என் மலர்
செய்திகள்

வால்வோ வி90 கிராஸ்: இந்திய வெளியீட்டு தேதி உறுதியானது
பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ தனது வி90 கிராஸ் மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. வால்வோ வி90 கிராஸ், எஸ்90 செடான் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வால்வோ ஆட்டோ இந்தியா புதிய வி90 கிராஸ் மாடல் காரினை இந்தியாவில் வெளியிட தயாராகி விட்டது. வால்வோ எஸ்60 செடான் மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ள வி90 கிராஸ் ஜூலை 12-ந்தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் எஸ்டேட் அல்லது ஸ்டேஷன் வேகன் வடிமைப்பு கொண்ட மாடல்களுக்கு அதிக வரவேற்பு இல்லை என்றாலும், இந்த நிலையை முற்றிலுமாக மாற்ற ஸ்வீடன் கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. எஸ்டேட் வகை வடிவமைப்பில் செடான் வகையிலான ஆடம்பரத்தினை எஸ்.யு.வி. தர கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கியுள்ளது.
புதிய வால்வோ வி90 கிராஸ் பார்க்க பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் மினிமலிஸ்டிக் வடிவமைப்பு முறைகளை உள்ளடக்கியுள்ளது. எஸ்90 செடான் மாடலை தழுவிய மாடல் என்பதால் ஸ்டிரைக்கிங் கிரில் மற்றும் முழுமையான கொள்திறன் கொண்ட கார்கோ ஸ்பேஸ், தார் ஹேமர் எல்இடி DRL உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

இத்துடன் வலிய பம்ப்பர்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், பெல்ட்-லைனில் பிளாஸ்டிக் பேக் கிளாடிங் மற்றும் அலுமினியம் ஃபினி்ஷ் கொண்ட ரூஃப் டெயில்களை கொண்டுள்ளது. காரின் நீலத்தை பொருத்த வரை எஸ்90 செடானில் 5082 மில்லி மீட்டர், புதிய வி90 4938 மில்லிமீட்டர் உள்ளது.
மற்ற வால்வோ எஸ்.யி.வி.க்களை போன்றே புதிய வி90 கிராஸ் கண்ட்ரி மாடலிலும் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்களும், 20-இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் புன்புறத்தில் 590 லிட்டர் கொள்திறன் உள்ள கார்கோ ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பின்புற இருக்கைகளை மடக்கினால் 1526 லிட்டர் ஆக கார்கோ ஸ்பேஸ் நீட்டிக்க முடியும்.
கேபினுள் வால்வோ எஸ்90 மென்மையான டச், சென்டர் கன்சோலில் மிகப்பெரிய டேப்லெட் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் டூயல்-டோன் பினிஷ் செய்யப்பட்ட கலர் ஸ்கீம் மற்றும் டேன்-பிரவுன் லெதர் சீட், முழுமையான பிளாக் நிற டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. கேபினை சுற்றி சில்வர் பிரஷ்டு வடிவமைப்பு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

வால்வோ வி90 கிராஸ் பவர் அம்சங்களில் 235 bhp திறன் கொண்ட 2-லிட்டர் டீசல் மோட்டார், 8-ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மற்ற வால்வோ மாடல்களை போன்றே வி90 சிசி அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. வி90 கிராஸ் கன்ட்ரி மாடல் கடந்த ஆண்டு ஸ்வீடனில் வெளியிடப்பட்டதோடு நல்ல வரவேற்பையும் பெற்றது.
அடுத்த வாரம் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் வால்வோ வி90 கிராஸ் கன்ட்ரி விலை ரூ.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், ஜி.எஸ்.டி. வரிமுறையைத் தொடர்ந்து விலை சற்றே குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வால்வோ வி90 கிராஸ் கன்ட்ரி அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,
Next Story






