என் மலர்
நீங்கள் தேடியது "Bajaj Pulsar F250"
- இந்த பைக் மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
- சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது 2024 பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பல்சர் F250 விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த பைக் பல்சர் NS400Z மாடலின் சர்வதேச வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பைக்கின் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தோற்றத்தில் இந்த பைக் அதன் 2023 வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த பைக் முற்றிலும் புதிய பிளாக் நிறம் பூசப்பட்டு ரெட் மற்றும் வைட் நிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 2023 மற்றும் 2024 மாடல்களை வித்தியாசப்படுத்தும் வகையில் உள்ளது.
இதுதவிர புதிய 2024 பைக்கில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய F250 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படுகிறது. இந்த பைக்- ரெயின், ரோட் மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
2024 பல்சர் F250 மாடலில் 259.07சிசி, ஆயில் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது 3 பைக்குகளின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தில் Platina 110 ABS, CT125X, Pulsar F250 ஆகிய மூன்று பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.72,224 ஆக நிர்ணயிக்கப்பட்டது. CT125X பைக்கின் விலை ரூ.71,354 - ரூ.74,554 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.
தற்போது இந்த பைக்குகளின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் பஜாஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.






