலை குறைக்கப்பட்ட எஸ்-கிராஸ் இம்முறை அதிகம் மேம்படுத்தப்பட்டு இருப்பதால் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வடிவமைப்பில் எஸ்-கிராஸ் முன்பக்கம் பார்க்க அழகாகவும், பெரிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் தோற்றத்தை வித்தியாசமாக்கியுள்ளன. இத்துன் முன்பக்க கிரில் சற்று அகலமாகவும், குரோம் ஃபினிஷ் மற்றும் பம்ப்பர்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பக்கவாட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில், பின்புற டெயில் லைட்கள் எல்இடி கொண்டு வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படுகிறது. 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு 89HP செய்ல்திறனை 4,000 rpm மற்றும் 200 Nm டார்கியூ 1,750 rpm செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இத்துடன் 1.6 லிட்டர் டர்போ டீசல் யுனிட் 118HP செய்ல்திறனை 3,750 rpm மற்றும் 320 Nm டார்கியூ 1,750 rpm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும் M15 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1490சிசி நான்கு சிலிண்டர் இன்ஜின் 100HP செய்ல்திறனை 5900 rpm மற்றும் 133 Nm டார்கியூ 4100 rpm செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
லேண்ட் ரோவர் இந்தியா புதிய 2017 டிஸ்கவரி மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் லேண்ட் ரோவர் 2017 டிஸ்கவரி மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் 2017 டிஸ்கவரி மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடலின் விலை ரூ.68.05 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. தற்போதைய எஸ்.யு.வி. வகைகளின் விலையை விட அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது.
புதிய 2017 டிஸ்கவரி டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் மாடல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்தியாவில் புதிய ஆடம்பர எஸ்.யு.வி. மாடல் அக்டோபர் 28, 2017-இல் வெளியாகி அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம்.
டிஸ்வகரி விஷன் கான்செப்ட் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி நியூ யாரக் நகரில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏழு பேர் செல்லக் கூடிய எஸ்.யு.வி. இந்திய சந்தையில் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும்.

வழக்கமான ரூஃப்லைன் மாடலைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள 2017 லேண்ட் ரோவர் உள்பக்கம் வாடிக்கையாளர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்குகிறது. எனினும் வழக்கமான பாக்ஸி வடிவமைப்பை தவிர்த்து புதிய ரக வடிவமைப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவில் புதிய லேண்ட் ரோவர் டிஸ்கவரி Si6 மற்றும் TDV6 ட்ரிம்களை கொண்டுள்ளது. இது சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் 3-லிட்டர் V6 இன்ஜின் கொண்டு 335 bhp மற்றும் 450 Nm டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. மற்றொரு புறம் 6-சிலிண்டர் டீசல் மோட்டார் 254 bhp மற்றும் 600 NM டார்கியூ கொண்டுள்ளது.
இன்டெலிஜன்ட் சீட் ஃபோல்டு தொழில்நுட்பம், சென்ட்ரல் டச் ஸ்கிரீன், 14 ஸ்பீக்கர் டிஜிட்டல் சரவுண்டு சிஸ்டம், இன் கண்ட்ரோல் டச் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு 12 வோல்ட் சார்ஜிங் பாயின்ட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி வால்வோ நிறுவனத்தின் XC90, ஆடி கியூ7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் 2017 320D ஸ்போர்ட் எடிஷன் கார் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை மற்றும் இதில் வழங்கப்பட்டுள்ள இன்ஜின் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
பி.எம்.டபுள்யூ 3 சீரிஸ் கார்களில் பல்வேறு மாடல்கள் ரூ.36.30 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.43.40 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.எம்.டபுள்யூ. தனது வாகனங்களில் புதிய மாடல் ஒன்றை இணைத்துள்ளது. ஸ்போர்ட் எடிஷன் மாடலாக உருவாகியுள்ள புதிய பி.எம்.டபுள்யூ விலை ரூ.38.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பி.எம்.டபுள்யூ மாடல் சென்னையில் இயங்கி வரும் அந்நிறுவன ஆலையில் தயாரிக்கப்பட இருக்கிறது. 2017 பி.எம்.டபுள்யூ 320D பிரெஸ்டீஜ் மாடலை விட தனித்துவம் வாயந்ததாக காட்சியளிக்க புதிய மாடலின் முன்பக்க கிரில்களில் கிளாஸ் பிளாக் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறங்களில் புதிய ஸ்போர்ட் எடிஷன் மாடலில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கொண்ட ஸ்டீரிங் வீல், கியர் ஷிஃப்ட் பேடல்கள் கொண்டுள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் கிளாஸ் சன்ரூஃப், 205 வாட் 9-ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்க இருக்கைகளில் மெமரி அம்சம், 17-இன்ச் அலாய் வீல்கள், பார்க்கிங் அசிஸ்ட் வழங்கும் ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சில அம்சங்கள் இத்தகைய போட்டி நிறுவனங்களின் மாடல்களில் வழங்கப்படாத ஒன்றாக இருக்கிறது.
புதிய 2017 பி.எம்.டபுள்யூ. 320D ஸ்போர்ட் எடிஷன் 4-சிலிண்டர் கொண்ட டீசல் மோட்டார் மூலம் இயங்குகிறது. இந்த இன்ஜின் 190PS மற்றும் அதிகபட்ச டாராகியூ 400Nm செயல்திறனை 1,750-2,500rpm இல் வழங்குவதோடு 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 7.2 நொடிகளில் கடக்கும் என்றும் அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி புதிய பி.எம்.டபுள்யூ லிட்டருக்கு 22.69 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெர்னா மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூன்டாய் வெர்னா 2017 ஒருவழியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியான முதல் வெர்னா மாடல் அதிகளவு வரவேற்பை பெற்ற நிலையில் இம்முறை வெளியிடப்பட்டுள்ள புதிய காரில் அதிகப்படியான அம்சங்கள் மற்றும் அழகிய தோற்றம் கொண்டுள்ளது.
புதிய வெர்னா மாடலின் உள்கட்டமைப்புகளில் முந்தைய மாடல்களை விட அழகாக காட்சியளிக்கிறது. டேஷ்போர்டில் உள்ள டிஸ்ப்ளேக்களில் பிளாக் மற்றும் பெய்கீ என டூயல் டோன் கொண்டுள்ளது. புதிய காரில் 7.0 இன்ச் அர்கம் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஐ.பி.எஸ். பேனல், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லின்க் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் இரண்டு யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 12 வோல்ட் சாக்கெட் மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. வெர்னா மாடல்களில் முதன்முறையாக வென்டிலேட்டெட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது, இது கோடை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு வசதியான அம்சமாக இருக்கும்.

புதிய வெர்னா இகோ கோட்டிங் பெற்றிருக்கிறது என்பதால் காரினுள் கேபின் முழுக்க காற்றோட்டத்தை சீராக்குவதோடு நாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பின்புறத்தில் திரை மற்றும் அதனை ஸ்மார்ட் டிரன்க் மூலம் கட்டுப்படுத்தும் வசதியை வழங்கியுள்ளது. இந்த அம்சம் காரை மேலும் ஆடம்பர தோற்றத்தை வழங்குகிறது.
லெதர் மூலம் தயாரிக்கப்பட்ட இருக்கைகள், அழகிய சன்ரூஃப், 6 ஏர்பேக்ஸ் மற்றும் பின்புற ஏ.சி. வென்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் புதிய கார் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் K2 தளம் சார்ந்த சூப்பர் பாடி வடிவமைப்பு உயர்-ரக ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், அதிக உறுதியாக இருக்கிறது.
ஹூன்டாய் புதிய வெர்னா 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவ்வகை இன்ஜின் தலைசிறந்த செயல்திறனை கொண்டது என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. இதன் பெட்ரோல் மோட்டார் 120 bhp செயல்திறனும், டீசல் மோட்டார் 125 bhp செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு ஆட்டோ பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
2017 ஹூன்டாய் வெர்னா மாடலில் வழங்கப்பட இருக்கும் இன்ஜின் அம்சங்கள், எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் பல்வேறு இதர சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் செடான் மாடல் கார் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2017 ஹூன்டாய் வெர்னா மாடல் டீசர் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இதற்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 21-ம் தேதி முதல் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 2017 ஹூன்டாய் வெர்னா ஆகஸ்டு 22-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. சந்தையில் நிலவும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் புதிய வெர்னா மாடலில் அதிகப்படியான அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 2017 ஹூன்டாய் வெர்னா மாடல் புதிய K2 தளம் சாப்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கும். இதில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் 121 bhp செயல்திறனை 130 Nm பீக் டார்கியூவை வெளிப்படுத்துகிறது. இதன் 1.6 டீசல் மோட்டார் 126 bhp செயல்திறனை 130 Nm பீக் டார்கியூ கொண்டிருக்கும்.

டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்கியூ கன்வெர்டர் ஆட்டோமேடிக் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹூன்டாய் நிறுவனம் 1.4 லிட்டர் மாடல்களை அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஹூன்டாய் வெர்னா புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டேடைம் மின்விளக்குகள், எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் ஃபாக் மின்விளக்குகள் வழங்கப்படுகிறது. இதன் டாப்-என்ட் மாடலில் 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.
கேபின் அம்சங்களை பொருத்த வரை புதிய 2017 ஹூன்டாய் வெர்னாவில் டூயல்-டோன் கலர் ஆப்ஷன் மற்றும் டார்க் கிரே ஃபினிஷ் வழங்கப்படுகிறது. இத்துடன் சாஃப்ட் டச் பிளாஸ்டிக் டேஷ்போர்டு, பிரஷ்டு அலுமினியம் சென்ட்டர் கன்சோல் கொண்டிருக்கும் என்றும் இதன் உயர் ரக மாடலில் லெதர் இருக்கைகள் மற்றும் டோர் பேட்கள் வழங்கப்படும்.

இத்துடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்ன்கள் வழங்கப்படும். இத்துடன் கூல்டு / வென்ட்டிலேட்டெட் இருக்கைகள் வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்க இரண்டிற்கும் அதிகமான ஏர்பேக்களை கொண்டிருக்கும்.
மேலும் புதிய மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரியர் பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் புதிய 2017 ஹூன்டாய் வெர்னா ரூ.8 லட்சத்தில் இருந்து துவங்கலாம் என்றும் டாப்-என்ட் மாடல் ரூ.13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நடுத்தர மாடல் விலை ரூ.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மாருதி சுசுகி பலேனோ ஆல்ஃபா ஆட்டோமேடிக் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஆல்பா சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் பிரபல ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றான மாருதி சுசுகி பலேனோ புதிய மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடல் பலேனோ ஆல்ஃபா ஆட்டோமேடிக் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பலேனோ ஆட்டோமேடிக் மாடல்களான டெல்டா மற்றும் சீட்டா முறையே ரூ.7.34 லட்சம் மற்றும் ரூ.7.63 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் 2015-இல் வெளியிடப்பட்ட பலேனோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் யுனிட்களை ஒரு வருடத்திற்குள் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமில்லாமல் 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த பிரீமியம் மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஜப்பான் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் சுமார் 68,000 யுனிட்களை ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பியா மற்றும் லத்தின் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
மாருதி சுசுகி பலேனோவில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS DOHC இன்ஜின் வழங்கப்படுகிறது. DDiS DOHC வகை இன்ஜின் மாருதி ஸ்விஃப்ட் மாடல்களுக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் பெட்ரோல் இன்ஜின் 84PS/115Nm செயல்திறன் வழங்குகிறது, 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் லிட்டருக்கு 21.4 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பலேனோ ஆல்ஃபா ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ.8.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுனத்தின் நெக்சன் எஸ்.யு.வி. மாடலின் உற்பத்தி துவங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்டு தயாராகும் நெக்சன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
டாடா மோட்டார்ஸ் நிறுனத்தின் புதிய நெக்சன் எஸ்.யு.வி. உற்பத்தி மகாராஷ்டிரா மாநிலத்தின் ரங்கான்கோன் ஆலையில் துவங்கியுள்ளது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டுள்ள நெக்சன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்.யு.வி. முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் சர்வதேச சந்தையில் பிரபலமான AVL, போஷ், மஹேல் மற்றும் ஹனிவெல் போன்ற தொழில்நுட்ப விநியோகஸ்தர்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.
இதன் பெட்ரோல் வேரியன்ட் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு ரெவட்ரான் மோட்டார், டீசல் இன்ஜின் நான்கு-சிலிண்டர் ஆயில் பர்னர் கொண்டுள்ளது. நெக்ஸ்ட்-ஆன் என்பதன் சுருக்கமான நெக்சன் அடுத்த வகை பொருட்களை குறிக்கிறது. புதிய எஸ்.யு.வி. போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் மற்றும் மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு-சிலிண்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சம் 110ps செயல்திறனை 3750 rpm-இல் அதிகபட்சம் 260 Nm டார்கியூ கொண்டுள்ளது. மூன்று டிலிண்டர் பெட்ரோல் இன்ஜினஅ அதிகபட்சம் 110ps செயல்திறனை 5000 rpm-இல் அதிகபட்சம் 260 Nm டார்கியூ கொண்டுள்ளது.
இந்தியாவில் புதிய டாடா நெக்சன் விலை ரூ.7.00 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய AMG GLC 43 கூப் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்நது பார்ப்போம்.
புதுடெல்லி:
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் AMG GLC 43 4மேடிக் கூப் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 நடுத்தர செயல்திறன் கொண்ட எஸ்.யு.வி. பதிப்பாகவும், 63 AMG சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
எனினும் இதன் கூப் போன்ற ரூஃப்லைன் இந்த மாடலின் அழகை கூட்டுகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC300 பெட்ரோல் இன்ஜின் மற்றும் GLC220d டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. மெர்சிடிஸ் AMG GLC 43 கூப் 4.8 நொடிகளிலேயே மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. தற்சமயம் GLC 43 ஆல்-வீல்-டிரைவ் மற்றும் 3-லிட்டர் V6 டர்போ இன்ஜின் கொண்டுள்ளது.
இந்த இன்ஜின் 362 bhp செயல்திறன் மற்றும் 9G-டிரானிக் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. GLC 43 மாடலில் ஏர்பாடி கண்ட்ரோல் மற்றும் 4.8 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை தொடும் திறன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் அதிவேக ஸ்பீடு மணிக்கு 250 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், இந்த திறன் மின்சார முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.
புதிய மெர்சிடிஸ் GLC 43 இகோ, கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவிடிவல் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மோட்களும் அதற்கேற்ற தன்மைகளை கொண்டுள்ளது.
இத்துடன் AMG ஸ்போர்ட் லைன் வழங்கும் 19-இன்ச் வீல்ஸ் கொண்டுள்ளது. இது எஸ்.யு.வி. தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. இதன் இன்டீரியர்களும் முழுமையான பிளாக் நிறத்தில் ரெட் ஸ்டிட்ச், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் மற்றும் ரெட் சீட் பெல்ட்களை கொண்டுள்ளது.
இதன் டேஷ்போர்டு மற்றும் சென்ட்ரல் கன்சோலில் கார்பன் ஃபைபர் ட்ரிம்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ் GLC 43 கூப் மாடலுக்கு போட்டியான கார் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ஸ்போர்ட் செடான் மாடல்களான ஆடி S5 மாடல்களுக்கு புதிய பென்ஸ் GLC 43 கூப் போட்டியாக அமையும்.
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் GLC 43 4மேடிக் கூப் விலை ரூ.74.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோன்டா கார் இந்தியா அமேஸ் 'பிரிவிலிஜ் எடிஷன்' மாடலினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் சிறப்பம்சங்கள் மற்றும் இன்ஜின் செயல்திறன் சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஹோன்டா கார் இந்தியா புதிய அமேஸ் பிரிவிலிஜ் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. செடான் மாடல் காரின் பெட்ரோல் இன்ஜின் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இதன் டீசல் மாடல் ரூ.7.73 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. எனினும் புதிய ஸ்பெஷல் எடிஷன் வாங்குவோர் கூடுதலாக ரூ.10,000 வரை செலுத்த வேண்டும்.
அமேஸ் பிரிவிலிஜ் எடிஷன் மாடலில் டிஜிபேட் என அழைக்கப்படும் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யுனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டச் ஸ்கிரீன் யுனிட் 3டி சாட்டிலைட் லின்க் செய்யப்பட்ட நேவிகேஷன் அம்சத்தை வழங்குகிறது. இத்துடன் 1.5 ஜிபி அளவு மியூசிக் சேமிக்கும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
மிரர்லின்க் சப்போர்ட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளதால் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியின் போது சீரான அனுபவத்தை வழங்குகிறது. இதனால் இமெயில் பிரவுசிங், லைவ் டிராஃபிக் மற்றும் வைபை ரிசீவர், இண்டர்நெட் வசதி, வாய்ஸ் கமாண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ப்ளூடூத், AM/FM டிஜிட்டல் ரேடியோ, எம்பி3 சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், எச்.டி.எம்.ஐ. போர்ட், இரண்டு யு.எஸ்.பி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதியவகை இருக்கைகள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பில் சிறிதளவு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் டூயல்-ஏர்-பேக்ஸ், ABS, ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை மாற்றும் வசதி, பின்புற பார்க்கிங் சென்சார்கள் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் உள்ள ஹோன்டா அமேஸ் போன்ற இன்ஜின் அமைப்பே புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மானிட்டர் 1.2-லிட்டர், 87bhp திறனை அதிகபட்சம் 109 Nm டார்கியூ வெளிப்படுத்தும் i-VTEC யுனிட் கொண்டுள்ளது. இதேபோன்று 1.5 லிட்டர் i-DTEC யுனிட் முலம் 99 bhp திறனை 200Nm டார்கியூவில் வழங்குகிறது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா அமேஸ் மாடலில் இதுவரை இல்லாதளவு புதிய மேம்படுத்தல்கள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ரெனால்ட்-நிசான் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இரண்டு தளங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் நிசான் தற்சமயம் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ரெனால்ட் - நிசான் ஒப்பந்தங்களின் படி இந்திய சந்தையின் இரண்டு தளங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளன. அதன்படி சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நிசான் தற்சமயம் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சன்னி சமீபத்தில் வெளியிடப்பட்ட மைக்ரா ஹேட்ச்பேக் (K14) சார்ந்து இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் சன்னி வடிவமைப்புக்கு ஏற்றவாரு நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் ஒவ்வொரு சந்தைகளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு சன்னி போன்று புதிய மாடல் நீலமாக இருக்காது என்றும் வடிவமைப்பாளர்கள் இதன் ஸ்பேஸ் மற்றும் அகிலிட்டிக்கு ஏற்ற வடிவமைப்பை உருவாக்க வடிவமைப்பாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் புதிய மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களான ஹோன்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் விரைவில் வெளியாக இருக்கும் ஹூன்டாய் வெர்னாவுக்கு போட்டியளிக்கும்.
புதிய நிசான் ரெனால்ட் டஸ்டர் மாடலில் பயன்படுத்தப்பட்டு வரும் சன்னி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் சன்னி 2018 மாடலில் வழங்கப்படும் என்றும் நான்கு-சிலிண்டர் கொண்ட இன்ஜின் அதிகபட்சம் 104 Bhp செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சன்னியில் டீசல் இன்ஜின் மாடல் வெளியிடப்படாது என கூறப்படும் நிலையிலும், இந்திய சந்தையில் நிசான் சன்னி டீசல் இன்ஜின் மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிசான் சன்னி மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், நிசான் நிறுவனம் பல்வேறு இதர மாடல்களை வெளியிட தயாராகி வருகிறது. அதன்படி நிசான் கிக், மற்றும் ரெனால்ட் கப்துர் உள்ளிட்ட மாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
வால்வோ இந்தியாவின் வி90 கிராஸ் கன்ட்ரி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வி90 கிராஸ் முந்தைய 90 சீரிஸ் போன்று இருப்பதோடு தார் வடிவ ஹெட்லேம்ப் கொண்டுள்ளது.
புதுடெல்லி:
வால்வோ நிறுவனத்தின் புதிய வி90 கிராஸ் கன்ட்ரி மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எஸ்டேட் SPA பிளாட்ஃபார்ம் சார்ந்து எஸ்90 மற்றும் XC90 மாடல்களைத் தொடர்ந்து வெளியாகியிருக்கிறது.
வழக்கமான வால்வோ 90 சீரிஸ் போன்றே முன்பக்க தோற்றம் கொண்டுள்ள வி90 எஸ்டேட் பாடி ஸ்டைல் மற்றும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
முந்தைய வால்வோ மாடல்களை போன்றே புதிய மாடலின் கேபின் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நப்பா லெதர் மூலம் தாயரிக்கப்பட்ட மெத்தைகள், முன்பக்க காற்றோட்டமான மற்றும் மாற்றக்கூடிய இருக்கைகள், 4-சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்-ஆப்பரேட்டெட் பூட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்க பாதுகாப்பு அம்சங்களில் அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், பைலட் அசிஸ்ட், சிட்டி சேஃப்டி, முன்பக்க கொலிஷன் மிடிகேஷன் சப்போர்ட் மற்றும் ஆறு ஏர்-பேக்கள் வழங்கப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜின் கொண்டுள்ள வி90 சிசி 235PS/480Nm செயல்திறன் மற்றும் 1,969 சிசி இன்ஜின் 8-ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய வால்வோவில் பிரெலி P சீரோ டையர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் வால்வோ வி90 கிராஸ் கன்ட்ரி விலை ரூ.60 லட்சம் முதல் துவங்குகிறது.
இந்தியாவில் விலை உயர்ந்த ஆடம்பர கார் வாங்குவோரை கவரும் வகையில் புதிய வரிமுறை இந்த மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆடம்பர கார்களின் விலையில் ரூ.1 கோடி வரை குறைந்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதும் பெரும்பாலான விலை உயர்ந்த கார்களின் விலை குறைந்தது. இந்நிலையில், விலை உயர்ந்த ஆடம்பர கார் வாங்குவோர் மகிழ்ச்சியடையும் வகையில் மகாராஷ்ட்ரா அரசின் புதிய விதிமுறை அமலாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் அமலாகியுள்ள புதிய விதிமுறைகளின் படி அதிகபட்ச சாலை-வரி ரூ.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஃபெராரி, ரால்ஸ் ராய்ஸ், லம்போர்கினி மாடல்களுக்கான சாலை-வரி அதிகபட்சம் ரூ.20 லட்சம் ஆகும்.
முன்னதாக இறக்குமதி செய்யப்படும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து 20 சதவிகிதம் சாலை வரியாக செலுத்த வேண்டும். புதிய விதிமுறையால் மகாராஷ்ட்ராவில் விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவோர் பெருமளவு பணத்தை மிச்சம் செய்ய முடியும். இதனால் விலை உயர்ந்த கார்களை வாங்குவோர் மட்டுமின்றி அரசாங்கமும் வரி மூலம் லாபம் ஈட்ட முடியும்.

புதிய விதிமுறைக்கான காரணம் என்ன?
விலை உயர்ந்த கார்களை வாங்குவோர் பெரும்பாலும் புதுச்சேரி, டமன் மற்றும் டியு என யுனியன் பிரதேசங்களில் தங்களது வாகனங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கு மகாராஷ்ட்ரா மட்டுமின்றி மற்ற மாநிலங்களை விட வரி குறைவு.
இதனால் மகாராஷ்ட்ரா போக்குவரத்து அலுவலர்கள் விலை உயர்ந்த கார்களை மடக்கிப் பிடித்து அவர்களிடம் இருந்து வரியை பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது. புதிய விதிமுறையால் இந்த பிரச்சனை முடிவுக்கு வருவதோடு விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவோர் அவற்றை மகாராஷ்ட்ராவிலேயே பதிவு செய்வர்.

மொத்த சேமிப்பு?
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் விலை உயர்ந்த மாடல்களுக்கு அதிக சேமிப்பு பெற முடியும். இந்தியாவில் விலை உயர்ந்த மாடலான ரால்ஸ் ராய்ஸ் பேண்டம் டிராப்ஹெட் கூப் வரி உள்பட விலையில் ரூ.1.16 கோடிகளை சேமிக்க முடியும்.
புதிய விதிமுறைகளில் லம்போர்கினி அவென்டெடார் ரூ.74 லட்சமும், ஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் மாடலுக்கு ரூ.82 லட்சமும், ஃபெராரி F12 பெர்லினெட்டா ரூ.69.8 லட்சம் வரை குறையும்.

புதிய விதிமுறைகள்:
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு மகாராஷ்ட்ராவில் அதிகபட்சம் சாலை-வரி ரூ.20 லட்சம் என்பதால் வாடிக்கையாளர்கள் மற்ற யுனியன் பிரதேசங்களில் தங்களது வாகனங்களை பதிவு செய்யும் வழக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மகாராஷ்ட்ராவை போன்று இங்கும் புதிய விதிமுறை அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






