என் மலர்tooltip icon

    கார்

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இசட் எஸ் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு இந்திய சந்தையில் மீண்டும் துவங்கியுள்ளது.



    எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவுகளை மீண்டும் துவங்கியது. புதிய இசட் எஸ் எலெக்ட்ரிக் கார் புதிதாக ஆறு நகரங்களில் விற்பனைக்கு வருகிறது.

    இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ரூ. 20.88 லட்சம், எக்ஸ் ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், பெங்களூரு மற்றும் ஐதராபாத் என ஐந்து நகரங்களில் மட்டும் இதன் விற்பனை நடைபெற்று வந்தது.

    எம்ஜி ட்விட் ஸ்கிரீன்ஷாட்

    இந்நிலையில், புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனை பூனே, சூரத், கொச்சி, சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை என ஆறு புதிய நகரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இன்று (ஜூன் 1) முதல் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை எம்ஜி மோட்டார் விற்பனையகங்கள் அல்லது மை எம்ஜி ஆப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23.58 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி கார் விநியோகம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது.



    கொரோனா வைரஸ் ஊரடங்கில் நாடு முழுக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து டாடா நெக்சான் இவி மாடல் விநியோகம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது. அதன்படி புதிய காம்பேக்ட் எஸ்யுவி விநியோகம் தற்சமயம் பெங்களூரு, சென்னை மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நெக்சான் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு தழுவிய ஊரடங்கு துவங்கும் முன் இந்த காரின் முதற்கட்ட விநியோகம் துவங்கியது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநியோக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    டாடா நெக்சான் இவி விநியோகம்

    இந்தியாவில் நெக்சான் இவி இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.99 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.



    ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் (எஃப்சிஏ) நிறுவனம் ஜீப் ஃபார் ஆல் எனும் பெயரில் நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மிக எளிய மாத தவணை முறை வசதியை குறைந்த வட்டியில் வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ் பெண்களுக்கு 100 சதவீதம் ஆன்-ரோட் விலைக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது.

    இத்துடன் திடீரென வேலையின்மை, விபத்து அல்லது உடல் நலம் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் பட்சத்தில் காருக்கான கடன் தொகையில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த மாத தவணை வசதி முதல் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ்
     
    புதிய திட்டத்தின் மூலம் ஜீப் எஸ்யுவியை மேலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எஃப்சிஏ நம்புகிறது. குறைந்த வட்டி தொகை தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதற்கென ஜீப் மற்றும் தனியார் துறை வங்கிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் கடன் தொகையை ஏழு ஆண்டுகளுக்கு மாத தவணை முறையில் செலுத்தலாம். புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது எஃப்சிஏ-வின் புக் மை ஜீப் முன்பதிவு முனையத்திற்கு சென்று பயன்பெறலாம்.
    டேட்சன் நிறுவனம் இந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.



    இந்தியாவில் டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 2.83 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.77 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடலில் இரண்டு 800 சிசி பெட்ரோல் என்ஜின்கள், மூன்று சிலிண்டர் யூனிட் மற்றும் 999 சிசி மூன்று சிலிண்டர் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

    2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட்

    புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன. 

    டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கரோக் எஸ்யுவி மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய கரோக் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கோடா கரோக் மாடலின் விலை ரூ. 24.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஐந்து பேர் பயணிக்கக்கூடிய புதிய ஸ்கோடா கரோக் மாடல் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கோடியக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வேகன் டி ராக், கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஸ்கோடா கரோக்

    புதிய ஸ்கோடா கரோக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய கரோக் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 202 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா நிறுவனம் புதிய கரோக் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. புதிய கரோக் மாடலில் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், 17 இன்ச் அலாய் வீல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஒன்பது ஏர்பேக், மின்சாதன முறையில் 12 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
    ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய 1.3 லிட்டர் ஹெச்ஆர்13 என்ஜின் ஏற்கனவே 2020 நிசான் கிக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே என்ஜின் கொண்ட டஸ்டர் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    ரெனால்ட் டஸ்டர்

    முன்னதாக டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலின் வெளிப்புறம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காரின் முன்புற கிரில், ஃபாக் லேம்ப் ஹவுசிங், டெயில்கேட் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற இன்சர்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. புதிய டஸ்டரில் வழங்கப்பட இருக்கும் ஹெச்ஆர்13 1.3 லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் 156 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் டைம்லர் மற்றும் ரெனால்ட் நிசான் மிட்சுபிஷி இணைந்து உருவாக்கி இருக்கின்றன.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 டபிள்யூஆர் வி பிஎஸ்6 மாடல் கார் வெளியீட்டுக்கு முன் விற்னபனையகம் வந்திருக்கிறது.



    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விரைவில் மேம்பட்ட டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய 2020 டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.  

    புதிய ஹோண்டா டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் அறிமுகம் தாமதமானது. தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த கார் விரைவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    2020 ஹோண்டா டபிள்யூஆர் வி

    2020 ஹேண்டா டபிள்யூஆர் வி ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதன் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரின் வெளிப்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி புதிய முன்புற கிரில், எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், மேம்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஃபாக் லேம்ப், சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் இந்திய சந்தையில் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் நான்கில் மூன்று மாடல்கள் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகளவு டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    ஹூண்டாய் வென்யூ

    கடந்த நிதியாண்டு நிலவரப்படி ஹூண்டாய் வென்யூ மாடல் மொத்தம் 93,624 யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது. இவற்றில் 58,764 யூனிட்கள் பெட்ரோல் மாடல்கள் ஆகும். இவற்றில் 44,073 மாடல்கள் டர்போ பெட்ரோல் வேரியண்ட்கள் ஆகும்.

    இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ பெட்ரோல் வேரியண்ட்கள் விலை ரூ. 6.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 11.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

    ஹூண்டாய் வென்யூ டர்போ பெட்ரோல் வேரியண்ட் மேனுவல் மற்றும் டிசிடி டிரான்ஸ்மிஷன் விலை முறையே ரூ. 8.46 லட்சம் மற்றும் ரூ. 9.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    கார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
      


    மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்க அதிரடி நிதி சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் சோலமண்டலம் நிதி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. 

    இத்துடன் வாகனத்தின் ஆன் ரோடு விலையில் 90 சதவீதம் நிதி சலுகையும், நீண்ட கால மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கஸ்டமைஸ் செய்யக்கூடிய வகையில் நிதி சலுகைகளை வழங்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.

    மாருதி சுசுகி

    பை நௌ பே லேட்டர் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்கிய 60 நாட்கள் கழித்து மாத தவணையை செலுத்த முடியும். எனினும், இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

    மேலும் இது ஜூன் 30 ஆம் தேதிக்குள் கடன் தொகை உறுதி செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற சலுகையை அறிவித்து இருக்கின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் காரின் விற்பனை துவங்கியுள்ளது.

      

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையை துவங்கியுள்ளது. ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும் 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடலின் துவக்க விலை ரூ. 9.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எணஅட் மாடல் விலை ரூ. 13.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடல் விலை அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரடங்கு காரணமாக இதன் விற்பனை தாமதமாகி வந்தது. தற்சமயம் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதால், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பணிகளை மெல்ல துவங்கி வருகின்றன.

    புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. புதிய 2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

    அதன்படி புதிய காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய வெர்னா மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டி.ஆர்.எல். உள்ளிட்டவையும் மேம்பட்ட பம்ப்பர்கள், புதிய ORVMகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், மேம்பட்ட பூட் லிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட்

    காரின் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மல்டி ஃபங்ஷன் ஸ்டீரிங் வீல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்டர் கன்சோல் ஆம் ரெஸ்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்கிஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹூண்டாய் செடான் மாடல்- 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 பிஹெச்பி மற்றும் 172 என்எம் டார்க் மற்ற இரு என்ஜின்களும் 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.

    இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
    ஹோண்டா நிறுவனத்தின் 2020 செடான் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரின் விற்பனை கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தாமதமாகி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனமும் விற்பனையாகவில்லை. 

    இதுபோன்ற சூழ்நிலைகளால் தொடர்ந்து ஹோண்டா சிட்டி விற்பனை தாமதமாகி வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு நிறைவுற்றதும் ஹோண்டா சிட்டி விற்பனை துவங்கும் என தெரியவந்துள்ளது. 

    ஹோண்டா சிட்டி

    புதிய கார் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை. வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டதும், அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய சிட்டி மாடல் பெட்ரோல் என்ஜின் மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இவற்றை முற்றிலும் மறுக்கும் வகையில் 2020 ஹோண்டா சிட்டி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டிரைபர் ஏஎம்டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டிரைபர் எம்பிவி காரின் ஏஎம்டி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி மாடல் துவக்க விலை ரூ. 6.18 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி- ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலான ரெனால்ட் டிரைபர் ஆர்எக்ஸ்இசட் ஏஎம்டி விலை ரூ. 7.22 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மேனுவல் வெர்ஷனை விட ரூ. 40 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

    ரெனால்ட் டிரைபர்

    ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், ரெனால்ட் டிரைபர் விலை தற்சமயம் ரூ. 4.99 லட்சத்தில் துவங்கி ரூ.7.22 லட்சம் வரை கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    புதிய ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் யூனிட் தவிர ரெனால்ட் டிரைபர் மாடலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய எம்பிவி மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 63 பிஹெச்பி பவர், 91 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ×