என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து வாகனங்களிலும் ஸ்மார்ட்பிளே அப்டேட் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முன்னதாக அந்நிறுவனத்தின் சில வாகனங்களில் இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய டிசையர் மற்றும் இக்னிஸ் வாகனங்களில் ஸ்மார்ட்பிளே வசதியை வழங்கி இருந்தது. இந்நிலையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து வாகனங்களிலும் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் வசதியை வழங்க இருக்கிறது. 

    முதன் முதலில் மாருதி சுசுகி சியாஸ் மாடலில் ஸ்மார்ட்பிளே வசதி ஆப்பிள் கார் பிளே மூலம் வழங்கப்பட்டது. இதே சிஸ்டம் எஸ்-கிராஸ், விராட்டா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் பலெனோ ஆகிய மாடல்களில் வழங்கப்பட்டது. 

    புதிய அப்டேட் பெற மாருதி சுசுகி வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மட்டுமின்றி, நேவிகேஷன் வசதிகளை வழங்க புதிய செயலிகளையும் மாருதி சுசுகி வழங்க இருக்கிறது.



    ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே செயலிகள் இரு தளங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகளுக்கு இணைப்பு செயலிகளாக வேலை செய்கிறது. இந்த செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மெசேஜ் அல்லது அழைப்புகளை காரில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் இயக்க முடியும்.

    இந்தியாவில் ஆப்பிள் ஐஓஎஸ்-உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலான போட்டி நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே என இரண்டு வசதிகளையும் வழங்குகின்றன.

    மேலும் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹூன்டாய் நிறுவனங்கள் தங்களின் வாகனங்களில் மிரர்லின்க் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இவை சிறப்பான கனெக்டிவிட்டியாக இருந்தாலும், இது தேர்வு செய்யப்பட்ட சில சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும்.
    இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பிந்தைய காலத்தில் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 40 சதவிகிதம் வளர்ச்சியை ஜூன் மாதத்தில் பதிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஜூன் மாத காலத்தில் 40 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

    அந்தவகையில், 2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 3521 யுனிட்களை விற்பனை செய்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சுமார் 18 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு நிலவரப்படி மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை வளர்ச்சி 8.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, இந்த காலகட்டத்தில் மொத்தம் 7171 யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

    சர்வதேச சந்தைக்கு ஏற்ற வகையில் இந்திய வளர்ச்சி உள்ளது. அரையாண்டு நிலவரப்படி 1.14 மில்லின் யுனிட்களை விற்பனை செய்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் வளரச்சி 13.7 சதவிகிதமாக உள்ளது.   



    இந்த வளர்ச்சி மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை காம்பாக்ட் கார்களில் இருந்து செடான், எஸ்.யு.வி மற்றும் ஏ.எம்.ஜி. கார்களில் பதிவாகியுள்ளது. ஜனவரி முதல் ஜூன் 2017 வரையிலான காலகட்டத்தில் உலகின் ஆடம்பர கார்களின் பட்டியலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஒற்றை மாடலாக இ-கிளாஸ் செடான் இருந்துள்ளது.

    ஜனவரி முதல் ஜூன் 2017 காலகட்டத்தில் ஆடம்பர எஸ்.யு.வி. பிரிவில் GLA, GLC, GLE மற்றும் GLS மாடல்களில் மெர்சிடிஸ் வளரச்சி 31 சதவிகிதமாக உள்ளது. இதில், GLC அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்.யு.வி.ஆக உள்ளது. இதைத் தொடர்ந்து GLE, GLA மற்றும் GLS மாடல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது.
    பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ தனது வி90 கிராஸ் மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. வால்வோ வி90 கிராஸ், எஸ்90 செடான் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வால்வோ ஆட்டோ இந்தியா புதிய வி90 கிராஸ் மாடல் காரினை இந்தியாவில் வெளியிட தயாராகி விட்டது. வால்வோ எஸ்60 செடான் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள வி90 கிராஸ் ஜூலை 12-ந்தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. 

    இந்தியாவில் எஸ்டேட் அல்லது ஸ்டேஷன் வேகன் வடிமைப்பு கொண்ட மாடல்களுக்கு அதிக வரவேற்பு இல்லை என்றாலும், இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற ஸ்வீடன் கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. எஸ்டேட் வகை வடிவமைப்பில் செடான் வகையிலான ஆடம்பரத்தினை எஸ்.யு.வி. தர கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கியுள்ளது. 

    புதிய வால்வோ வி90 கிராஸ் பார்க்க பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் மினிமலிஸ்டிக் வடிவமைப்பு முறைகளை உள்ளடக்கியுள்ளது. எஸ்90 செடான் மாடலை தழுவிய மாடல் என்பதால் ஸ்டிரைக்கிங் கிரில் மற்றும் முழுமையான கொள்திறன் கொண்ட கார்கோ ஸ்பேஸ், தார் ஹேமர் எல்இடி DRL உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. 



    இத்துடன் வலிய பம்ப்பர்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், பெல்ட்-லைனில் பிளாஸ்டிக் பேக் கிளாடிங் மற்றும் அலுமினியம் ஃபினி்ஷ் கொண்ட ரூஃப் டெயில்களை கொண்டுள்ளது. காரின் நீலத்தை பொருத்த வரை எஸ்90 செடானில் 5082 மில்லி மீட்டர், புதிய வி90 4938 மில்லிமீட்டர் உள்ளது.   

    மற்ற வால்வோ எஸ்.யி.வி.க்களை போன்றே புதிய வி90 கிராஸ் கண்ட்ரி மாடலிலும் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்களும், 20-இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் புன்புறத்தில் 590 லிட்டர் கொள்திறன் உள்ள கார்கோ ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்புற இருக்கைகளை மடக்கினால் 1526 லிட்டர் ஆக கார்கோ ஸ்பேஸ் நீட்டிக்க முடியும். 

    கேபினுள் வால்வோ எஸ்90 மென்மையான டச், சென்டர் கன்சோலில் மிகப்பெரிய டேப்லெட் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் டூயல்-டோன் பினிஷ் செய்யப்பட்ட கலர் ஸ்கீம் மற்றும் டேன்-பிரவுன் லெதர் சீட், முழுமையான பிளாக் நிற டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. கேபினை சுற்றி சில்வர் பிரஷ்டு வடிவமைப்பு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. 



    வால்வோ வி90 கிராஸ் பவர் அம்சங்களில் 235 bhp திறன் கொண்ட 2-லிட்டர் டீசல் மோட்டார், 8-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மற்ற வால்வோ மாடல்களை போன்றே வி90 சிசி அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. வி90 கிராஸ் கன்ட்ரி மாடல் கடந்த ஆண்டு ஸ்வீடனில் வெளியிடப்பட்டதோடு நல்ல வரவேற்பையும் பெற்றது. 

    அடுத்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் வால்வோ வி90 கிராஸ் கன்ட்ரி விலை ரூ.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், ஜி.எஸ்.டி. வரிமுறையைத் தொடர்ந்து விலை சற்றே குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    வால்வோ வி90 கிராஸ் கன்ட்ரி அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,


    டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் மொபிலியோ எம்.பி.வி. விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் மொபிலியோ எம்.பி.வி. நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹோண்டா மொபிலியோ டொயோட்டா இன்னோவா மற்றும் மாருதி சுசுகியின் எர்டிகா மாடல்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. 

    எனினும் மந்தமான விற்பனை காரணமாக ஹோண்டா மொபிலியோ தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்துவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. மேலும் நாட்டின் அனைத்து விற்பனையாளர்களும் மொபிலியோ எம்.பி.வி.க்களை விற்பனை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

    தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய மொபிலியோ மாடலை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஹோண்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 



    ஹோண்டா மொபிலியோ மாடல் ப்ரியோவின் நீட்டிக்கப்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டது. ஹோண்டா மொபிலியோ பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் மாடல்களில் வெளியிடப்பட்டது. பிரபலமான பெட்ரோல் என்ஜினில் ஹோண்டா சிட்டி 119PS மற்றும் 145Nm வழங்கப்பட்டுள்ளது. டீசல் மோட்டார் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களில் வழங்கப்பட்ட 100PS/200Nm டியூனிங் கொண்டுள்ளது. 

    எனினும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய ஜி.எஸ்.டி வரிமுறைகளின் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா வழங்கி வருகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டேவியா 2017 செடான் மாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாடலில் வழங்கப்படவுள்ள வசதிகளை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஸ்கோடா நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட ஆக்டேவியா செடான் 2017 மாடல் விரைவில் இந்தியாவில் ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படலாம்.

    மேம்படுத்தப்பட்ட ஆக்டேவியா இன்டீரியர் பெரும்பாலும் மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புறத்தை பொருத்த வரை டூயல்-ஸ்ப்லிட் எல்இடி மின்விளக்குகலும், மாற்றியமைக்கப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல், மாற்றியமைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப் இடம்பெற்றுள்ளது. 



    காரின் உள்புறம் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, டூயல்-டோன் மெத்தைகள், பிரஷ்டு அலுமினியம்-எஃபெக்ட் பிளாஸ்டிக் டோர் பேட்ஸ், மிகப்பெரிய தொடுதிரை மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் கேபினுடன் இணைக்கப்பட்ட மிரர் லின்க் புதிய காருக்கு பிரீமியம் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    புதிய ஆக்டேவியா 1.4-லிட்டர் TSI பெட்ரோல் - ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.8-லிட்டர் 7-ஸ்பீட் DSG அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2.0 TDI டீசல் 6-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ல்மிஷன் மாடல்களில் வெளியாகிறது. 

    முந்தைய ஆக்டேவியா மாடல் இந்தியாவில் 2013-ம் ஆண்டு வெளியிட்டப்பட்டது. புதிய ஸ்கோடா ஆக்டேவியா தற்சமயம் இருப்பதை விட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றாலும், விலை ஜுலை 13-ந்தேதி அறிவிக்கப்படும்.
    ×