என் மலர்tooltip icon

    பைக்

    ஆக்டிவா 6ஜி மொத்தம் 6 நிறங்களிலும், ஆக்டிவா 125 5 நிறங்களிலும் கிடைக்கின்றன. லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 2 நிறங்களில் வருகிறது.
    இந்தியாவில் அதிகம் விற்கப்படும் ஸ்கூட்டர்களில் முதன்மையானதாக ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது. இந்நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6ஜி ஆகிய ஸ்கூட்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-ல் இருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது.

    ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் இருந்து ரூ.74,898-ஆகவும், ஆக்டிவா 12 டிரம் அலாய் ஸ்கூட்டரின் விலை ரூ.77,725-ல் இருந்து ரூ.78,657-ஆகவும், ஆக்டிவா 125 டிஸ்க்கின் விலை ரூ.81,280-ல் இருந்து ரூ.82,162-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 125 லிமிட்டர்ட் எடிஷன் டிரம் ரூ.78,725-ல் இருந்து ரூ.79,657-ஆகவும், ஆக்டிவா 125 லிமிட்டெட் எடிஷன் டிஸ்க் ரூ.82,280-ல் இருந்து ரூ.83,162-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 6ஜி மொத்தம் 6 நிறங்களிலும், ஆக்டிவா 125, 5 நிறங்களிலும் கிடைக்கின்றன. லிமிட்டெட் எடிஷன் ஆக்டிவா 2 நிறங்களில் வருகிறது.
    இந்த பைக்கில் ஒவ்வொரு ட்ரிமிற்கும் மாறுபடும் வகையில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் தனது YZF-R15 ஸ்போர்ட் பைக்கிற்கான விலை உயர்வை அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் இதுவரை 3 முறை விலை உயர்வு செய்யப்ப்பட்டுள்ளது.

    இந்த பைக்கில் ஒவ்வொரு ட்ரிமிற்கும் மாறுபடும் வகையில் ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி யமஹா R15 V4 மெட்டாலிக் ரெட்- ரூ.1,76,300-ஆக அதிகரித்துள்ளது. டார்க் நைட் விலை ரூ.1,77,300-ஆக அதிகரித்துள்ளது. ரேசிங் ப்ளூ ரூ.1,81,300-ஆகவும், மோட்டோ ஜிபி எடிஷன் (எம்) ரூ.1,82,800-ஆகவும், மெட்டாலிக் கிரே (எம்) ரூ.1,86,300-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் 155சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், மாறுபட்ட வால்வ் அக்யூட்டேஷன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.இந்த இன்ஜின் 18.1 bhp, அதிகபட்சமாக 14.2Nm பீக் டார்க்கை வழங்கக்கூடியது. 

    இந்த இன்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், க்யுக் ஷிப்டர்களுடன் டாப் ஸ்பெக் கொண்ட எம் ட்ரீமில் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தைவிர அசிஸ்டெண்ட், ஸ்லிப்பர் கிளட்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட முதல் தர அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
    அந்நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    பெரிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர், பைக், கார்களை அறிமுகம் செய்து வருகின்றன.

    இருப்பினும் சமீபத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து மக்களுக்கு மின்சார வாகனங்களின் மீதான பயம் தொடர்ந்து இருந்து வருகிறது.  இந்நிலையில் மக்களின் பயத்தை போக்கும் வகையிலும், மின்சார ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் இந்த ஏப்ரல் மாதத்தை  ‘மின்சார வாகன பேட்டரி பாதுகாப்பு’ வாரமாக கொண்டாட இருக்கிறது.

    இதன்படி ஹீரோ நிறுவனம் 4.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடல் நிகழ்த்தி பேட்டரி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது. மேலும் மின்சார ஸ்கூட்டர்களை வைத்திருக்கும் வாடிகையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள சர்வீஸ் செண்டர்களில் இலவச சர்வீஸ் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கோடைக்காலத்தில் பேட்டரிகள் தீப்பிடிக்காமல் பாதுகாக்க இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சோஹிந்தர் கில் கூறுகையில், ஏற்கனவே சாலையில் சென்றுகொண்டிருக்கும் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு முக்கியம். பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். இதற்காக சர்வீஸ் நிபுணர்களுடன் வாடிக்கையாளர்களை நேரடியாக உரையாட அழைத்துள்ளோம். 

    இத்துடன் மின்சார வாகனங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று கையேடு ஒன்றையும் வழங்கவுளோம். இந்தியாவில் 500 நகரங்களில் கட்டணம் இல்லாமல் சர்வீஸும் இந்த மாதம் முழுவதும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
    இந்த ஸ்கூட்டர் பழைய அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டாகும். இது ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சுஸூகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய ட்ரிம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. இந்த ஸ்கூட்டர் 106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீட்டிற்கு கீழே உள்ள இடம் மேலும் பெரிதாக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் ஸ்போர்ட்டி இன்ஜினுடன் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.86,500-ஆக அறிவிக்கபட்டுள்ளது. இது முந்தைய ட்ரிம்மை விட ரூ.200 குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த பைக்கை ரூ.5000-ல் இருந்து ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
    யமஹா மோட்டார் இந்தியா புதிய எம்டி15 வெர்ஷன் 2.0 பைக்கை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த பைக் கிரே, வைட், கிளாசிக் பிளாக் மற்றும் ரேஷிங் ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது.

    இது மேம்பட்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், குவிக் ஷிஃப்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. 

    இதன் ரியல்டைம் டேட்டாவை ஸ்மார்ட்போனிலேயே பார்த்து தெரிந்துகொள்ளும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.

    இந்த பைக்கில் 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் மற்றும் விவிஏ தொழில்நுட்பம் வழங்கப்படவுள்ளது. மேலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அப்-குயிக் ஷிஃப்டர் தரப்படுகிறது. இந்த இன்ஜின் 18.1 பி.ஹெச்.பி. பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது.

    இந்த பைக்கை ரூ.5000-ல் இருந்து ரூ.10000 வரை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். 

    இந்த பைக்கின் விலை ரூ.1.46 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த பைக்கில் உள்ள 125 சிசி பிஎஸ் 6 காம்பைலண்ட் இன்ஜின் 7000 RPM-ல் 9bhp மற்றும் 5500-ல் 10.4NM டார்க்கையும் உருவாக்ககூடியது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 XTEC ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் புதிய எல்.இ.டி ஹெட்லேம்புகள், ரெட்ரோ டிசைன் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் ஐ3எஸ் தொழில்நுட்பம்,  ஐடெல் ஸ்டாப் ஸ்டார்ட் சிஸ்டம், புதிய டிஜி அனலாக் ஸ்பீடோமீட்டர் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இதன்மூலம் நாம் போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்டுகளை மேற்கொள்ளமுடியும். இதைத்தவிர யூஎஸ்பி சார்ஜர், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆப், சீட் பேக்ரெஸ்ட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த பைக்கில் உள்ள 125 சிசி பிஎஸ் 6 காம்பைலண்ட் இன்ஜின் 7000 RPM-ல் 9bhp மற்றும் 5500-ல் 10.4NM டார்க்கையும் உருவாக்ககூடியது.

    இரண்டு ட்ரிம்களில் வெளியாகும் இந்த பைக்கின் ஸ்டாண்டர்ட் ட்ரிம்மின் விலை ரூ.69,900-ஆகவும், அதிக அம்சங்கள் கொண்ட ட்ரிம்மின் விலை ரூ.79,990-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஏற்கனவே பி.எம்.டபில்யூ, பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.2,000 வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.  இந்த விலை உயர்வு ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

    மோட்டார் உதிரி பாகங்கள் மற்றும் வாகனப் பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு  மாடல் மற்றும் சந்தையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     டோயோடோ கிர்லோஸ்கர் மோடர், ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சடிஸ்-பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஏற்கனவே ஏப்ரல் 2022 முதல் வாகனங்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்த நிலையில், ஹீரோ நிறுவனமும் விலையை உயர்த்தப்போகிறது.
    ஒரு லிட்டருக்கு 45 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
    2022 ஆண்டுக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது. மேலும் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. மேலும் இதில் முன்பக்கத்தில் உள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளன.

    ஹெட்லேம்பிற்கு கீழ் தரப்பட்டுள்ள ஃபிரெண்ட் பீக் இந்த ஸ்கூட்டருக்கு தனித்தன்மையான தோற்றத்தை தருகிறது. மேலும் இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்கள் அனைத்தும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஸ்கூட்டரில் 125சிசி ஏர் கூல்ட் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 6500rpm-ல் 8.9bhp பவரை தரக்கூடியது. அதேபோல 5000rpm-ல் 9.7Nm பீக் டார்க்கையும் இந்த ஸ்கூட்டர் தரக்கூடியது. இதன் டிரான்ஸ்மிஷனுக்காக சிவிடி கியர்பாக்ஸ் தரப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் ஸ்டாண்டர்ட் 10 இன்ச் வீல் முன்பக்கத்தில் பின்பக்கத்திலும் தரப்பட்டுள்ளன.  இதன் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம்யூனிட்டும் தரப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்காக இதில் ஃப்ரண்ட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த பைக் 92 கிலோ எடையை கொண்டது. மேலும் ஒரு லிட்டருக்கு 45 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய எகானமியை கொண்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.07 லட்சமாகும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வெளியிடுவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
    கடந்த வாரம் பூனே சாலையோரத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியானது. அதேபோல வேலூர் அருகே ஒக்கினவா மின் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்து வேலூரை சேர்ந்த தந்தையும், மகளும் இறந்தனர்.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதை தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர்கின்றனர். பெரும் நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர், கார்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

    கடந்த வாரம் பூனே சாலையோரத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி வெளியானது. அதேபோல வேலூர் அருகே ஒக்கினவா மின் பைக் ஒன்று தீப்பிடித்து எரிந்து வேலூரை சேர்ந்த தந்தையும், மகளும் இறந்தனர்.

     இந்நிலையில் தற்போது வட சென்னை அருகே  மாத்தூர் டோல் பிளாசா அருகில் ப்யூர் இவி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரியும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ப்யூர் இவி வெளியிட்ட அறிக்கையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். வாகன தயாரிப்பில் பலதரப்பட்ட சோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்பு தான் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. 

    பேட்டரி தீப்பிடிக்காமல் இருப்பதற்கான அம்சங்களும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. முழுதாக விசாரிக்கப்பட்டபின் இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளது.


    இந்த பைக்கில் ப்ளூடூத் கொண்ட டி.எஃப்.டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
    டிரைம்ப் நிறுவனம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது ஆரம்ப நிலை அட்வெஜ்சர் டூரிங் மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பைக் லுக்ரென் ப்ளூ, சேப்பையர் பிளாக், கொரோசி ரெட், கொரோசி கிராப்பைட், மினிமலிஸ்ட் கிராபைட் மற்றும் பிளாக் ஆப்ஷனில் வருகிறது.

    இந்த பைக்கில் 660 சிசி ட்ரிப்பிள் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இது 81 bhp பவர் மற்றும் 64Nm டார்க்கை உருவாக்கக்கூடியது. மேலும் இதில் சிக்ஸ் ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் அப் அண்ட் டவுன் குயிக்‌ஷிப்டர் தரப்பட்டுள்ளது.

    இத்துடன் எல்.இ.டி ஹெட்லைட்ஸ், மாடர்ன் லுக்கிங் ப்ளூடூத் கொண்ட டி.எஃப்.டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல். ரோட் மற்றும் ரைன் ரைடிங் மோட்கள், ஸ்விட்சபிள் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 

    மேலும் சஸ்பென்ஷன் டியூட்டிக்காக இந்த பைக்கில் அட்ஜெஸ்ட் செய்ய முடியாத 41mm USD ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ள அட்ஜெஸ்டபிள் ஷாக், ரிமோட் ப்ரீலோட் அட்ஜெஸ்டருடன் தரப்பட்டுள்ளது.

    இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.8.95 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இந்திய மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் உலக அளவில் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் இந்திய மின்சார வாகன சந்தையில் களமிறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அதானி குழுமம் நிறுவ திட்டமிட்டுள்ளது.

    அதானி குழுமமும், பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸும் சேர்ந்து முதல் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷனை அகமதாபாத்தில் நிறுவியுள்ளன. மேலும் நாடு முழுவதும் 1500 மின்சார வாகனங்களை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

    தேவையை பொறுத்து கூடுதலாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பசுமை ஆற்றலை வழங்கும் வாய்ப்பை தாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
    பூபதி கொடுத்த 1 ரூபாய் காசுகளை எண்ணி முடிக்க 10 மணி நேரம் எடுத்ததாக மேலாளர் கூறியுள்ளார்.
    தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த வி பூபதி என்ற இளைஞர் தனது கனவு பைக்கை 1 ரூபாய் காசுகளாக ஷோரூமில் கொடுத்து வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பூபதி 3 வருடங்களுக்கு முன்பு ஷோரூமிற்கு சென்று பஜாஜ் டாமினர் பைக் வாங்க வேண்டும் என்று விலையை கேட்டுள்ளார். ரூ.2.6 லட்சம் என்று தெரிந்தவுடன் ஒவ்வொரு ரூபாயாக தொகையை சேமிக்க தொடங்கியுள்ளார். இறுதியாக தேவையான பணம் சேர்ந்தவுடன் ஷோரூமிற்கு சென்று 1 ரூபாய் காசாக தான் சேர்த்த ரூ.2.6 லட்சத்தையும் கொடுத்துள்ளார்.

    முதலில் ஷோரூம் மேலாளர் மறுக்கவே பிறகு பூபதியின் ஈடுபாட்டை நினைத்து காசுகளை எண்ண தொடங்கினர். பூபதி கொடுத்த காசுகளை எண்ணி முடிக்க 10 மணி நேரம் எடுத்ததாக மேலாளர் கூறியுள்ளார்.

    இறுதியாக பூபதி தனது கனவு பைக்கான பஜாஜ் டாமினரை பெற்றுள்ளார். இந்த காசுகளை பூபதி லாரியில் வைத்து எடுத்து வந்துள்ளார்.

    பூபதி ஏன் வங்கியில் சென்று காசுகளை கொடுக்கவில்லை என கேட்டதற்கு வங்கிகள் 2000 நோட்டுகளாக ரூ.1 லட்சத்தை எண்ணுவதற்கு ரூ.140 கமிஷன் பெறுகின்றன. ரூ.2.6 லட்சத்தை 1 ரூபாய் காசுகளாக எண்ணுவதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என பூபதி தெரிவித்துள்ளார்.
    ×