என் மலர்
கார்
ஆடி நிறுவனத்தின் கியூ 7 பெட்ரோல் மாடல் எஸ்யுவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பெட்ரோல் மாடல் காரின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆடி நிறுவத்தின் கியூ 7 பெட்ரோல் மாடல் எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.67.76 லட்சத்தில் இருந்து துவங்கும் புதிய ஆடி கியூ 7 பெட்ரோல் 2.0 லிட்டர் TFSI இன்ஜின் கொண்டுள்ளது. இதே இன்ஜின் ஆடி நிறுவனத்தின் பல்வேறு மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இன்ஜின் 252PS மற்றும் 370Nm டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 6.9 நொடிகளில் செல்லும் என்றும் மணிக்கு 233 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. ஆடி கியூ 7 பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 11.68 கிலோமீட்டர் செல்லும் என இந்திய ஆட்டோமோட்டிவ் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்யுவி மாடலில் ஆடி விர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஸ்மார்ட் ஆடி ஸ்மார்ட்போன் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டீசல் இன்ஜின் கொண்ட ஆடி கியூ 7 விற்பனை செய்யப்படுகிறது. புதிய பெட்ரோல் மாடலிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆடி கியூ 7 மாடலில் எலெக்ட்ரோமெக்கானிக்கல் பவர் ஸ்டீரிங் மற்றும் ஷிஃப்ட் பேடில்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் உயர்-ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நான்கு கால நிலைகளுக்கு ஏற்ற கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ பார்க் அசிஸ்ட் மற்றும் எட்டு ஏர்பேக்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற மோட்டார் விழாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கும் என டெல்லியில் உள்ள விற்பனையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 2016-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்-கிராஸ் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2017 மாருதி சுசுகி எஸ்-கிராஸ் முன்பக்கம் க்ரோம் ஃபின்ஷ் செய்யப்பட்ட பிரம்மாண்டமான கிரில் மற்றும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பி்ன்புறம் மெல்லிய எல்இடி டெயில் லேம்ப்களும் அழகிய அலாய் வீல்களும் வழங்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் மாடலின் இன்டீரியர் அம்சங்களை பொருத்தவரை புதிய மெத்தைகள், டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் கூகுள் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

2017 எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 88 hp மற்றும் 200 Nm டார்க்யூ கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் அதிகப்படியான வரவேற்பு இல்லாத நிலையில் இந்த மாடலில் 1.6 லிட்டர் DDiS 320 டீசல் இன்ஜின் வழங்கப்பட மாட்டாது.
மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐந்து நிறங்களில் கிடைக்கு்ம என்றும் இதன் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிசான் டெரானோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் காரினை 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுக்க முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை சுமார் 10,000 யுனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவுகள் ஜூன் 19-ம் தேதி துவங்கிய நிலையில் இதன் துவக்க விலை ரூ.14.95 லட்சத்தில் துவங்கியது.
ஜீப் காம்பஸ் இந்திய விலை ரூ.14.95 லட்சத்தில் துவங்கும் நிலையில், டாப் என்ட் மாடலின் விலை ரூ.20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மொத்தம் மூன்று மாடல்கள், - ஸ்போர்ட், லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பிரீமியம் கிராண்ட் செரோக்கீ எஸ்.யு.வி. வகை ஸ்டைலிங் கொண்டுள்ள ஜீப் காம்பஸ் பாரம்பரிய ஜீப் வடிவமைப்பு மற்றும் அனைவருக்கும் பிடித்தமான மாடலாக அமைந்துள்ளது. புதிய ஜீப் கிரில், வீல் ஆர்ச் மற்றும் எல்இடி புதிய மாடலில் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

ஜாம்பஸ் மாடல் 1.4 மல்டி-ஏர் டர்போ பெட்ரோல் ஸ்போர்ட் 4x2 மாடல், 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டாப் என்ட் மாடலில் 2.0L மல்டி ஜெட் டர்போ டீசல் லிமிட்டெட் 4x4 மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. புதி ஜீப் காம்பஸ் மாடல் 50-க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த எஸ்.யு.வி. மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி DRL மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களை மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல் வடிவமைப்பு கவர்ச்சியாக இருப்பதோடு பெயின்ட் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வித நிறங்களில் தங்களுக்கு பிடித்தமான நிறத்தை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மினிமல் கிரே, எக்சாட்டிக்கா ரெட், ஹைட்ரோ புளூ, வோகல் வைட் மற்றும் ஹிப் ஹாப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ஏற்கனவே திட்டமிட்டதை விட 25 சதவிகிதம் அதிகளவு கார்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் தினமும் 90 ஜீப் காம்பஸ் மாடல்கள் தயாரிக்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை 110-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் கார்கள் பூனேவில் சமீபத்தில் துவங்கப்பட்ட தயாரிப்பு ஆலையில் நடைபெற்று வருகிறது.
ஹூன்டாய் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் காரினை ஆகஸ்டு மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் மோட்டார் இந்தியா ஐந்தாவது தலைமுறை வெர்னா மாடலினை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய வெர்னா இதுவரை முன்பிதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுகமான நாள் முதல் சுமார் 70,000க்கும் அதிகமானோர் புதிய வெர்னா வாங்க முன்வந்ததோடு இதுவரை 7,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர்.
தீபாவளிக்கு முன் இந்தியாவில் 10,000 யுனிட்களை விற்பனை செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஹூன்டாய் தனது இலக்கை அடைந்துவிடும். அறிமுகமான பத்து நாட்களில் புதிய வெர்னாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்தாம் தலைமுறை ஹூன்டாய் வெர்னா நுட்பமான வடிவமைப்பு கொண்ட சூப்பர் செடான் மாடல் என ஹூன்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை செய்ல் அதிகாரியான வை.கே. கூ தெரிவித்தார்.

இந்தியாவில் 2017 வெர்னா, ஹூன்டாய் நிறுவனத்தின் மாத இலக்கை விட நான்து மடங்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன் 10,000 யுனிட்களை விநியோகம் செய்ய உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய தலைமுறை வெர்னா K2 பிளாட்ஃபார்ம் சார்ந்து வடிவமைக்கப்பட்டு ஃப்ளூயிடிக் 2.0 டிசைன் கொண்டுள்ளது. இதன் இன்டீரியர் பெய்கீ மற்றும் பிளாக் என டூயல்-டோன் கலர் கொண்டுள்ளது. இதன் சீட்கள் லெதர் மற்றும் சாதாரான துணி என வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வழங்கப்படுகிறது. இத்துடன் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது.

இத்துடன் மிரர்லின்க் மற்றும் ஹூன்டாய் ஐப்ளூ ஆடியோ ஸ்மார்ட்போன் ஆப், 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களில் சாதாரண அலாய் அல்லது ஸ்டீல் அலாய் வழங்கப்பட்டது. மேலும் புதிய தலைமுறை க்ரூஸ் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட், சன் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் தலைமுறை வெர்னா 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 121 bhp, 151 Nm பீக் டார்கியூ மற்றும் டீசல் இன்ஜின் 126 bhp, 260 Nm பீக் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்கியூ வழங்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வரும் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் மாடலின் சிறப்பம்சங்கள் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் வழங்கப்படவுள்ள முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் விஸ் லிமிட்டெட் எடிஷன் மாடலை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் ஸ்பெஷல் எடிஷன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஸ்பெஷல் எடிஷன் இன்டீரியர் அம்சங்கள் தெரியவந்திருந்தது. இம்முறை TeamBHP வலைத்தளம் மூலம் புதிய புகைப்படங்கள் கசிந்துள்ளது. இதில் ஹேட்ச்பேக் மாடலின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது
டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் இன்ஜின் 83bhp, டீசல் இன்ஜின் 68bhp செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதன் இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை பிளாக்டு-அவுட் ரூஃப், ஸ்பாய்லர், பி-பில்லர் மற்றும் ORVM ஹவுசிங் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர லிமிட்டெட் எடிஷன் மாடலில் ஸ்லீக் ரூஃப் மற்றும் விஸ் பேட்ஜிங் கொண்டுள்ளது. உள்புறங்களில் பியானோ பிளாக் மற்றும் ஸ்போர்ட் ரெட் என டூயல்-டோன் ஃபினிஷ் கொண்டுள்ளது.
இத்துடன் புதிய பேட்டன் சீட் துணி, ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜூக்-கார் ஆப், மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர டியாகோ விஸ் மாடலில் முன்புறம் மற்றும் பின்புறங்களில் பவர் விண்டோ, ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், டிஸ்ப்ளேவுடன் பின்புற பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புதிய டியாகோ ஹேட்ச்பேக் லிமிட்டெட் எடிஷன் மாடல் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. அந்த வகையில், புதிய லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல்களில் ஐ கிரியேட் எனும் கஸ்டமைஸ் வசதியை மாருதி சசுகி அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும்.
புதுடெல்லி:
மாருதி சுசுகியின் ஸ்விஃப்ட் மாடல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் கார் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஐ கிரியேட் எனும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் விடாரா பிரெஸ்ஸா மாடலில் வழங்கப்பட்ட ஐ கிரேயேட் அம்சம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய உள்புற மற்றும் வெளிப்புற கஸ்டமைசேஷன் அம்சங்களை வழங்குகிறது. ஆன்லைன் மற்றும் சர்வீஸ் மையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய 120 கஸ்டமைசேஷன் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ரூஃப் ராப், ஹூட் கிராஃபிக் ஆப்ஷன்கள், ஸ்டிரைக்கிங் பாடி ஸ்டைலிங் கிட், ஸ்பாயிலர்கள், அலாய் வீல் உள்பட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் இன்டீரியர் அம்சங்களில் ஃபிளாக்கிங் கிட் பல்வேறு நிறங்களில் வழங்கப்படுகிறது. ஸ்டைலிங் கிட் மற்றும் புதிய ரக சீட் கவர்களும் இன்டீரியர் அம்சங்களில் வழங்கப்படுகிறது.

புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. 2005-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட், தற்போதைய ஹேட்ச்பேக் மாடல் 2011-ம் ஆண்டு அறிமுகமானது. இந்தியாவில் ஸ்விஃப்ட் மாடல்கள் அறிமுகமானது முதல் இதுவரை 15 லட்சம் யுனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்துள்ளது.
2016-17 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1.66,885 ஸ்விஃப்ட் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதில் ஏப்ரல் - ஜூலை 2017 நரை மட்டும் 63,974 யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது 25.5 சதவிகிதம் வரை அதிகம் ஆகும்.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் புதிய தலைமுறை மாடல் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து, ஐ கிரியேட் வசதி கொண்ட ஸ்விஃப்ட் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபியாட் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஜீப் காம்பஸ் முன்பதிவு இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுக்க முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை சுமார் 8,171 யுனிட்களை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 245 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,570 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
ஜீப் காம்பஸ் இந்திய விலை ரூ.14.39 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடலின் விலை ரூ.20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மொத்தம் மூன்று மாடல்கள், - ஸ்போர்ட், லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பிரீமியம் கிராண்ட் செரோக்கீ எஸ்.யு.வி. வகை ஸ்டைலிங் கொண்டுள்ள ஜீப் காம்பஸ் பாரம்பரிய ஜீப் வடிவமைப்பு மற்றும் அனைவருக்கும் பிடித்தமான மாடலாக அமைந்துள்ளது. புதிய ஜீப் கிரில், வீல் ஆர்ச் மற்றும் எல்இடி புதிய மாடலில் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்த எஸ்.யு.வி. மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி DRL மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களை மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல் வடிவமைப்பு கவர்ச்சியாக இருப்பதோடு பெயின்ட் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வித நிறங்களில் தங்களுக்கு பிடித்தமான நிறத்தை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மினிமல் கிரே, எக்சாட்டிக்கா ரெட், ஹைட்ரோ புளூ, வோகல் வைட் மற்றும் ஹிப் ஹாப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ஏற்கனவே திட்டமிட்டதை விட 25 சதவிகிதம் அதிகளவு கார்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் தினமும் 90 ஜீப் காம்பஸ் மாடல்கள் தயாரிக்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை 110-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் கார்கள் பூனேவில் சமீபத்தில் துவங்கப்பட்ட தயாரிப்பு ஆலையில் நடைபெற்று வருகிறது.
ஹூன்டாய் நிறுவனத்தின் 2017 வெர்னா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரை உடனே வாங்கும் முதல் இருபது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சிறப்பு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஹூன்டாய் நிறுவனத்தின் 2017 வெர்னா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.7.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ.12.61 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த விலை புதிய வெர்னா காரை வாங்கும் முதல் இருபது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அதன்பின் காரின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை வெர்னா மாடல் முதற்கட்டமாக செப்டம்பர் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வெர்னா வடிவமைப்பு எலான்ட்ரா மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு, பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அதிகப்படியான மாற்றங்களுடன் ஹெக்சாகோனல் கிரில் மற்றும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பம்ப்பர் மாற்றப்பட்டு ஃபாக் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை வெர்னா வில் K2 பிளாட்ஃபார்ம் சார்ந்து வடிவமைக்கப்பட்டு ஃப்ளூயிடிக் 2.0 டிசைன் கொண்டுள்ளது. இதன் இன்டீரியர் பெய்கீ மற்றும் பிளாக் என டூயல்-டோன் கலர் கொண்டுள்ளது. இதன் சீட்கள் லெதர் மற்றும் சாதாரான துணி என வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வழங்கப்படுகிறது. இத்துடன் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது.

இத்துடன் மிரர்லின்க் மற்றும் ஹூன்டாய் ஐப்ளூ ஆடியோ ஸ்மார்ட்போன் ஆப், 16-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களில் சாதாரண அலாய் அல்லது ஸ்டீல் அலாய் வழங்கப்பட்டது. மேலும் புதிய தலைமுறை க்ரூஸ் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட், சன் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
புதிய வெர்னா 2017 மாடலில் டூயல் ஏர்பேக், ABS, EBD, ஸ்டான்டர்டு ஃபிட்மென்ட், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய வெர்னா மாடல் ஏற்கனவே கூறப்பட்டதை போன்று E, EX, SX மற்றும் SX (O) என நான்கு வித மாடல் மற்றும் ஏழு வித நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துடன் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 121 bhp, 151 Nm பீக் டார்கியூ மற்றும் டீசல் இன்ஜின் 126 bhp, 260 Nm பீக் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்கியூ வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹூன்டாய் வெர்னா மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹோன்டா சிட்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
ஹூன்டாய் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை வெர்னா மாடல் கார் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் தனது புத்தம் புதிய வெர்னா மாடல் காரினை ஆகஸ்டு 22-ம் தேதி வெளியிட இருக்கிறது. புதிய வெர்னா மாடல் கார்களுக்கான முன்பதிவுகள் ஹூன்டாய் விற்பனை மையங்களில் துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மட்டும் செலுத்தி 2017 ஹூன்டாய் வெர்னா மாடலை முன்பதிவு செய்ய முடியும்.
ஹூன்டாய் வெர்னா 2017 K2 எனும் பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. உயர்-ரக ஸ்டீல் மூலம் தயாராகியுள்ள ஹூன்டாய் வெர்னா முந்தைய மாடல்களை விட உறுதியாக உள்ளது.
- வடிவமைப்பு:
ஐந்தாம் தலைமுறை ஹூன்டாய் வெர்னா பார்க்க பழைய தோற்றம் கொண்டிருப்பது போன்று காட்சியளித்தாலும், புதிய மாடல் K2 எனும் பிளாட்ஃபாரம் மூலம் உருவாகியுள்ளது. அதிக உறுதியான ஸ்டீல் மூலம் உருவாகியிருப்பதால் புதிய வெர்னா கடினமாக உள்ளது. புதிய பாடி வடிவமைப்பு மற்றும் பிளாட்ஃபார்ம் உள்ளிட்டவை NVH அளவுகளை குறைக்க வழி செய்கிறது.

- புதிய சஸ்பென்ஷன்:
ஹூன்டாய் மிட்-சைஸ் செடான் புதிய வகை சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. புதிய சஸ்பென்ஷன் காரை திறம்பட கட்டுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களில் அதிவேகமாக செல்லும் போது ஏற்பட்ட அனுபவம் புதிய சஸ்பென்ஷன் அமைப்பு மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
- வெர்னா 2017 இன்ஜின்:
புதிய வெர்னா மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 123bhp, 151NM டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் மாடலும் வழங்கப்படுகிறது. டீசல் இன்ஜின் 128bhp, 260NM செயல்திறன் கொண்டுள்ளது. அறிமுகம் செய்யப்படும் போது இரண்டு வித இன்ஜின் மாடல்கள் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் முந்தைய மாடல்களை விட அதிக மைலேஜ் தரும் படி ARAI மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 17.7 கிலோமீட்டர், பெட்ரோல் ஆட்டோமேடிக் 15.92 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மேனுவல் மாடல் லிட்டருக்கு 24.75 கிலோமீட்டர், டீசல் ஆட்டோமேடிக் லிட்டருக்கு 21.02 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.

- புதிய டிரான்ஸ்மிஷன்கள்:
இன்ஜின்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், வெர்னா மாடலின் இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், பெட்ரோல் மாடல்களில் 5-ஸ்பீடு மேனுவல் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பழைய 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இம்முறை 6-ஸ்பீடு டார்கியூ கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக்ஸ்-ஆக மாற்றப்பட்டுள்ளது.
- மாற்றங்கள்:
புத்தம் புதிய வெர்னா முந்தைய மாடல்களை விட 65 மில்லிமீட்டர் நீளமாகவும், 29 மில்லிமீட்டர் அகலமும், வீல்பேஸ் 30 மில்லிமீட்டர் அளவு நீளமாக இருக்கிறது. தற்சமயம் 4,440 மில்லிமீட்டர் நீளமும், 1,729 மில்லிமீட்டர் அகலமும், 2,600 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இதன் பின்பக்க ஹெட்ரூம் 3 மில்லிமீட்டர் 948 மில்லிமீட்டர் அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பூட்ஸ்பேஸ் மற்றும் ஃபியூயல் டேன்க் முறையே 20 லிட்டர் மற்ரும் 2 லிட்டர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஹூன்டாய் வெர்னா 2017 ஹோன்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
இந்திய பிரதமராக பதவியேற்றதில் இருந்து கஸ்டமைஸ் செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார் பயன்படுத்தி வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் ரேன்ஜ் ரோவர் காரினை பயன்படுத்தி வருகிறார்.
புதுடெல்லி:
இந்திய பிரதமராக மே 2014-இல் பதவியேற்ற நரேந்திர மோடி அலுவல் பயன்பாட்டிற்கு கஸ்டமைஸ் செய்யப்பட்ட பி.எம்.டபுள்.யூ. 7 சீரிஸ் காரினை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரை மாற்றிவிட்டு வேறு காரினை பயன்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற வருகை தந்த நரேந்திர மோடி, பி.எம்.டபுள்யூ. 7சீரிஸ் காரை தவிர்த்து புத்தம் புதிய ரேன்ஜ் ரோவர் காரில் செங்கோட்டை வந்தடைந்தார். முதல் முறையாக ஆடம்பர ரக எஸ்.யு.வி. காரில் நரேந்திர மோடியின் வருகை அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் பயன்படுத்தி வரும் வாகனம் மாற்றப்பட்டிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய ஆடம்பர கார் பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று முதல் தனது காரினை மாற்றியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
நரேந்திர மோடி தற்சமயம் பயன்படுத்தி வரும் எஸ்.யு.வி. 2010-ம் ஆண்டை சேர்ந்த ரேன்ஜ் ரோவர் HSE ஆகும். இந்த மாடலில் 5.0 லிட்டர் V8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஆடம்பர எஸ்.யு.வி. மாடலினை ஜாகுவார் லேண்ட் ரோவர் தயாரித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உரிமம் டாடா மோட்டார்ஸ் வசம் உள்ளது.
இந்தியாவில் டாடா நிறுவனத்தின் டியாகோ XTA மாடல் கார் வெளியிடப்பட்டுள்ளது. புதிய காரில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவிநில் அமோக வரவேற்பை பெற்று வரும் டாடா டியாகோ புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் டியாகோவின் AMT பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய மாடலான XTA விலை இந்தியாவில் ரூ.4.79 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.
இது டாடா டியாகோ டாப் என்ட் மாடலான XZA-வை விட ஒரு லட்சம் வரை குறைவு ஆகும். டியாகோ மேனுவல் மாடலை விட ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ.42,000 அதிகம் ஆகும். மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், டியாகோ 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜி்ன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 85ps செயல்திறன் மற்றும் 114Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. இதன் மைலேஜ் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் லிட்டருக்கு 23.84 கிலோமீட்டர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டியாகோ XZA நகரித்தில் லிட்டருக்கு 16.04 கிலோமீட்டரும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 22.04 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. புதிய XT மாடலில் அலாய் வீல், முன்பக்க ஃபாக் லேம்ப், ORVM மவுன்ட்டெட் டர்ன் இன்டிகேட்டர், ஸ்டீரிங் மவுண்ட் கட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.
இத்துடன் புதிய டியாகோ மாடலில் ரியர் வைப்பர், டீஃபாகர், மற்றும் EBD சார்ந்த ஆண்டி-லாக் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை. டியாகோ மேனுவல் மாடலில் மட்டும் டூயல்-ஏர்பேக் அம்சம் வேண்டுமானால் பொருத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் GLC சுதந்திர தின செலபிரேஷன் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் காரின் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் செலபிரேஷன் எடிஷன் GLC மாடலினை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. லிமிட்டெட் எடிஷன் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் GLC220d விலை ரூ.50.86 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. இதேபோல் GLC 300 விலை ரூ.51.25 லட்சம் முதல் துவங்குகிறது.
புதிய வெளியீட்டின் மூலம் மெர்சிடிஸ் தயாரிப்பில் டிசைனோ ஹேசிந்த் ரெட் எனும் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் எல்இடி லோகோ ப்ரோஜெக்டர், ஸ்போர்ட்ஸ் ஃபினிஷ் பெடல், கார்மின் மேம் பைலட் எஸ்டி கார்டு, ஹை-ஷீன் க்ரோம்டு ட்ரிம் மற்றும் பின்புற ட்ரிம் ஸ்ட்ரிப்கள் காரின் தோற்றம் வழக்கத்தை விட மேலும் அழகாக காட்சியளிக்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட GLC பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டது. 220d மாடலில் 2143 சிசி டீசல் இன்ஜின் 170 bhp, 400 Nm செயல்திறன் கொண்டிருக்கிறது. இதேபோல் GLC 300 மாடலில் 1991 சிசி இன்ஜின் 245 bhp, 380 Nm செயல்திறன் கொண்டுள்ளது.
இரண்டு இன்ஜின்களிலும் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் 4MATIC ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆப்ஷன்களும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC பி.எம்.டபுள்டூ X3 மற்றும் ஆடி Q5 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.