என் மலர்

  செய்திகள்

  மாருதி சுசுகி பலேனோ ஆல்ஃபா வெளியானது
  X

  மாருதி சுசுகி பலேனோ ஆல்ஃபா வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மாருதி சுசுகி பலேனோ ஆல்ஃபா ஆட்டோமேடிக் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஆல்பா சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் பிரபல ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றான மாருதி சுசுகி பலேனோ புதிய மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாடல் பலேனோ ஆல்ஃபா ஆட்டோமேடிக் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பலேனோ ஆட்டோமேடிக் மாடல்களான டெல்டா மற்றும் சீட்டா முறையே ரூ.7.34 லட்சம் மற்றும் ரூ.7.63 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  அக்டோபர் 2015-இல் வெளியிடப்பட்ட பலேனோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் யுனிட்களை ஒரு வருடத்திற்குள் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமில்லாமல் 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த பிரீமியம் மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.   ஜப்பான் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனம் சுமார் 68,000 யுனிட்களை ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பியா மற்றும் லத்தின் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 

  மாருதி சுசுகி பலேனோவில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS DOHC இன்ஜின் வழங்கப்படுகிறது. DDiS DOHC வகை இன்ஜின் மாருதி ஸ்விஃப்ட் மாடல்களுக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் பெட்ரோல் இன்ஜின் 84PS/115Nm செயல்திறன் வழங்குகிறது, 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் லிட்டருக்கு 21.4 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்தியாவில் புதிய மாருதி சுசுகி பலேனோ ஆல்ஃபா ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ.8.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  Next Story
  ×