என் மலர்
பைக்
ஒகாயா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஒகாயா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒகாயா ஃபாஸ்ட் என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 இ.வி. எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 89,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஒகாயா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

ஒகாயா ஃபாஸ்ட் மாடலில் 4.4 கிலோவாட் லித்தியம் ஃபாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பயன்பாட்டிற்கு ஏற்றவாரு இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும்.
அம்சங்களை பொருத்தவரை ஒகாயா ஃபாஸ்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஒன் மோட்டோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பிரிட்டன் நாட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒன் மோட்டோ இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் எலெக்டா என அழைக்கப்படுகிறது. இ.வி. இந்தியா எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் மோட்டோ எலெக்டா விலை ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், வளைந்த ஃபூட்போர்டு செக்ஷன், அழகாக காட்சியளிக்கும் வட்ட வடிவ பாடி பேனல்கள் உள்ளன. தோற்றத்தில் இந்த மாடல் வெஸ்பா போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒன் மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து ஜியோ-பென்சிங், ப்ளூடூத், ஐ.ஓ.டி., மெயின்டனன்ஸ் அலெர்ட் மற்றும் கம்யூடிங் பிஹேவியர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 72வோல்ட் 45ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி நான்கு மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
ஒகினவா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒகினவா குறைந்த விலை மற்றும் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஒரு லட்சம் யூனிட்களில் 60 முதல் 70 சதவீத யூனிட்கள் ஐ பிரைஸ் பிளஸ் மற்றும் பிரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இரு ஸ்கூட்டர்களும் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை மணிக்கு அதிகபட்சம் 58 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாடு முழுக்க 400-க்கும் அதிக விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய ஒகினவா திட்டமிட்டுள்ளது. இதில் பாதி தொகை முதல் ஆண்டிலேயே முதலீடு செய்யப்படுகிறது.
யெஸ்டி பிராண்டின் ரோட்கிங் மாடல் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
யெஸ்டி நிறுவனம் சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான பணிகளை துவங்கியது. தற்போது ரோட்கிங் அட்வென்ச்சர் மாடல் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என யெஸ்டி அறிவித்தது. முன்னதாக யெஸ்டி நிறுவன மோட்டார்சைக்கிள் படங்கள் இணையத்தில் வெளியாகின.
புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டி.வி.எஸ். நிறுவனம் அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலை விட அதிக திறன் கொண்டுள்ளது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலின் விலை ரூ. 1.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் சற்றே அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் பெரிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் டி.வி.எஸ். ரேசிங் லோகோ, அலாய் வீல்களுக்கு மேட்ச் செய்யும் ரெட் நிற கிராப் ரெயில்கள் உள்ளன.

இதன் ஹார்டுவேர் அம்சங்கள் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் உள்ளன.
புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. எடிஷன் மாடலில் 164.9 சி.சி. சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.93 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிரிவில் அதிக சக்திவாய்ந்த மாடலாக புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. இருக்கிறது.
யெஸ்டி ரோட்கிங் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் அதன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பிரபல யெஸ்டி பிராண்டை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மறுசீரமைப்பு செய்கிறது. கிளாசிக் லெஜண்ட்ஸ் ஏற்கனவே ஜாவா மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக யெஸ்டி பிராண்டு மாடல்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. டீசர் வீடியோவில் புதிய யெஸ்டி மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்கள் ஆர் மற்றும் ஜி.டி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. ஆர் வேரியண்ட் விலை ரூ. 20.80 லட்சம் என்றும் ஜி.டி. வேரியண்ட் விலை ரூ. 21.40 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் புதிய கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரெட் ஹாப்பர் நிறத்தில் கிடைக்கிறது. பேஸ் நிறத்துடன் பிளை-ஸ்கிரீன், சைடு பேனல்கள், ரியர் பகுதி, ரேடியேட்டர் கவுல்கள், ஹெட்லேம்ப் கவுல்களில் சபையர் பிளாக் நிறம் பூசப்பட்டுள்ளது.

டிரையம்ப் ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் 2458சிசி, இன்-லைன், 3 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 165 பி.ஹெச்.பி. திறன், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஷோவா 47 எம்.எம். அப்சைடு-டவுன் முன்புற போர்க், ஷோவா ரியர் மோனோ-ஷாக், முன்புறம் இரண்டு டிஸ்க், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இனெர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், 4 ரைடிங் மோட்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் கீலெஸ் இக்னிஷன் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டைகர் 1200 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் பிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, டைகர் 1200 முன்பதிவை துவங்கியது. எனினும், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே இந்த மாடல் சில சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. டைகர் 900 மாடலை போன்றே 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலும்- டைகர் 1200 ஜி.டி. மற்றும் டைகர் 1200 ரேலி ரேன்ஜ் என இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. இவற்றில் ரேலி ரேன்ஜ் ஆஃப்-ரோடு சார்ந்த மாடல் ஆகும்.

இதில் 21 இன்ச் மற்றும் 18 இன்ச் டியூப்லெஸ் ஸ்போக் வீல்கள் உள்ளன. ஜி.டி. ரேன்ஜ் மாடல்களில் 19 இன்ச் மற்றும் 18 இன்ச் அலுமினியிம் வீல்கள் உள்ளன. புதிய டைகர் 1200 மாடலில் 1160 சிசி, டிரிபில் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் 30 லிட்டர் டேன்க் வழங்கப்படுகிறது. டிரையம்ப் டைகர் 1200 மாடல் முற்றிலும் புது மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த மாடல் டிரிபில் என்ஜின், புதிய சேசிஸ் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கிறது.
இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் புதிய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் வினியோகம் துவங்கி இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் புதிய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இதன் வினியோகம் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 6.65 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கவாசகி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோண்டா சி.பி.650 ஆர் மற்றும் ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலில் 649சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த மாடலில் சிங்கில் பாட் வட்ட வடிவ ஹெட்லைட், குரோம் சரவுண்ட், ரெட்ரோ-ஸ்டைல் டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வட்ட வடிவ ரியர்-வியூ மிரர், உள்ளது. மேலும் இதில் ஸ்ப்லிட் ஸ்டைல் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. இந்தியாவில் புதிய கவாசகி இசட்650ஆர்.எஸ். மாடல் கேண்டி எமிரால்டு கிரீன் மற்றும் மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மற்றும் டி.வி.எஸ். மோட்டராட் நிறுவனங்கள் இணைந்து புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்திய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. மோட்டராட் உடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு இருநிறுவனங்கள் கூட்டணி அமைத்து டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310, பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜி.எஸ். மாடல்களை அறிமுகம் செய்தன. இந்த கூட்டணி காரணமாக இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை வளர்ச்சி பெற துவங்கியது.

மேலும் இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 5 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை வினியோகம் செய்து பி.எம்.டபிள்யூ. மோட்டராட் புதிய மைல்கல் எட்டியது. இதில் 90 சதவீத யூனிட்கள் ஜி சீரிஸ் மாடல்கள் ஆகும். இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மாடல் அடுத்த 24 மாதங்களுக்குள் அறிமுகமாகிறது.
பெனலி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பெனலி டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
பெனலி இந்தியா நிறுவனம் புதிய டி.ஆர்.கே. 251 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 6 ஆயிரம் ஆகும்.
புதிய பெனலி டி.ஆர்.கே. 251 மாடல் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்படும் டி.ஆர்.கே. 502 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இறுக்கிறது. இதில் டுவின்-பாட் ஹெட்லைட், மூக்கு போன்ற தோற்றத்தில் பெண்டர், செமி ஃபேரிங், உயரமான விண்ட்-ஸ்கிரீன், 18 லிட்டர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் ஃபுல்-எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. திறன், 21.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் டி.ஆர்.கே. மாடல் கே.டி.எம். 250 அட்வென்ச்சர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் பி.எம்.டபிள்யூ. ஜி 310 ஜி.எஸ். போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களை வினியோகம் செய்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வினியோகம் செய்ய துவங்கி இருக்கிறது. முன்னதாக அக்டோபர் 25 இல் துவங்கி டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் வினியோகம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டது.
உற்பத்தி பணிகளை முடுக்கிவிட்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஸ்கூட்டர்களை வினியோகம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரி வருன் தூபே தெரிவித்தார்.

'ஓலா வளாகத்தில் முதற்கட்ட எஸ்1 வாடிக்கையாளர்களை அழைத்து வந்துள்ளது சிலிர்க்க வைக்கிறது. எலெக்ட்ரிக் வாகன புரட்சிக்கு உண்மையான காரணமான எங்களின் வாடிக்கையாளர்களுக்கு நன்றி,' என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.






