என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் வெளியாக இருக்கும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்
    X

    விரைவில் வெளியாக இருக்கும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற மோட்டார் விழாவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறது. இதற்கான முன்பதிவுகள் செப்டம்பர் மாத இறுதியில் துவங்கும் என டெல்லியில் உள்ள விற்பனையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக 2016-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்-கிராஸ் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2017 மாருதி சுசுகி எஸ்-கிராஸ் முன்பக்கம் க்ரோம் ஃபின்ஷ் செய்யப்பட்ட பிரம்மாண்டமான கிரில் மற்றும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது. பி்ன்புறம் மெல்லிய எல்இடி டெயில் லேம்ப்களும் அழகிய அலாய் வீல்களும் வழங்கப்படுகிறது.

    மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் மாடலின் இன்டீரியர் அம்சங்களை பொருத்தவரை புதிய மெத்தைகள், டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் கூகுள் ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.   



    2017 எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்  88 hp மற்றும் 200 Nm டார்க்யூ கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் அதிகப்படியான வரவேற்பு இல்லாத நிலையில் இந்த மாடலில் 1.6 லிட்டர் DDiS 320 டீசல் இன்ஜின் வழங்கப்பட மாட்டாது.

    மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐந்து நிறங்களில் கிடைக்கு்ம என்றும் இதன் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் மாடல் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் ஹூன்டாய் கிரெட்டா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிசான் டெரானோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    Next Story
    ×