என் மலர்
பைக்
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைவில் வினியோகம் செய்ய இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் டெஸ்ட் ரைடை துவங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய தகவல்களின்படி ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களின் டெஸ்ட் ரைடு நவம்பர் 10 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
டெஸ்ட் ரைடு மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் ஹைப்பர்-சார்ஜரை அந்நிறுவனத்தின் நிறுவனர் பாவிஷ் அகர்வால் அறிவித்தார். முன்பதிவில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் இதுவரை ரூ. 1,100 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்தது. பின் இதற்கான முன்பதிவு ஒரு மாதம் கழித்து தொடங்கியது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூரிங் அக்சஸரீக்களுடன் விற்பனைக்கு வந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த மோட்டார்சைக்கிள் டூரிங் அக்சஸரீக்கள் பிட்டிங்குடன் வழங்கப்படுகிறது. புதிய டாமினர் 400 விலை ரூ. 2.17 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய டாமினர் 400 மாடலில் பேக்டரி-பிட் செய்யப்பட்ட டால் வைசர், ஹேண்ட் கார்டு, பேக் ரெஸ்ட் மற்றும் லக்கேஜ் கேரியர் உள்ளது. இத்துடன் என்ஜின் பேஷ் பிளேட், இண்டகிரேட் செய்யப்பட்ட மெட்டல் ஸ்கிட் பிளேட், புதிய லெக் கார்டு சேடில் ஸ்டே, மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அக்சஸரீக்கள் தவிர டாமினர் 400 மெக்கானிக்கல் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய டாமினர் 400 மாடலிலும் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 39.42 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
டிவிஎஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ரேடியான் மாடலை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி ரேடியான் மாடல் தற்போது ரெட் மற்றும் பிளாக் மற்றும் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரு நிறங்களிலும் டூயல் டோன் பியூவல் டேன்க் தவிர மோட்டார்சைக்கிள் முழுக்க பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.
பக்கவாட்டில் மட்டும் புளூ அல்லது ரெட் நிற பெயிண்ட் செய்யப்படுகிறது. புதிய டூயல் டோன் நிறம் தவிர ரேடியான் மாடலின் என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் போன்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் டோன் மாடல்களின் விலை மற்ற வேரியண்ட்களை விட விலை அதிகம் ஆகும். டிவிஎஸ் ரேடியான் டிரம் வேரியண்ட் விலை ரூ. 68,982 ஆகும். இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 71,982 ஆகும்.
புதிய நிறங்கள் சேர்த்து டிவிஎஸ் ரேடியான் மாடல் மொத்தம் பத்து நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பண்டிகை காலம் துவங்க இருப்பது மற்றும் ரேடியான் மாடலின் 4 லட்சம் யூனிட்கள் விற்பனையை அனுசரிக்கும் வகையில் புதிய நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நிறம் ஸ்கார்லெட் ரெட் என அழைக்கப்படுகிறது. முன்புற பேனல், புளோர்போர்டு பேனல் மற்றும் முன்புற பென்டர் முழுக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது.
ஸ்கூட்டரின் பின்புறம் மேட் பிளாக் நிறம் பூசப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட், புளூ மற்றும் கிரே ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய நிறம் சேர்த்து மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஏழு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 110சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 8.15 பி.ஹெச்.பி. திறன், 8.75 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 மாடல் விலை ரூ. 65,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 66,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முழு கட்டண வசூலை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இரு ஸ்கூட்டர் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்றது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். ஓலா ஸ்கூட்டர் மாடல்களுக்கான முழு கட்டணத்தை நவம்பர் 10 ஆம் தேதி செலுத்தினால் போதும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்களை நவம்பர் 10 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்யலாம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. முழு தொகை செலுத்தியதும் ஸ்கூட்டர்கள் வினியோகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் ரைடு மற்றும் டெலிவரி தாமதமாகி வருவதை பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இரு ஸ்கூட்டர்களின் வினியோகம் அக்டோபர் 15 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருந்தது. தற்போதைய அறிவிப்பின் படி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீபாவளிக்கு பின் வினியோகம் செய்யப்படுகிறது.
பஜாஜ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பல்சர் 250 சீரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் 250 மோட்டார்சைக்கிளை அக்டோபர் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த மாடலுக்கான டீசர் வீடியோவை பஜாஜ் ஆட்டோ வெளியிட்டு உள்ளது. டீசரில் புதிய பல்சர் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
பஜாஜ் பல்சர் 250 மாடல் செமி பேர்டு டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பூமராங் போன்ற டி.ஆர்.எல்.கள், ட்வின் ஸ்ட்ரிப் எல்.இ.டி. டெயில் லைட் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

புதிய பல்சர் 250 மாடலில் 250சிசி என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் ஏர் / ஆயில் கூல்டு யூனிட் ஆகும். இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் யூனிட் மற்றும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஆர்.சி.200 மோட்டார்சைக்கிள் 199.5சிசி என்ஜின் கொண்டிருக்கிறது.
சர்வதேச சந்தையை தொடர்ந்து 2022 கே.டி.எம். ஆர்.சி.200 இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது. இந்தியாவில் புதிய 2022 கே.டி.எம். ஆர்.சி.200 விலை ரூ. 2.09 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது அறிமுக விலை தான், விரைவில் இது மாற்றப்படும்.
2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், பெரிய எல்.சி.டி. கன்சோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., முற்றிலும் புதிய சேசிஸ், மேம்பட்ட எர்கோனமிக், எலெக்டிரானிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் கிராண்ட் ப்ரிக்ஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2022 கே.டி.எம். ஆர்சி200 மாடலில் 199.5சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. திறன், 19.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
அப்ரிலியா இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 முழுமையான எல்.இ.டி. லைட்டிங் கொண்டிருக்கிறது.
அப்ரிலியா இந்தியா நிறுவனம் புத்தம் புதிய ஆர்.எஸ்660 மோட்டார்சைக்கிளை செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி ஒரு மாதம் கழித்து இந்த மோட்டார்சிக்கிளின் வினியோகம் துவங்கி இருக்கிறது. இதுபற்றிய தகவல் அப்ரிலியா இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய அப்ரிலியா ஆர்.எஸ்.660 விலை ரூ. 13.39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 659சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த என்ஜின் 98.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

அப்ரிலியா ஆர்.எஸ்.660 மாடலில் பாதுகாப்பிற்கு குரூயிஸ் கண்ட்ரோல், 3-லெவல் கார்னெரிங் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஐந்து ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஆர்.எஸ்.660 மாடலில் டூயல்-பாட் எல்.இ.டி. ஹெட்லேம்ப், புல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் அபெக்ஸ் பிளாக், லாவா ரெட் மற்றும் ஆசிட் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
ரெவோல்ட் நிறுவனத்தின் புதிய ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலான ஆர்.வி.400 முன்பதிவுகளை மீண்டும் துவங்க இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 முன்பதிவு அக்டோபர் 21 மதியம் 12 மணிக்கு துவங்குகிறது. இந்தியா முழுக்க 70 நகரங்களில் இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு நடைபெற இருக்கிறது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேலும் 64 புதிய நகரங்களில் ரெவோல்ட் தனது எலெக்ட்ரிக் வாகன விற்பனையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளது. தற்போது டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ரெவோல்ட் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

புதிய ரெவோல்ட் ஸ்டோர்களில் விற்பனை மட்டுமின்றி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைடு, சார்ஜிங் செட்டப் நிறுவும் முறை மற்றும் இதர விவரங்கள் வழங்கப்பட இருக்கிறது. ரெவோல்ட் ஆர்.வி.400 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும்.
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் மேக்னஸ் இ.எக்ஸ். பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் மேக்னஸ் இ.எஸ். என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 68,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
புதிய ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ். மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1200 வாட்ஸ் மோட்டார் இந்த பிரிவு வாகனங்களில் இதுவரை வழங்கப்படாத ஒன்று ஆகும்.

இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 10 நொடிகளில் எட்டிவிடும். இதில் இகோ மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் யு.எஸ்.பி. சார்ஜிங் சாக்கெட் கொண்டிருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 9.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.1 பி.ஹெச்.பி. திறன், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310 எம்எம் டிஸ்க், பின்புறம் 255 எம்எம் டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரில் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்பட புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடல் விலை ரூ. 69,500 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், க்ரோம் இன்சர்ட்கள், பேக்ரெஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் ஜூபிலண்ட் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

இத்துடன் ஹீரோ நிறுவனத்தின் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு அழைப்புகள், எஸ்.எம்.எஸ். அலெர்ட்கள், போன் பேட்டரி விவரம், சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆப் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஹீரோ பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8 பி.ஹெச்.பி. திறன், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.






