என் மலர்tooltip icon

    பைக்

    பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பல்சர் 250 சீரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் 250 மோட்டார்சைக்கிளை அக்டோபர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த மாடலுக்கான டீசர் வீடியோவை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய பல்சர் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    பஜாஜ் பல்சர் 250 மாடல் செமி பேர்டு டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பூமராங் போன்ற டி.ஆர்.எல்.கள், ட்வின் ஸ்ட்ரிப் எல்.இ.டி. டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

     பஜாஜ் பல்சர் 250

    புதிய பல்சர் 250 மாடலில் 250சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் ஏர் / ஆயில் கூல்டு யூனிட் ஆகும். இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் யூனிட் மற்றும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
    கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஆர்.சி.200 மோட்டார்சைக்கிள் 199.5சிசி என்ஜின் கொண்டிருக்கிறது.


    சர்வதேச சந்தையை தொடர்ந்து 2022 கே.டி.எம். ஆர்.சி.200 இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது. இந்தியாவில் புதிய 2022 கே.டி.எம். ஆர்.சி.200 விலை ரூ. 2.09 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது அறிமுக விலை தான், விரைவில் இது மாற்றப்படும்.

    2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், பெரிய எல்.சி.டி. கன்சோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., முற்றிலும் புதிய சேசிஸ், மேம்பட்ட எர்கோனமிக், எலெக்டிரானிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் கிராண்ட் ப்ரிக்ஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

     2022 கே.டி.எம். ஆர்.சி.200

    புதிய 2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் 199.5சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. திறன், 19.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    அப்ரிலியா இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 முழுமையான எல்.இ.டி. லைட்டிங் கொண்டிருக்கிறது.


    அப்ரிலியா இந்தியா நிறுவனம் புத்தம் புதிய ஆர்.எஸ்660 மோட்டார்சைக்கிளை செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி ஒரு மாதம் கழித்து இந்த மோட்டார்சிக்கிளின் வினியோகம் துவங்கி இருக்கிறது. இதுபற்றிய தகவல் அப்ரிலியா இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 விலை ரூ. 13.39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 659சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த என்ஜின் 98.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 

     அப்ரிலியா ஆர்.எஸ்.660

    அப்ரிலியா ஆர்.எஸ்.660 மாடலில் பாதுகாப்பிற்கு குரூயிஸ் கண்ட்ரோல், 3-லெவல் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    புதிய ஆர்.எஸ்.660 மாடலில் டூயல்-பாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப், புல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அபெக்ஸ் பிளாக், லாவா ரெட் மற்றும் ஆசிட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
    ரெவோல்ட் நிறுவனத்தின் புதிய ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.


    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலான ஆர்.வி.400 முன்பதிவுகளை மீண்டும் துவங்க இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 முன்பதிவு அக்டோபர் 21 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்தியா முழுக்க 70 நகரங்களில் இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு நடைபெற இருக்கிறது.

    அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேலும் 64 புதிய நகரங்களில் ரெவோல்ட் தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளது. தற்போது டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ரெவோல்ட் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. 

     ரெவோல்ட் ஆர்.வி.400

    புதிய ரெவோல்ட் ஸ்டோர்களில் விற்பனை மட்டுமின்றி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு, சார்ஜிங் செட்டப் நிறுவும் முறை மற்றும் இதர விவரங்கள் வழங்கப்பட இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும். 

    ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் மேக்னஸ் இ.எக்ஸ். பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் மேக்னஸ் இ.எஸ். என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 68,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

    புதிய ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ். மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1200 வாட்ஸ் மோட்டார் இந்த பிரிவு வாகனங்களில் இதுவரை வழங்கப்படாத ஒன்று ஆகும். 

    மேக்னஸ் இ.எக்ஸ்.

    இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 10 நொடிகளில் எட்டிவிடும். இதில் இகோ மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    டிரையம்ப் நிறுவனத்தின் புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் யு.எஸ்.பி. சார்ஜிங் சாக்கெட் கொண்டிருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.1 பி.ஹெச்.பி. திறன், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     டிரையம்ப் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர்

    இந்த மாடலில் முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310 எம்எம் டிஸ்க், பின்புறம் 255 எம்எம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. 

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்பட புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடல் விலை ரூ. 69,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், க்ரோம் இன்சர்ட்கள், பேக்ரெஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஜூபிலண்ட் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

     ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக்

    இத்துடன் ஹீரோ நிறுவனத்தின் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு அழைப்புகள், எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், போன் பேட்டரி விவரம், சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆப் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. திறன், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
    பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.


    பஜாஜ் நிறுவனம் பல்சர் 250 மோட்டார்சைக்கிளை அக்டோபர் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் நேக்கட் மற்றும் செமி பேர்டு என இரு மாடல்களில் உருவாகி இருக்கிறது.

    பல்சர் 250 மாடல் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்.எஸ்.200 மாடலுக்கு மாற்றாக அமையும் என தெரிகிறது. புதிய 250 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பல்சர் 220 விற்பனை செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

     பஜாஜ் மோட்டார்சைக்கிள்

    புதிய பல்சர் 250 மாடலில் புல் எல்.இ.டி லைட்டிங், டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதில் வழங்கப்படும் 250சிசி என்ஜின் பற்றி எந்த தகவலும் இல்லை. எனினும், இது 24 பி.ஹெச்.பி. திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது புதிய சி400 ஜிடி ஸ்கூட்டர் இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.

    அறிமுகமானதும் இந்திய சந்தையின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி பெறும். தற்போதைய தகவல்களின்படி பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் வரிகள் சேர்க்கப்படாமல் இந்தியாவில் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

     பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி

    பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலில் 350 சிசி, சிங்கில் சிலிண்டர், வாட்டர் கூல்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். புதிய பி.எம்.டபிள்யூ. ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்டிஆர் 160 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் புதிய ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மூன்று ரைட் மோட்கள் உள்ளன. 

    இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச், பிரேக் லீவர்கள், பிரத்யேக பிளாக் நிறம், சிவப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய சீட் கொண்டிருக்கிறது. புதிய ஆர்டிஆர் 160 4வி மாடலில் டிவிஎஸ் SmartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

     அபாச்சி ஆர்டிஆர் 160 4வி

    இந்தியாவில் புதிய டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் விலை ரூ. 1,15,265 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,21,372 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாடல் ரேசிங் ரெட், மெட்டாலிக் புளூ மற்றும் நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 4வி மோட்டார்சைக்கிள் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,28,150 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய ஹீரோ மோட்டார்சைக்கிளில் 4 வால்வுகள் கொண்ட 200சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.8 பி.ஹெச்.பி. திறன், 17.35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

     ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி

    மெக்கானிக்கல் மாற்றங்கள் மட்டுமின்றி இந்த மாடல் புதிதாக- டிரெயில் புளூ, ப்ளிட்ஸ் புளூ மற்றும் ரெட் ரெயிட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்ட்டர் மற்றும் என்ஜின் கட்-ஆப் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது. இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஜூப்பிட்டர் 125 சிசி ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி புதிய ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 73,400, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 மாடலில் 124.8சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. திறன், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புதிய ஜூப்பிட்டர் மாடலில் 12 இன்ச் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     டிவிஎஸ் ஜூப்பிட்டர்

    இத்துடன் 32 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ், முன்புறம் குளோவ் பாக்ஸ், யு.எஸ்.பி. சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 மாடல் சுசுகி அக்சஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×