என் மலர்tooltip icon

    செய்திகள்

    விற்பனை மந்தம்: இந்தியாவில் ஹோண்டா மொபிலியோ விற்பனை நிறுத்தம்
    X

    விற்பனை மந்தம்: இந்தியாவில் ஹோண்டா மொபிலியோ விற்பனை நிறுத்தம்

    டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் மொபிலியோ எம்.பி.வி. விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் மொபிலியோ எம்.பி.வி. நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹோண்டா மொபிலியோ டொயோட்டா இன்னோவா மற்றும் மாருதி சுசுகியின் எர்டிகா மாடல்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது. 

    எனினும் மந்தமான விற்பனை காரணமாக ஹோண்டா மொபிலியோ தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்துவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. மேலும் நாட்டின் அனைத்து விற்பனையாளர்களும் மொபிலியோ எம்.பி.வி.க்களை விற்பனை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

    தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய மொபிலியோ மாடலை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஹோண்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 



    ஹோண்டா மொபிலியோ மாடல் ப்ரியோவின் நீட்டிக்கப்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டது. ஹோண்டா மொபிலியோ பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் மாடல்களில் வெளியிடப்பட்டது. பிரபலமான பெட்ரோல் என்ஜினில் ஹோண்டா சிட்டி 119PS மற்றும் 145Nm வழங்கப்பட்டுள்ளது. டீசல் மோட்டார் அமேஸ் மற்றும் சிட்டி மாடல்களில் வழங்கப்பட்ட 100PS/200Nm டியூனிங் கொண்டுள்ளது. 

    எனினும் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய ஜி.எஸ்.டி வரிமுறைகளின் நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா வழங்கி வருகிறது.
    Next Story
    ×