என் மலர்tooltip icon

    பைக்

    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ஷாட்கன் 650 மற்றும் Meteor 650 மாடல்களை சோதனை செய்ய துவங்கி இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் சமீபத்தில் தான் சர்வதேச சந்தையில் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதிய ஷாட்கன் 650 மாடல் இந்திய சந்தையிலும் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலுன் புதிய Meteor 650 மாடலும் சோதனை செய்யப்படுகிறது.

    புதிய 650 டுவின் மாடல்கள் தற்போது ராயல் என்பீல்டு விற்பனை செய்து வரும் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 மாடல்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய Meteor 650 மற்றும் ஷாட்கன் 650 மாடல்களில் 650சிசி, பேரலல் டுவின், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது. எனினும், இவற்றின் செயல்திறன் வெவ்வேறாக இருக்கும் படி டியூன் செய்யப்பட இருக்கிறது.

    Meteor 650 டிசைன் தற்போது விற்பனை செய்யப்படும் Meteor 350 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் குரூயிசர் ஸ்டான்ஸ் மற்றும் ஏராளமான குரோம் பிட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சஸ்பென்ஷனிற்கு இந்த மாடலில் முன்புறம் USD ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிடில்வெயிட் பிரிவில் பிரீமியம் மாடலாக இருக்கும். இதில் எல்.இ.டி. ஹெட்லைட், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சேடில் ஸ்டே உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் Meteor 650 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும்.

    அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்Kளை அறிமுகம் செய்யும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், புதிய Meteor 650 மற்றும் ஷாட்கன் 650 மாடல்கள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 
    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விலையை சத்தமின்றி மாற்றி அமைத்து விட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தான் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தியது. இந்த நிலையில், ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலின் அனைத்து வேரியண்ட்களும் ரூ. 4 ஆயிரத்து 222 உயர்த்தப்பட்டது.

    புதிய விலை விவரம்:

    ராயல் என்பீல்டு ஹிமாலயன் கிராவல் கிரே, மிரேஜ் சில்வர் ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 109
    ராயல் என்பீல்டு ஹிமாலயன் ராக் ரெட், லேக் புளூ ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 928
    ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைன் கிரீன், கிராணைட் பிளாக் ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 526

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    விலை உயர்வின் படி ஹிமாலயன் டாப் எண்ட் விலை மற்றும் ஸ்கிராம் 411 டாப் எண்ட் விலையில் ரூ. 14 ஆயிரம் வித்தியாசமாக இருக்கிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லோ-எண்ட் டார்க், ஆஃப் ரோடு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    மேலும் இந்த மாடல் தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் சமீபத்திய மாடலில் ட்ரிப்பர் நேவிகேஷன் செட்டப் மற்றும் ஸ்விட்ச் செய்யக் கூடிய ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    புதிய நிறங்கள் மட்டுமின்றி, ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மாடலின் விலையையும் உயர்த்தி இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor மோட்டார்சைக்கிளை மூன்று புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி ராயல் என்பீல்டு Meteor 350 பேஸ் மாடலான ஃபயர்பால் வேரியண்ட் புளூ, மேட் கிரீன் நிறத்திலும், டாப் எண்ட் மாடலான சூப்பர்நோவா வேரியண்ட் ரெட் நிறத்திலும் கிடைக்கிறது. 

    ஏற்கனவே கிடைக்கும் மற்ற நிற வேரியண்ட்களுடன் சேர்த்து தற்போது அறிமுகமாகி இருக்கும் புது நிறங்களும் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய நிறங்கள் மட்டுமின்றி, ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மாடலின் விலையையும் உயர்த்தி இருக்கிறது. 

     ராயல் என்பீல்டு Meteor

    விலை உயர்வின் படி ராயல் என்பீல்டு Meteor 350 மோட்டார்சைக்கிள் மாடலின் மூன்று வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 4 ஆயிரத்து 224 உயர்த்தப்பட்டு உள்ளது. ராயல் என்பீல்டு Meteor 350 ஃபயர்பால் ரூ. 2 லட்சத்து 05 ஆயிரத்து  844 என்றும், Meteor 350 ஸ்டெல்லார் வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 11 ஆயிரத்து 924 என்றும் டாப் எண்ட் வேரியண்டான Meteor 350 சூப்பர்நோவா விலை ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 061 என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் (சென்னை) அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 

    ராயல் என்பீல்டு Meteor 350 மாடலில் முன்பை போன்றே 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், செமி டிஜிட்டல் கன்சோல், எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் யு.எஸ்.பி. சார்ஜர் போன்ற அம்சங்களும் இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

    கவாசகி இந்தியா நிறுவனம் தனது அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் பைக்-ஐ வாங்குவோருக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வுவச்சர் வழங்கப்படுகிறது.

    தற்போது இந்திய சந்தையில் புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கவாசகி வழங்கும் தள்ளுபடி வவுச்சர் சலுகையை சேர்க்கும் போது கவாசகி வெர்சிஸ் 650 மாடல் விலை ரூ. 6 லட்சத்து 45 ஆயிரம் என மாறி விடுகிறது. இந்த சலுகை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    கவாசகி நிறுவனம் விற்பனை செய்து வரும் வெர்சிஸ் 650 மாடலுக்கு மாற்றாக விரைவில் 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார்சைக்கிள் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     கவாசகி வெர்சிஸ் 650

    2022 வெர்சிஸ் 650 மாடலில் ரிவைஸ்டு ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட TFT கலர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் 650சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.8 பி.ஹெச்.பி. பவர், 60.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய கவாசகி வெர்சிஸ் 650 மோட்டார்சைக்கிளில் 17 இன்ச் அலாய் வீல்கள், இன்வெர்ட் செய்யப்பட்ட முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    புதிய 2022 கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் புதிய கவாசகி வெரிசிஸ் 650 அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    யமஹா நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கான பவர் ஸ்டீரிங் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகிறது.

    இன்று வரை இந்த தொழில்நுட்பம் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான ப்ரோடோடைப் இந்த ஆண்டே மோட்டார்சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. 

     யமஹா ஸ்டீரிங்

    இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஜப்பான் மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மூன்று வழிகளில் எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங் இயங்குகிறது. முதலில் மேக்னெடோ-ஸ்டிரிக்டிவ் டார்க் சென்சார் ஸ்டீரிங் அசைவு, ரைடர் எவ்வளவு ஃபோர்ஸ் போடுகிறார் என்பதை கணக்கிடும். இந்த விவரங்கள் கண்ட்ரோல் போர்டுக்கு அனுப்பப்படும். 

    பின் அந்த போர்டு, ஹெட்-ஸ்டாக் முன்புறத்தில் போல்டெட் மற்றும் ஸ்டீரிங் ஸ்டெம் உடன் கியர் செய்யப்பட்டு இருக்கும் எலெக்டிரானிக் ஆக்டுவேட்டரிடம் எவ்வளவு அசிஸ்டண்ஸ் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கும். 

    மோட்டார்சைக்கிளிங்கின் போது ஏற்படும் ஒட்டுமொத்த சோர்வை போக்குவதற்காகவே இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரிங் டேம்ப்பர்களை போன்றே இந்த எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங் சிஸ்டம் ரைடர்களுக்கு உதவியாக இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி பணிகளை அடுத்து, இந்த தொழில்நுட்பம் நம்மிடையே பயன்பாட்டுக்கு வர மேலும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை ஆகும். 

    யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்கூட்டர் மாடலை அசத்தலான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ எனும் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஃபுளூ மாடல் கூர்மையான தோற்றம் கொண்டிருக்காமல், ஃபன்கியாக காட்சியளிக்கிறது. 

    யமஹா ஃபுளோ

    புதுிய யமஹா ஃபுளூ மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.6 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்ற செயல்திறன் வழங்கும் இரு ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் வற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் பசினோ 125 போன்ற மாடல்களும் இதே போன்ற வெளிப்படுத்துகிறது. எனினும், ஃபுளூ மாடலின் அம்சங்கள் வேற மாதிரி இருக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய யமஹா ஃபுளூ மாடலில் ஏ.பி.எஸ். வசதி, 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜிங், முழுமையான எல்.இ.டி. லைட்டிங், சிறிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 
    பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்திய சந்தையில் F 850 GS மற்றும் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.



    பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் 2022 பி.எம்.டபிள்.யூ. F 900 XR மோட்டார்சைக்கிள் மாடலுடன் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS மற்றும் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 853சிசி, இன்-லைன், 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    முந்தைய மாடலில் இந்த என்ஜின் சர்வதேச சந்தையில் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்திய சந்தையில் இந்த என்ஜின் செயல்திறன் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 86 நியூட்டன் மீட்டர் டார்க் என சற்றே குறைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பி.எஸ். 6 ரக என்ஜின் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அதே செயல்திறனுடன் கிடைக்கிறது.

     2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர்

    அந்த வகையில் புது மாடலில் 853சிசி என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பி.எம்.டபிள்.யூ. F 850 GS மிடில் வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

    அம்சங்களை பொருத்தவரை புது பி.எம்.டபிள்.யூ. மோட்டார்சைக்கிளில் ABS ப்ரோ, டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், டைனமிக் எலெக்டிரானிக் சஸ்பென்ஷன், கீலெஸ் ரைடு, கியர் ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஹீடெட் க்ரிப்ஸ், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. 

    இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்.யூ. F 850 GS மாடல் விலை ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிள் கம்ப்லீட்லி-பில்ட்-அப் யூனிட் வடிவில் கிடைக்கும். இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் விலை ரூ. 12 லட்சத்து 30 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது. இதன் வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

     2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ

    வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக மற்றும் கவர்ச்சிகர நிதி சலுகைகள் பி.எம்.டபிள்யூ. பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் வழங்கப்படுகிறது. புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்படுகிறது. சற்றே கூடுதல் தொகை செலுத்தினால் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ள முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 6.5 இன்ச் ஃபுல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ் ப்ரோ, கீலெஸ் ரைடு, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் மற்றும் ஹீடெட் க்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 895சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103.2 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    இந்த ஸ்கூட்டர்கள் 6 நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இந்த ஸ்கூட்டர் பேட்டரிக்கு 40000 கிமீ வரை வாரண்டியு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Wroley என்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் மூன்று புதிய மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மார்ஸ், பிளாட்டினா, போஷ் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. ஒரு கி.மீட்டருக்கு 0.10 முதல் 0.15 பைசா வரை மட்டுமே செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டர்கள் சுப்பீரியர் தரத்துடனான லித்தியம் அயன் பேட்டரிகளில் வருகிறது. இது 48V மற்றும் 60V பவரை தரும் வல்லமை கொண்டது. இதில் ரிவர்ஸ் மோட், கீ ஸ்டார்ட், ஆண்டி தெஃப்ட் சென்சார், சைட் ஸ்டாண்டர்ட் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ரியர் டிஸ்க், லெட் ஹெட்லேம்ப், ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஸ்கூட்டர்கள் 6 நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இந்த ஸ்கூட்டர் பேட்டரிக்கு 40000 கிமீ வரை வாரண்டியு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
    இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிக அளவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

    இந்நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டர் தீவிபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து அடுதடுத்த மின்சார வாகன விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன. இந்த விபத்துகள் மின்சார வாகன துறையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என சிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

    மின்சார வாகனங்கள் குறித்த தவறான எண்ணத்தை மக்களின் மனதில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் கூறியுள்ளது.

    நேற்று மகாராஷ்டிரா நாசிக் அருகே 20 ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை அதேபோல ஒகினாவா, ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஸ்கூட்டர்களும் தீப்பற்றுகின்றன.

    குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.

    இந்த விபத்துகளுக்கு காரணமாம் லித்தியம் அயன் பேட்டரி தான் என கூறப்படுகிறது. விபத்து ஏற்படாத வகையில் பேட்டரியை அமைக்க வேண்டியது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் என சிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     மக்களின் நன்மதிப்பை மீட்டு எடுப்பது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவசியம் என கூறியுள்ளது.
    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்துகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி செல்கின்றனர். 

    பிரபல நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. இது மக்கள் மனதில் மின்சார வாகனங்கள் குறித்த பயத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில் தற்போது ஒரே நாளில் டிரக் தீப்பிடித்ததால் 20 மின்சார ஸ்கூட்டர்கள் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நாசிக் அருகே 40 மின்சார வாகனங்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று தீப்பிடித்தது. இதில் 20 ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகின. இதன்பின் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மின்சார வாகங்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரியை நீரில் தூக்கியெறிந்தாலும் தீ அணைவதில்லை, மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது என கூறப்பட்டுள்ளது. காரணம் நீரில் லித்தியம் அயன் பேட்டரியை போடும்போது எலக்ட்ரோலைட்டில் உள்ள லித்தியம் குறைந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. இது அதிகம் தீப்பற்றக்கூடியது.

    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    கடந்த வாரம் பூனேயில் ஓலா ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த பிரச்சனை எழுந்த நிலையில் தற்போது ரிவர்ஸ் மோட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர் மாடல் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் சமீபத்தில் புனேவில் இந்த ஸ்கூட்டார் தீப்பிடித்து எரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த ஸ்கூட்டர் புதிய பிரச்சனை ஒன்றை சந்தித்து வருகிறது.

    இதன்படி இந்த ஸ்கூட்டரை பின்பக்கம் இழுக்கும்போது தானாகவே 'Reverse Mode' ஆன் ஆகி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்சலேட்டர் கொடுத்தால் வண்டி வேகமாக பின்பக்கத்தில் செல்கிறது.

    இதனால் வண்டியில் பேலன்ஸ் விடுப்பட்டு விபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பெங்களூரில் பயனர் ஒருவர் இதுபோன்று ரிவர்ஸ் மோடில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓலா நிறுவனத்தை தொடர்புகொண்டும் எந்த வித பதிலும் 48 மணி நேரத்திற்கு சரியாக அளிக்கப்படவில்லை என கூறினார்.

    இந்த பிரச்சனையை சரி செய்யக்கோரி பல ஓலா பயனர்களும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
    ×