என் மலர்tooltip icon

    பைக்

    இந்த பைக்கில் 660cc 3 சிலிண்டர் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 0,250rpm-ல் 81bhp சக்தியை உருவாக்கக்கூடியது.
    டிரிம்ப் நிறுவம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த பைக் டைகர் வகை பைக்குகளில் ஆரம்ப நிலை மாடல்களாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டைகர் ஸ்போர்ட் 660 பைக் 17 லிட்டர் கெப்பாசிட்டியுடன் வருகிறது. இது டிரைடண்ட் பைக்கை விட 3 லிட்டர் அதிகம். இந்த பைக் 3 நிறங்களில் வருகிறது.

    டிரைடண்ட் பைக்கை போலவே இதில் மெயின் ஃபிரேம், பின்பக்க ஃபிரேம் தரப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 660cc 3 சிலிண்டர் இன்ஜின் தரப்பட்டுள்ளது. இது 0,250rpm-ல் 81bhp சக்தியை உருவாக்கக்கூடியது. அதேபோன்று 6,250rpm-ல் 64Nm சக்தியை உருவாக்கும் தன்மையை கொண்டது.

    இந்த இன்ஜின் ஐஎக்ஸ்-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் அப்/டவுன் ப்ரீலோட் அட்ஜெஸ்டருடன் வருகிறது.

    இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.5 லட்சத்தில் இருந்து ரூ.9.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான வினோ 50சிசி ஸ்கூட்டரின் அப்டேட்டை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது.

    இதில் டூயல் டோன் ப்ளூ, பெய்ஜ் நிறந்துடன் இணைந்து வருகிறது. இதில் ப்ரவுன் நிறம் சீட், கிரிப் மற்றும் ஃப்ளோர் போர்டில் இடம்பெறுகிறது.

    இதுத்தவிர பச்சை மற்றும் கருப்பு நிற இணைப்பிலும் சீட் மற்றும் க்ரிப்பில் வருகிறது.

    இந்த ஸ்கூட்டரில் 50சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 4.5 பிஎச்பி மற்றும் 4.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜினை ஹோண்டா நிறுவனம் யமஹாவிற்கு வழங்குகிறது.

    யமஹா வினோ ஸ்கூட்டர்

    பிரேக்கை பொறுத்தவரை இரு சக்கரங்களிலும் ட்ரம் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் இரு முனைகளிலும் வழங்கப்படுகின்றன.  இந்த பைக்கிற்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் 50சிசி இருசக்கர வாகனங்கள் விற்கப்படாததால் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
    எரிபொருளை சிக்கனம் செய்வதற்கு நாம் பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
    இன்று பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பணத்தை சிக்கனம் செய்ய அதிக மைலேஜ் தரும் பைக்குகளை அனைவரும் தேடி வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பைக்கும் அதிகபட்சமான மைலேஜ் தருவதற்கு நாம் பைக்கை சரியாக பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதையடுத்து அதிக மைலேஜ் பெறுவதற்கு பைக்கை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.

    1) உங்கள் பைக்கை சரியான இடைவெளியில் சர்வீஸ் விடுவது அவசியம். இது இன்ஜின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, பைக்கின் வாழ்நாளையும் நீட்டிக்கிறது. இதனால் நமது பைக்கின் மைலேஜும் அதிகரிக்கிறது. அதேபோல இன்ஜின் ஆயிலையும் சரியான நேரத்தில் மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

    2) நாம் சரியாக சர்வீஸ் செய்தும் மைலேஜ் அதிகரிக்கவில்லை என்றால் பைக்கின் கார்புரேட்டர் செட்டிங்கை பரிசோதிக்க வேண்டும். கார்புரேட்டரை ரீடியூன் செய்வது இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கும். அதனால் மைலேஜும் அதிகரிக்கும்.

    3) ஒவ்வொரு பைக்கிற்கும் டயர் பிரஷர் வேறுபடும். டயர் பிரஷரை அவ்வபோது சோதனை செய்வது இன்ஜினை சரியாக பராமரித்து, பெட்ரோலை அதிகம் வீணாகாமல் தடுக்கும்.

    4) கலப்படம் இல்லாத நல்ல எரிபொருளை பயன்படுத்த வேண்டும். லெட் கலந்த பெட்ரோலை பயன்படுத்தாமல், லெட் இல்லாத தரமான பெட்ரோலை பயன்படுத்துவது இன்ஜின் செயல்திறனை அதிகரிக்கும்.

    5) பைக்கை சரியான முறையில் ஓட்ட வேண்டும். குண்டு, குழிகளில் ஏற்றி செல்வது. திடீரென்று பிரேக் பிடிப்பது நமது பைக்கின் இன்ஜின் நலனை பாதிக்கும். இதனால் போக போக பைக் மைலேஜ் குறையத் தொடங்கிவிடும்.

    பைக் மைலேஜ்

    6) பைக்கை அதிவேகமாக ஓட்டாமல் எகானாமியில் ஓட்டுவது நல்லது. சராசரியாக மணிக்கு 40 கி.மீ வேகத்திற்கு ஓட்டுவது பைக் மைலேஜ்ஜை அதிகரிக்கும்.

    7) டிராஃபிக்கில் நிற்கும்போது பைக்கை அணைத்து விடுவது நல்லது. இது இன்ஜின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், எரிபொருள் சிக்கனத்தையும் ஏற்படுத்தும்.

    8) வெயிலில் பைக்கை நிறுத்துவதை தவிர்க்கவும். இதனால் எரிபொருள் ஆவியாவதால் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. எப்போதும் பைக்கை நிழலில் நிறுத்துவது நல்லது.

    9) அவ்வபோது நமது பைக்கை நீரில் கழுவி சுத்தம் செய்து வைப்பது நல்லது. அதேபோன்று பைக் செயினையும் காய விடாமல் சரியாக பராமரிக்க வேண்டும். இதனால் தூசு, மண் போன்றவை செயினில் புகுந்து ஆற்றலை குறைக்காது.

    10) கூடுதலான அம்சங்களை பைக்கில் சேர்ப்பதும் மைலேஜ்ஜை குறைக்கலாம். ஒரு பைக்கில் கொடுக்கப்படும் பாகங்கள் அனைத்தும் ஒத்திசைவாக இன்ஜினுடன் இணைந்து செயல்படுவதற்கு உதவும். நாம் பைக்கின் பாகங்களை மாற்றிகொண்டிருப்பதும் கூட எரிபொருள் பயன்பாட்டில் மாற்றத்தை தரலாம்.
    பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை குறைந்த நிலையில், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது.
    இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சிப் பற்றாக்குறை, கிராமப்புறங்களில் தேவை குறைவு, அதிக விலை ஆகிய காரணங்களால் இந்த விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதேசமயம் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதர் எனர்ஜி என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 140 சதவீதம் வளர்ச்சியை கண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பைக்கை பொறுத்தவரை கடந்த வருடத்தை விட 20 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. ஹீரோ மோட்டார் கார்ப், 32 சதவீத விற்பனை வீழ்ச்சியையும், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, 31 சதவீதம் விற்பனை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளன.

    டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு பிப்ரவரியை விட இந்த வருட பிப்ரவரியில் 5 சதவீதம் குறைந்துள்ளது. சுசூகி 3.3 சதவீதம் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.

    அதே சமயம் அதார் எனர்ஜி நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் 140 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
    கடந்த ஆண்டு மாதம் 5000 யூனிட்டுகள் விற்பனை செய்த ஒரு பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
    யமஹா நிறுவனம் தனது புதிய எம்டி15 பைக்கை அடுத்த மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவனம் தற்போது உள்ள எம்.டி15 பைக்கின் விற்பனையை படிப்படியாக நிறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கடந்த ஆண்டு நாடு முழுவதும் மாதத்திற்கு 5,000 எம்டி15 பைக்குகள் சராசரியாக விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த மாதம் ஜனவரியில் வெறும் 17 எம்டி15 பைக்குகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் புதிய எம்டி15 பைக்கை கொண்டு வரும் வகையில் தயாரிக்கும் பணிகளை யமஹா தொடங்கியுள்ளது. 

    இந்த புதிய பைக்கின் காஸ்மெட்டிக் அப்டேட்களாக புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பெயிண்ட் தேர்வுகள் தரப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய பைக்கில் யு.எஸ்.டி ஃபோர்க்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத்  காம்பேக்டிபில் கன்சோல் உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த பைக்கின் விலை தற்போதைய மாடலில் இருந்து அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த புதிய நிறத்திற்கு விலை அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே இருக்கும் விலையிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் உள்ளது.

    பஜாஜ் வெளியிடும் பல்சர் பைக்குகளுக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது பஜாஜ் பல்சர் 250 பைக்கிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 250 பைக்கிற்கு புதிய நீல நிறத்தேர்வை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன் பல்சர் 250 பைக்கிற்கு ரேசிங் ரெட் மற்றும் டெக்னோ கிரே ஆகிய 2 நிறங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீலமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    தற்போது குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும் இந்த நீல நிறத்தேர்வு, விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்சர் 250 நீல நிறம்

    தற்போதுள்ள புதிய நீல நிறம் மோனோ டோன் ஃபினிஷிங் மற்றும் சில இடங்களில் கிரே மற்றும் வெள்ளை ஃபேரிங்கில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற நிற பைக்குகளில் இருப்பது போலவே இன்ஜின் கவுலிலும் நீல நிறம் கிடைக்கும்.

    இந்த புதிய நிறத் தேர்வுக்கு தனியாக விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கனவே இருக்கும் எக்ஸ் ஷோரூம் விலையான ரூ.1,40,915-க்கு இந்த பைக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    இந்த ஸ்கூட்டரை ரூ.1,947 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இதையடுத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மின்சார வாகனங்கள் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து இருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டியே வருகின்றனர்.

    இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டர்களுடன் கூடுதல் பேட்டரி பேக்குகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 300 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

    பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரி நீக்கம் செய்யமுடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிம்பிள் எனர்ஜியின் பேட்டரி, அவற்றை கழற்றி மாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் 8.5kW மோட்டாருடன் வருகிறது. இதனால்72 Nm டார்க்கை உற்பத்தி செய்ய முடியும். மேலும் இதில் ஃபாஸ் சார்ஜிங் ஆப்ஷன், 30 லிட்டர் பூட் ஸ்பேஸ், ஆன்போர்டு நேவிகேஷன், ரைடிங் மோட்கள், போன் செயலி, அழைப்பு மற்றும் இசையை கட்டுப்படுத்தும் அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.09 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் பேட்டரியுடன் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.45 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், ரூ.1,947 செலுத்தி இந்த முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜூன் மாதம் முதல் இந்த பைக்குகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பவுன்ஸ் நிறுவனம் வழங்கும் பேட்டரி சந்தா சேவை மற்ற மின்சார ஸ்கூட்டர்களை விட 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டி இ1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ்வை இன்று முதல் தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட இடங்களில் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவ் கிடைக்கிறது.

    இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனமாக அறிமுகமாகிய பவுன்ஸ் நிறுவனம் தற்போது மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருக்கும் நிலையில் புது இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரை பவுன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து இன்று முதல் அந்த ஸ்கூட்டருக்கான டெஸ்ட் டிரைவ் தொடங்கப்பட்டுள்ளது.

    இன்ஃபினிட்டி இ1 பைக்

    இந்த ஸ்கூட்டர் ரூ.45,000 எக்ஸ் ஷோரும் விலையில் இருந்து தொடங்குகிறது. இந்த பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1 ஸ்கூட்டரில் 2kWh பேட்டரியும், 2,2KW மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 65 கி.மீ உட்சபட்ச வேகம் செல்லும் இந்த ஸ்கூட்டர், 85 கி.மீ வேகத்தை கொண்டுள்ளது. 

    பவுன்ஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டருக்கு பேட்டரி சந்தா முறையையும் வழங்குகிறது. இதன்மூலம் பேட்டரி சார்ஜ் முடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் பேட்டரி மையங்களுக்கு சென்று புதிய பேட்டரிக்களை மாற்றிகொள்ளலாம். இதனால் நிரந்தரமாக பேட்டரி வைத்துக்கொண்டு மெயிண்டைனன்ஸ் குறித்து வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

    இதுமட்டுமின்றி பேட்டரியின் ஆயுள் முடிந்தவுடன் அதிகம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டும் என அவசியமில்லை. சந்தா முறையில் புதிய பேட்டரிகளை வாங்கிகொள்ளலாம். இதன்மூலம் 40 சதவீதம் பேட்டரி மெயிண்டைனன்ஸ் செலவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த நிதியாண்டுக்குள் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்தது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசும் இந்த நிதியாண்டில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை அறிவித்தது.

    இதை தொடர்ந்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம், பிரபல ஆக்டிவா ஸ்கூட்டரை மின்சார வெர்ஷனில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த நிதியாண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபடும் என்று அதன் தலைவர் அட்சுஷி ஒகடா கூறியுள்ள நிலையில், முதல்வாகனமாக ஹோண்டா ஆக்டிவா அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோண்டா ஆக்டிவா

    ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனத்தில் ஸ்வாப்பபிள் பேட்டரி, விரைவில் சார்ஜாகும் தொழில்நுட்பம், அதிக வேகத்தில் இயங்கு திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஹோண்டாவின் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்தால், தற்போது சந்தையில் உள்ள பஜாஜ் சேடக், டிவிஎஸ் ஐ.க்யூப், ஓலா எஸ் 1 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்கள் மின்சார வாகனத்தை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இது தவிர இந்த ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் மின் வாகனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் அதர் நிறுவனம் தனது அதர் 450 பிளஸ் மற்றும் அதர் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை எளிய முறையில் வாங்கும் வகையில் இ.எம்.ஐ திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அதர் நிறுவனத்தின் 450 எக்ஸ் மற்றும் 450 எக்ஸ் மின் ஸ்கூட்டர்களை  ரூ.10 ஆயிரம் முன்பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். பிறகு இ.எம்.ஐ கட்டணமாக மாதம் ரூ.4,360-ஐ 36 மாதங்களுக்கு செலுத்தினால் போதும். 

    இந்த ஸ்கூட்டர்களின் விலை ரூ.1.31 லட்சம் ஆகும்.

    இந்த ஸ்கூட்டரில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. அதர் 450 எக்ஸ் ஸ்கூட்டர் 6000W மோட்டார் உடன் 2.9kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதனால் பேட்டரி வெறும் 35 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும்.

    இந்த ஸ்கூட்டரை முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை பயணிக்கலாம். அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
    தற்போது 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வரும் அந்நிறுவனம் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.
    தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் 80-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகள்,  மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிவிஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2021-22 நிதியாண்டில் மட்டும் 10 லட்சம் இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

    இதன்மூலம் நாட்டின் 2-வது அதிக இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற சாதனையை டிவிஎஸ் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அப்பாச்சி பைக்குகளே அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    இதுதவிர வெளிநாடுகளுக்கு என உருவாக்கப்பட்டு வரும் எச்எல்எக்ஸ் எனும் மாடலும், டிவிஎஸ் ரைடர் மற்றும் டிவிஎஸ் நியோ ஆகிய பைக்குகளும் சிறப்பான எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    டி.வி.எஸ்

    மேலும் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களான ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் ஆகிய மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 

    இதை தொடர்ந்து இந்த  வாகன தயாரிப்பு நடவடிக்கையை மேலும் விரிவாக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறியுள்ளன

    இதன்பின் டிவிஎஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்ப சலுகைகளுடன் மேலும் சில நாடுகளிலும் கால் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
    இந்த புதிய பைக், யமஹாவின் ஆர்15 வி4 மாடலுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனம் புதிய ஹோண்டா சிபிஆர்150ஆர் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    150 சிசி கொண்ட இந்த பைக் யமஹா நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஃபேர்ட் பைக்குகளுக்கு போட்டியாக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய சி.பி.ஆர்150ஆர் பைக்கின் விலை இந்தியாவில் ரூ.1.71 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹோண்டாவின் போட்டியாக உள்ள யமஹா ஆர்15 வி4 பைக்கிற்கு (விலை ரூ.1.73 லட்சத்தில் இருந்து தொடக்கம்) போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×