என் மலர்
பைக்
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் கடும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இது சாத்தியமானது என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் 2022 நிதியாண்டு இறுதியில் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும் என ஹீரோ எலெக்ட்ரிக் நம்பிக்கை தெரிவித்தது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா மற்றும் என்.வை.எக்ஸ். மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹீரோ எலெக்ட்ரிக் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
டுகாட்டி நிறுவனத்தின் ஹைப்பர்மோட்டார்ட் 950 பி.எஸ்.6 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டை அறிவிக்கும் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின்படி டுகாட்டி நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
ஏற்கனவே யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிள் சில சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 937சிசி டுகாட்டி டெஸ்டாஸ்டிரெட்டா 11 டிகிரி, வி ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 112.4 பி.ஹெச்.பி. திறன், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பி.எஸ்.6 வெர்ஷனும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் ஹைப்பர்மோட்டார்ட் 950- ஹைப்பர்மோட்டார்ட் 950, ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ. மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் 950 எஸ்.பி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் லிமிடெட் எடிஷன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் லிமிடெட் எடிஷன் ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
உலகம் முழுக்க டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடல் மொத்தத்தில் 800 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. பாஸ்ட்-ஹவுஸ் மற்றும் டுகாட்டி நிறுவனங்களின் கூட்டணியை கொண்டாடும் வகையில் லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் 803சிசி, ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கயபா சஸ்பென்ஷன், ஆப்-ரோடு சார்ந்த பூட் பெக், கழற்றக்கூடிய ரப்பர் பேட்கள், பிளாக் நிற ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி பணிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சீரிஸ் மாடல்களை உற்பத்தி செய்ய துவங்கியது. ஓலா எஸ்1 சீரிஸ் டெஸ்ட் ரைடுகள் நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக உற்பத்தி பணியில் பெண் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோவை ஓலா எலெக்ட்ரிக் வெளியிட்டது.
இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 121 கிலோமீட்டர் மற்றும் 181 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இரு ஸ்கூட்டர்களும் முறையே அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் மற்றும் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
கவாசகி நிறுவனத்தின் 2022 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அடுத்த மாதம் வினியோகம் செய்யப்படுகிறது.
கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2022 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் கேண்டி லைம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11.55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான வினியோகம் நவம்பர் மாத மத்தியில் துவங்குகிறது.
புதிய 2022 வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளில் 1043சிசி, இன்-லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 102 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை கவாசகியின் 2022 வெர்சிஸ் 1000 மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், கவாசகி கார்னெரிங் மேனேஜ்மண்ட், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் கவாசகியின் கே-கேர் பேக்கேஜ் பலன்களை பெறுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் சீரிசை இந்தியாவில் அப்டேட் செய்தது. இந்திய சந்தையில் பல்சர் என்250 மற்றும் எப்250 என இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களிலும் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் புல் எல்.இ.டி. லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், சைடு-ஸ்லிங் டூயல் பாரெல் எக்சாஸ்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் விற்பனை டச் பாயிண்ட்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2022 நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுக்க ஆயிரம் விற்பனை டச் பாயிண்ட்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுக்க 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.
விற்பனை மையங்கள் மட்டுமின்றி உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய நிதியாண்டில் விற்பனை இருமடங்கு அதிகரிக்கும் என தெரிகிறது.

தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அடிரா, பிளாஷ், ஆப்டிமா ஹெச்.எக்ஸ். மற்றும் என்.வை.எக்ஸ். ஹெச்.எக்ஸ். போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைவில் வினியோகம் செய்ய இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் டெஸ்ட் ரைடை துவங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய தகவல்களின்படி ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களின் டெஸ்ட் ரைடு நவம்பர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
டெஸ்ட் ரைடு மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஹைப்பர்-சார்ஜரை அந்நிறுவனத்தின் நிறுவனர் பாவிஷ் அகர்வால் அறிவித்தார். முன்பதிவில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் இதுவரை ரூ. 1,100 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்தது. பின் இதற்கான முன்பதிவு ஒரு மாதம் கழித்து தொடங்கியது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூரிங் அக்சஸரீக்களுடன் விற்பனைக்கு வந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் டூரிங் அக்சஸரீக்கள் பிட்டிங்குடன் வழங்கப்படுகிறது. புதிய டாமினர் 400 விலை ரூ. 2.17 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய டாமினர் 400 மாடலில் பேக்டரி-பிட் செய்யப்பட்ட டால் வைசர், ஹேண்ட் கார்டு, பேக் ரெஸ்ட் மற்றும் லக்கேஜ் கேரியர் உள்ளது. இத்துடன் என்ஜின் பேஷ் பிளேட், இண்டகிரேட் செய்யப்பட்ட மெட்டல் ஸ்கிட் பிளேட், புதிய லெக் கார்டு சேடில் ஸ்டே, மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அக்சஸரீக்கள் தவிர டாமினர் 400 மெக்கானிக்கல் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய டாமினர் 400 மாடலிலும் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 39.42 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
டிவிஎஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ரேடியான் மாடலை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி ரேடியான் மாடல் தற்போது ரெட் மற்றும் பிளாக் மற்றும் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு நிறங்களிலும் டூயல் டோன் பியூவல் டேன்க் தவிர மோட்டார்சைக்கிள் முழுக்க பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.
பக்கவாட்டில் மட்டும் புளூ அல்லது ரெட் நிற பெயிண்ட் செய்யப்படுகிறது. புதிய டூயல் டோன் நிறம் தவிர ரேடியான் மாடலின் என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் போன்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் டோன் மாடல்களின் விலை மற்ற வேரியண்ட்களை விட விலை அதிகம் ஆகும். டிவிஎஸ் ரேடியான் டிரம் வேரியண்ட் விலை ரூ. 68,982 ஆகும். இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 71,982 ஆகும்.
புதிய நிறங்கள் சேர்த்து டிவிஎஸ் ரேடியான் மாடல் மொத்தம் பத்து நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பண்டிகை காலம் துவங்க இருப்பது மற்றும் ரேடியான் மாடலின் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையை அனுசரிக்கும் வகையில் புதிய நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நிறம் ஸ்கார்லெட் ரெட் என அழைக்கப்படுகிறது. முன்புற பேனல், புளோர்போர்டு பேனல் மற்றும் முன்புற பென்டர் முழுக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது.
ஸ்கூட்டரின் பின்புறம் மேட் பிளாக் நிறம் பூசப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட், புளூ மற்றும் கிரே ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் சேர்த்து மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஏழு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 110சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 8.15 பி.ஹெச்.பி. திறன், 8.75 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடல் விலை ரூ. 65,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 66,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முழு கட்டண வசூலை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இரு ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். ஓலா ஸ்கூட்டர் மாடல்களுக்கான முழு கட்டணத்தை நவம்பர் 10 ஆம் தேதி செலுத்தினால் போதும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களை நவம்பர் 10 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்யலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முழு தொகை செலுத்தியதும் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் ரைடு மற்றும் டெலிவரி தாமதமாகி வருவதை பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இரு ஸ்கூட்டர்களின் வினியோகம் அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருந்தது. தற்போதைய அறிவிப்பின் படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீபாவளிக்கு பின் வினியோகம் செய்யப்படுகிறது.






