என் மலர்
பைக்
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய ஆர்.சி. 125 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
புதிய 2022 கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல் அக்டோபர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்கள் தாமதமாகி புதிய ஆர்.சி. 125 தற்போது விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இந்தியாவில் 2022 கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1.82 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலின் எடை முந்தைய மாடலை விட 3.4 கிலோ வரை குறைவாக இருக்கிறது. இதில் 13.7 லிட்டர் பியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய ஏர்பாக்ஸ் உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 2022 கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலில் புதிய எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், முன்புறம் 320 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல் யமஹா ஆர்.15 எஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
கே.டி.எம். நிறுவனம் தனது புதிய 390 அட்வென்ச்சர் ரேலி மோட்டார்சைக்கிளை இந்தியாவின் வட மாநிலங்களில் சோதனை செய்து வருகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதோனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் மேம்பட்ட மாடல் ஆகும்.
தற்போது விற்பனை செய்யப்படும் 390 அட்வென்ச்சர் மாடலை விட புதிய அட்வென்ச்சர் ரேலி மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முன்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஹெட்லேம்ப் சற்றே உயரமாக பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற கவுல் அளவில் பெரியதாகவும், உயரமான விண்ட்ஸ்கிரீன், டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் ரேலி மாடலிலும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 43 பி.ஹெச்.பி. திறன், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் ஸ்கிராம் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் ஸ்கிராம் மோட்டார்சைக்கிள் விளம்பர படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக கூறி புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு கோவா-வில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தகவல்களின்படி ஸ்கிராம் 411 மாடலின் ஹெட்லைட் மாஸ்க், ஹேண்ட்கார்டுகள், மெட்டல் ஆயில் கூலர் ஷிரவுட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் நிறமும் தற்போதைய ஹிமாலயன் மாடல்களில் இருப்பதை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

புதிய ஸ்கிராம் 411 மாடலிலும் 411சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 24.31 பி.எஸ். பவர், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411 விலை ஹிமாலயன் மாடலை விட ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை குறைவாக இருக்கும் என தெரிகிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ஜூப்பிட்டர் 110 ஸ்கூட்டர் விலையை திடீரென மாற்றியது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஜூப்பிட்டர் 110 சிசி ஸ்கூட்டர் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 600 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஜூப்பிட்டர் 110 புதிய விலை பட்டியல்
ஷீட் மெட்டல் ரூ. 66,273
ஸ்டாண்டர்டு 69,298
இசட்.எக்ஸ். டிரம் பிரேக் ரூ. 72,773
இசட்.எக்ஸ். டிஸ்க் பிரேக் ரூ. 76,573
கிளாசிக் ரூ. 76,543

டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 110 மாடல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் வெளிப்புறம் பியூவல் பில்லர் கேப், பெரிய பூட்போர்டு, 21 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் 109.7 சிசி, ஏர்-கூல்டு என்ஜின், சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.37 பி.ஹெச்.பி. திறன், 8.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டி.வி.எஸ். ஜூப்பிட்டர் 110 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இவற்றில் ஸ்கிராம் 411 மற்றும் ஹண்டர் 350 உள்ளிட்டவை முதலில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது.
தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஒற்றை இருக்கை கொண்ட ஹண்டர் 350 கிட்டத்தட்ட அதன் ப்ரோடோடைப் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

புதிய ஹண்டர் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட 349சிசி என்ஜினே புதிய ஹண்டர் 350 மாடலிலும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 22 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் சிம்பில் எனர்ஜி உலகின் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைத்து வருகிறது.
சிம்பில் எனர்ஜி நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே ரூ. 2500 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி சிம்பில் எனர்ஜி நிறுவனம் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
உற்பத்தி பணிகளை துவங்க சிம்பில் எனர்ஜி முதற்கட்டமாக ஓசூரில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் முதல் ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஆலை 2022 துவக்கத்தில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

தமிழ அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி சிம்பில் எனர்ஜி நிறுவனம் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி முதலீட்டில் தனது இரண்டாவது ஆலையை உருவாக்கும் பணிகளை துவக்க இருக்கிறது. இந்த ஆலை 600 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது. இது 2023 ஆம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டுக்கு வரும்.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புதிய ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் டிரம் பிரேக் மாடல் விலை ரூ. 78,725 என்றும் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ. 82,820 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய பிரீமியம் எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஸ்டாண்டர்டு வேரியண்ட்களை விட ரூ. 2 ஆயிரம் விலை அதிகம் ஆகும். இந்த ஸ்கூட்டர் பியல் அமேசிங் வைட் மற்றும் மேட் மெக்னிஃபிசியண்ட் காப்பர் மெட்டாலிக் மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் மேட் இயல் சில்வர் மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.

ஆக்டிவா 125 பிரீமியம் எடிஷனிலும் 124சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.18 பி.ஹெச்.பி. திறன், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
யமஹா நிறுவனத்தின் புதிய ஏரோக்ஸ் 155 மாடல் இந்திய சந்தையில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் 155 இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதீத வரவேற்பை தொடர்ந்து ஏரோக்ஸ் 155 மாடலை யமஹா புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி யமஹா ஏரோக்ஸ் 155 மெட்டாலிக் பிளாக் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. புதிய நிறத்துடன் சேர்த்து ஏரோக்ஸ் 155 மாடல் ரேசிங் புளூ மற்றும் கிரே வெர்மிலான் நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. வெர்ஷன் ரூ. 1.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நிறம் தவிர ஏரோக்ஸ் 155 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 24.5 லிட்டர் ஸ்டோரேஜ், ஐடிள் ஸ்டார்ட்-ஸ்டாப், சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடல் இந்தியா பைக் வாரம் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15.51 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் வித்தியாசமான ஹெட்லேம்ப் அமைப்பு, ஷார்ட் பெண்டர், ஹை-செட் எக்சாஸ்ட்கள், ஒற்றை சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1250சிசி, லிக்விட் கூல்டு, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதே என்ஜின் பேன் அமெரிக்கா 1250 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் இந்த என்ஜின் 119.3 பி.ஹெச்.பி. திறன், 127.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அம்சங்களை பொருத்தவரை லீன்-சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏ.பி.எஸ்., புல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கோமகி இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. கோமகி ரேன்ஜர் எனும் பெயரில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக இருக்கிறது.
புதிய கோமகி ரேன்ஜர் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப் காணப்படுகிறது. மேலும் இந்த மாடல் கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. முழு சார்ஜ் செய்தால் கோமகி ரேன்ஜர் மாடல் 250 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய கோமகி ரேன்ஜர் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலில் நான்கு கிலோவாட் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திலும் இத்தகைய பேட்டரி வழங்கப்படவில்லை.
கோமகி ரேன்ஜர் மாடலில் 5000 வாட் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்த எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், ரிப்பேர் ஸ்விட்ச், ரிவர்ஸ் ஸ்விட்ச், ப்ளூடூத் மற்றும் அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பவுன்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இன்பினிட்டி இ1 பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இ ஸ்கூட்டர் மாடல் பிரத்யேகமாக 'பேட்டரி-ஏஸ்-எ-சர்வீஸ்' பெயரில் சந்தா முறையில் கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்பினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி, சார்ஜருடனோ அல்லது பேட்டரி இன்றியோ வங்க முடியும். பேட்டரி இன்றி வாங்குவோர் பேட்டரி-ஏஸ்-எ-சர்வீஸ் சந்தாவை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த சந்தா முறையில் பயனர்கள் பவுன்ஸ் பேட்டரி ஸ்வாப்பிங் நெட்வொர்க் மூலம் வாகனத்தை இயக்கலாம். இந்தியாவில் பவுன்ஸ் இன்பினிட்டி இ1 பேட்டரியுடன் வாங்கும் போது ரூ. 68,999 என்றும் பேட்டரி இன்றி வாங்கும் போது ரூ. 45,099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பவுன்ஸ் இன்பினிட்டி இ1 மாடலில் பி.எல்.டி.சி. மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 83 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 48 வோல்ட் 39 ஏ.ஹெச். பேட்டரியை வழக்கமான எலெக்ட்ரிக் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ரிமோட் டிராக்கிங், ஜியோ-ஃபென்சிங், டிராக் மோட், ரிவர்ஸ் மோட், குரூயிஸ் கண்ட்ரோல், ஆண்டி-தெஃப்ட் மெக்கானிசம் மற்றும் டோ அலெர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் 2022 ஆர்.சி.390 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். இந்தியா நிறுவன வலைதளங்களில் 2022 ஆர்.சி.390 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் இதன் அறிமுக நிகழ்வு நடைபெறும் என தெரிகிறது.
ஏற்கனவே 2022 கே.டி.எம். ஆர்.சி.390 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இந்திய மாடல் சர்வதேச வேரியண்டுடன் ஒப்பிடும் போது சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. 2022 கே.டி.எம். ஆர்.சி.390 மாடலின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்புறம் சிங்கில்-பாட் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர்-வியூ மிரர் மற்றும் இண்டிகேட்டர் செட்டப் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய கே.டி.எம். ஆர்.சி.390 மாடலில் புல்-எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டி.எப்.சி. டிஸ்ப்ளே, ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., கார்னெரிங் ஏ.பி.எஸ்., கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் குயிக்ஷிப்டர் பிளஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஆர்.சி.390 மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022 கே.டி.எம். ஆர்.சி.390 மாடலின் விலை ரூ. 2.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.






