என் மலர்tooltip icon

    பைக்

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 அபாச்சி ஆர்.டி.ஆர்.200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி இந்திய சந்தையில் 2022 அபாச்சி ஆர்.டி.ர்.200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1,33,840 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வேரியண்ட் விலை ரூ. 1,38,890 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022 மாடலில் புதிய ஹெட்லேம்ப் டிசைன், இண்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல். வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் செட்டப் தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி

    2022 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர்.200 4வி மாடலில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கின்றன. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா முன்புற சஸ்பென்ஷன், ஷோவா மோனோ ஷாக் யூனிட், டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்சோனெக்ட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக், கிளட்ச் லீவர்கள் உள்ளன.

    இந்த மாடலில் 197.75சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. திறன், 16.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    கவாசகி நிறுவனம் அடுத்த ஆண்டில் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    கவாசகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கவாசகி நிறுவனம் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இதைத் தொடர்ந்து 2025 ஆண்டு வாக்கில் மேலும் ஏழு எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கவாசகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ப்ரோடோடைப் மாடல் வீடியோவை வெளியிட்டது. 

     கவாசகி எலெக்ட்ரிக் வாகனம்

    இதைத் தொடர்ந்து ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடலின் வீடியோவையும் கவாசகி வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு மே மாதத்தில் கவாசகி நிறுவனம் இ பூஸ்ட் எனும் பெயரை பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்த சில மாதங்களில் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அடுத்த மாடல் ஹிமாலயன் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை தழுவி உருவாகி இருக்கும் சற்றே குறைந்த விலை/ரோடு சார்ந்த வேரியண்ட் என கூறப்படுகிறது.

    புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஸ்கிராம் 411 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    ஸ்கிராம் 411 மாடலை தொடர்ந்து மேலும் சில புதிய மாடல்களை 2022 ஆண்டில் அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஸ்கிராம் 411 மாடல் ஹிமாலயன் அட்வென்ச்சர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
    பவுன்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    பவுன்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இன்பினிட்டி பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பவுன்ஸ் இன்பினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் அறிமுக நிகழ்வை தொடர்ந்து துவங்க இருக்கிறது. வினியோகம் அடுத்த ஆண்டு துவங்குககிறது. புதிய பவுன்ஸ் இன்பினிட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

     பவுன்ஸ் இன்பினிட்டி

    பவுன்ஸ் நிருவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டமைத்து இருக்கிறது. தென்னிந்தியாவில் மற்றொரு ஆலையை கட்டமைத்து உற்பத்தியை அதிகப்படுத்தவும் பவுன்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இரு ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு பற்றி அந்நிறுவனம் புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெஸ்ட் ரைடு திட்டத்தை இம்மாதம் துவங்கியது. எனினும், தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே டெஸ்ட் ரைடு நடைபெற்று வந்தது. 

    இந்த நிலையில், நாடு முழுக்க ஆயிரம் நகரங்கள் மற்றும் டவுன்களில் டெஸ்ட் ரைடு திட்டத்தை நீட்டிக்க இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன டெஸ்ட் ரைடு திட்டமாக இது அமைகிறது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    முன்னதாக ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இரு ஸ்கூட்டர்களுக்கான வினியோகம் இம்மாதமே துவங்க இருக்கிறது. 
    டுகாட்டி நிறுவனத்தின் புதிய பணிகல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி நிறுவனம் பணிகேல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பணிகேல் வி4 எஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் டுகாட்டி பணிகேல் வி4எஸ் விலை ரூ. 28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஒட்டுமொத்த தோற்றத்தில் பணிகேல் வி4எஸ்.பி. மாடல் பணிகேல் வி4எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய வி4 எஸ்.பி. மாடலில் விண்டர் டெஸ்ட் லிவெரி கொண்டிருக்கிறது. பணிகேல் வி4 எஸ்.பி. மாடலில் மார்ஷெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் மற்றும் பைரெளி டையப்ளோ சூப்பர்கோசா எஸ்.பி. டையர்கள் வழங்கப்படுகிறது.

     டுகாட்டி பணிகல் வி4 எஸ்.பி.

    புதிய டுகாட்டி பணிகேல் வி4 எஸ்.பி. மாடலிலும் 1103சிசி, டெஸ்மோடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. திறன், 124 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஓலின்ஸ் மற்றும் பிரெம்போ சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எஸ்.பி. மாடலில் குவிக்‌ஷிப்டர், ரைடிங் மற்றும் பவர் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் போன்ற எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சுசுகி அவெனிஸ் 125 விலை ரூ. 86,700 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர், சைடு ஸ்டாண்டு இண்டர்லாக் போன்ற அம்சங்கள் உள்ளன. சுசுகி அவெனிஸ் மாடலில் 125சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி அவெனிஸ் 125

    புதிய சுசுகி அவெனிஸ் மாடல் கிரே, ஆரஞ்சு, வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 87,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்களின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் 250 முதல் யூனிட் நவம்பர் 15 ஆம் தேதி வினியோகம் செய்யப்பட்டது. புதிய பல்சர் என்250 மற்றும் எப்250 மாடல்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

    புதிய பல்சர் மாடல்களில் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     பஜாஜ் பல்சர் 250

    இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    அப்ரிலியா நிறுவனத்தின் புதிய எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.


    அப்ரிலியா இந்தியா நிறுவனம் 2022 எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 1,07,595 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. புதிய ஸ்கூட்டர்களில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 மாடல்- ஸ்டாண்டர்டு, கார்பன் மற்றும் ரேஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 விலை ரூ. 1,17,494 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     அப்ரிலியா எஸ்.ஆர். 125

    அப்ரிலியா எஸ்.ஆர்.125 மாடலில் 124.45சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு, 3 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.78 பி.ஹெச்.பி. திறன், 9.70 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    எஸ்.ஆர். 160 மாடலில் 160.03 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, 3 வால்வுகள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.86 பி.ஹெச்.பி. திறன், 11.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    ஹோண்டா நிறுவனம் கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 87,138 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் மாடலில் ரேசிங் டீம் சார்ந்த கிராபிக்ஸ், டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆரஞ்சு வீல் ரிம்கள் உள்ளன. ஸ்கூட்டரின் வெளிப்புறம் ரெப்சால் ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கின்றன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஹோண்டா கிரேசியா 125

    அதன்படி கிரேசியா 125 ஹோண்டா டீம் எடிஷன் மாடலில் அப்ரான்-மவுண்ட் செய்யப்பட்ட எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டகிரேட் செய்யப்பட்ட பாஸ் லைட் ஸ்விட்ச், சைடு-ஸ்டாண்டு இண்டிகேட்டர், என்ஜின் கட்-ஆப் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த ஸ்கூட்டரின் பின்புறம் 3-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய போர்க், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய புது பிராண்டு உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை 'ஹீரோ' பிராண்டிங்கில் விற்பனை செய்ய முடியாது. இதற்கான காப்புரிமையை ஹீரோ சைக்கிள்ஸ் வைத்திருக்கிறது. 

    எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புது பெயரை ஹீரோ மோட்டோகார்ப் தேடி வந்தது. இந்த நிலையில், 'விடா எலெக்ட்ரிக்' எனும் பெயரை பயன்படுத்த உரிமை கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. விடா என்றால் உயிர் என்று பொருள்படும். இதனால், இதே பெயர் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணை பிராண்டாக மாறலாம் என கூறப்படுகிறது.

     ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியீட்டை மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது. இவை எந்த பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன, பிராண்டிங் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவை மர்மமாகவே இருக்கின்றன.
    சூர்த் நகரை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசு வழங்கி இருக்கிறது.


    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஒருபக்கம், வட இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சூரத்-ஐ சேர்ந்த அலையன்ஸ் குரூப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அசத்தலான தீபாவளி பரிசை வழங்கி இருக்கிறது. 

    பெட்ரோல் விலை உயர்வு மற்றும் காற்று மாசு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை தனது ஊழியர்களுக்கு பரிசாக வழங்கி இருக்கிறது. ஒகினவா நிறுவனத்தின் பிரைஸ் ப்ரோ மாடல் அந்நிறுநனத்தின் 35 ஊழியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 76,848 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

    சுபாஷ் தவர்

    'பெட்ரோல் விலை உயர்வு மற்றும் இதர காரணங்களை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பரிசளிக்க திட்டமிட்டோம். இதன் மூலம் எரிபொருளுக்கான கட்டணம் குறைவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நிறுவனமும் பங்கெடுக்க வாய்ப்பாக அமைந்துள்ளது,' என அலையன்ஸ் குரூப் இயக்குனர் சுபாஷ் தவர் தெரிவித்தார்.
    ×