என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா முன்பதிவுகள் 25 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் இந்த காரை வாங்க இத்தனை பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
விட்டாரா பிரெஸ்ஸா மாடல் மிக குறைந்த காலகட்டத்தில் இத்தகைய மைல்கல்லை எட்டியிருக்கிறது. மேலும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என மாருதி சுசுகி இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் டிசைன், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோ டிம் ஆகும் ஐஆர்விஎம்கள், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை வாங்க இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கும் முன் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனை துவங்கியது. புதிய இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் ஏற்கனவே 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துவிட்டது என மாருதி சுசுகி நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தனியார் நிறுவன பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மாருதி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் முன்னதாக நடைபெற்று முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய காரின் முன்புறம் கிரில் அப்டேட் செய்யப்பட்டு, க்ரோம் அக்சென்ட் மற்றும் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு சற்று பெரியதாக காட்சியளிக்கிறது.
இதன் டெல்டா வேரியண்ட்டில் கூடுதலாக ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங் செய்யப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வாய்ஸ் கமாண்ட் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பி.எஸ்.6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் டியுவி300 பிஎஸ்6 ஃபேஸ்லிப்ட் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன் டியுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. பின் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின.
2020 மஹிந்திரா டியுவி300 மாடல் மட்டுமின்றி டியுவி300 பிளஸ் மாடலின் வெளியீடும் தாமதமாகி உள்ளது. இரு மாடல்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரேமாதிரி வழங்கப்பட்டுள்ளது. டியுவி300 பிளஸ் மாடலில் அதிக இருக்கைகளுக்கு தேவையான இடவசதி மட்டும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் இரு மாடல்களும் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு மாடல்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய கிரில் மெல்லிய ஸ்லாட்கள், மேம்பட்ட பம்ப்பர் டிசைன், ஸ்போர்ட் வடிவமைப்பில் ஏர் டேம், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா டியுவி300 மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்படுகிறது. இது 98 பிஹெச்பி பவர், 240 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டியுவி300 பிளஸ் மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் எலான்ட்ரா செடான் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 15.89 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதால், எலான்ட்ரா மாடலின் துவக்க விலை அதிகமாகி உள்ளது. அதன்படி எலான்ட்ரா எஸ் மாடலுக்கு மாற்றாக எலான்ட்ரா எஸ்எக்ஸ் என்ட்ரி லெவல் மாடலாக மாறியுள்ளது. புதிய பேஸ் வேரியண்ட் முந்தைய எஸ் வேரியண்ட்டை விட ரூ. 3 லட்சம் விலை அதிகம் ஆகும்.

ஹூண்டாய் எலான்ட்ரா எஸ்எக்ஸ் விலை ரூ. 18.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெர்னா எஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை ஹூண்டாய் அறிவிக்கவில்லை. எனினும், ஹூண்டாய் இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுவிட்டது.
சமீபத்தில் ஹூண்டாய் எலான்ட்ரா மாடல் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்பட்டது. புதிய பிஎஸ்6 எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 150 பிஹெச்பி பவர், 192 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூண்டாய் எலான்ட்ரா 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டேட்சன் நிறுவனத்தின் ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருகிறது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
டேட்சன் நிறுவனம் தனது ஹேட்ச்பேக் மாடலான ரெடிகோ காரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்ய உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பி.எஸ் 6 புகை விதி சோதனையை பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய கார் ஹெட்லேம்ப் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல முன்புற கிரில் மிகவும் பெரிதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபாக் விளக்குகள் இதில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இரட்டை வண்ணங்களில் சக்கர கவர்கள் அழகிய தோற்றப்பொலிவை அளிக்கின்றன.

டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் ஆறு நிறங்களில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உள்புறம் 8 அங்குல தொடு திரைகொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டது. இரட்டை வண்ணத்திலான இருக்கைகள் சவுகரியமான பயணத்தை அளிக்கிறது.
பாதுகாப்பு அம்சமாக பயணிகள் பகுதியில் ஏர் பேக் கூடுதலாக உள்ளது. அதேபோல பின்புற பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் கேமரா வசதி உள்ளது. இது 0.8 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டதாகவும் 5 கியர்களை உடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமேடிக் கியர் டிரான்ஸ்மிஷன் வசதியோடு நான்கு மாடல்களில் இது வெளிவர உள்ளது. இந்தியாவில் மாருதி ஆல்டோ, ரெனால்ட் கிவிட், மாருதி எஸ் பிரஸ்ஸோ ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இது இருக்கும் என்பதால் விலையும் இந்த தயாரிப்புகளின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆடி நிறுவனத்தின் மூன்று கார் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் விநியோக விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது ஏ6 செடான், ஏ8 எல் செடான் மற்றும் கியூ8 எஸ்யுவி மாடல்களுக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது. மூன்று மாடல்களையும் வாடிக்கையாளர்கள் ஆடி ஆன்லைன் வலைதளத்தில் ரூ. 50 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
மூன்று ஆடி மாடல்களும் ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் முன்பதிவு மற்றும் விற்பனை நடைபெறாமல் இருந்தது. தற்சமயம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படுவதால், ஆடி நிறுவனம் மீண்டும் முன்பதிவை துவங்கியுள்ளது.

தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் மாடல்கள் ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆடி ஏ6 துவக்க விலை ரூ. 54.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டும் 45TFSI பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது.
புதிய ஆடி ஏ8 எல் மாடலில் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆடி கியூ8 மாடலிலும் ஏ8 எல் மாடலில் உள்ளது போன்று 3.0 லிட்டர் டர்போ வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பிஎஸ்6 கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரசி சலுகைகளை வழங்குகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெனால்ட் டஸ்டர், க்விட் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை மே 31 ஆம் தேதிக்குள் புதிய வாகனம் வாங்குவோருக்கானது என ரெனால்ட் தெரிவித்துள்ளது.
புதிய சலுகைகளில் ரெனால்ட் இந்தியா தள்ளுபடி, எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி போனஸ் மற்றும் சிறப்பு தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மேலும் இந்த மாடல்கள் 'பை நௌ பே லேட்டர்' எனும் பிரத்யேக நிதி திட்டத்திலும் வழங்கப்படுகிறது.

இந்த நிதி திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் புதிய ரெனால்ட் காரை உடனடியாக வாங்கிக் கொண்டு அதற்கான மாத தவணையை வாகனம் வாங்கிய தேதியில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகையின் கீழ் ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம், அதாவது ரூ. 15 ஆயிரம் உடனடி தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ. 25 ஆயிரம் லாயல்டி சலுகை ஆகும். இதேபோன்று ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகும்.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ், ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் ஆகும்.
ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்6 கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத கட்டணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு கார் பராமரிப்பு சேவையும் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஃபிரம் ஹோம் எனும் ஆன்லைன் விற்பனை மையம் மூலமாக சலுகைகளை பெற முடியும். கொரோனா பாதிப்பையொட்டி ஹோண்டா நிறுவனம் இந்த தளத்தினை துவங்கியது. ஹோண்டா நிறுவன பிஎஸ்6 மாடல்களுக்கு மே மாதம் 31 ஆம் தேதி வரை சலுகைகள், தள்ளுபடி மற்றும் பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் தள்ளுபடிகள் ஹோண்டா அமேஸ் மற்றும் சிட்டி போன்ற செடான் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும்.
புதிய சலுகையின் படி ஹோண்டா சிட்டி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்கியது. முதல் நாளில் இந்நிறுவனம் மொத்தம் 200 கார்களை உற்பத்தி செய்திருக்கிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆலையில் நடைபெற்று வந்த பணிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், உற்பத்தி பணிகளை ஹூண்டாய் மீண்டும் துவங்கியுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 200 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசுகள் வெளியிட்ட வழிமுறைகளின்படி ஆலை பணிகளின் போது சமூக இடைவெளி 100 சதவீதம் பின்பற்றப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கி இருப்பதால், ஹூண்டாய் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் நாடு முழுக்க 255 விற்பனையகங்களில் பணிகளை மீண்டும் துவங்கியது. இதுதவிர இரண்டே நாட்களில் 170 யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
நிசான் நிறுவனத்தின் புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனம் இந்தியாவில் புதிய கிக்ஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்யுவி மாடலில் பல்வேறு அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நிசான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல் நான்கு வேரியண்ட்கள் மற்றும் இரு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் ஸ்டாண்டர்டு வாரண்டி பேக்கேஜுடன் வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகள் வாரண்டி அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டியை வழங்குகிறது. கூடுதலாக வாரண்டியை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்க்படுகிறது.

என்ஜினை பொருத்தவரை புதிய கிக்ஸ் எஸ்யுவி என்ட்ரி லெவல் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. டர்போ பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பிரீமியம் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.
புதிய கிக்ஸ் பிஎஸ்6 மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் டூயல் டோன் இன்டீரியர் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அங்கீகார வசதி மற்றும் நிசான் கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ10 கிராண்ட் நியோஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ10 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.75 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்6 டீசல் என்ஜின் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் மூன்று வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஆஸ்டா வேரியண்ட் விலை ரூ. 8.04 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் வேரியண்ட் விலை ரூ.7.90 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 74 பிஹெச்பி பவர், 190 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மேம்பட்ட என்ஜின் தவிர காரின் வடிவமைப்பு முழுக்க பிஎஸ்4 மாடலில் உள்ளது போன்றே வழங்கப்பட்டுள்ளது. இதில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஹூண்டாய் சாண்ட்ரோ கார் இந்திய சந்தையில் பேஸ் மாடலாக இருக்கிறது. புதிய கார் சான்ட்ரோ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்வதற்கான ஆய்வினை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார்.
புதிய என்ட்ரி லெவல் மாடல் மைக்ரோ எஸ்யுவியாக இருக்கும் என்றும் இது மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஹூண்டாயின் புதிய என்ட்ரி லெவல் மாடல் இந்திய வாடிக்கையாளர்களில் முதல் முறை கார் வாங்குவோரை கவரும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் ஹேட்ச்பேக் பிரிவு அதிக விற்பனையை பெற்று வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, நியோஸ் மற்றும் ஐ10 கிராண்ட் உள்ளிட்டவை அதிக விற்பனையாகி இருக்கிறது.
இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் இயான் ஹேட்ச்பேக் மாடலை விற்பனை செய்து வந்தது. எனினும், இந்த மாடலின் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.






