என் மலர்
செய்திகள்

டாடா டியாகோ XTA இந்தியாவில் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
இந்தியாவில் டாடா நிறுவனத்தின் டியாகோ XTA மாடல் கார் வெளியிடப்பட்டுள்ளது. புதிய காரில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவிநில் அமோக வரவேற்பை பெற்று வரும் டாடா டியாகோ புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் டியாகோவின் AMT பதிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகமாகி இருக்கும் புதிய மாடலான XTA விலை இந்தியாவில் ரூ.4.79 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.
இது டாடா டியாகோ டாப் என்ட் மாடலான XZA-வை விட ஒரு லட்சம் வரை குறைவு ஆகும். டியாகோ மேனுவல் மாடலை விட ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ.42,000 அதிகம் ஆகும். மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில், டியாகோ 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜி்ன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் 85ps செயல்திறன் மற்றும் 114Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. இதன் மைலேஜ் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் லிட்டருக்கு 23.84 கிலோமீட்டர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டியாகோ XZA நகரித்தில் லிட்டருக்கு 16.04 கிலோமீட்டரும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 22.04 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. புதிய XT மாடலில் அலாய் வீல், முன்பக்க ஃபாக் லேம்ப், ORVM மவுன்ட்டெட் டர்ன் இன்டிகேட்டர், ஸ்டீரிங் மவுண்ட் கட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.
இத்துடன் புதிய டியாகோ மாடலில் ரியர் வைப்பர், டீஃபாகர், மற்றும் EBD சார்ந்த ஆண்டி-லாக் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படவில்லை. டியாகோ மேனுவல் மாடலில் மட்டும் டூயல்-ஏர்பேக் அம்சம் வேண்டுமானால் பொருத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






