என் மலர்tooltip icon

    பைக்

    ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாகவும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    தைவானை சேர்ந்த எஸ்.ஒய்.எம் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய 125சிசி மற்றும் 150சிசி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களுக்கு 4மைகா என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த 4மைகா ஸ்கூட்டர் பிளவுப்பட்ட சீட்டுகளை கொண்டுள்ளது. பின் சீட்டை நீக்கி கூடுதலாக பொருட்களை வைக்கும் வகையிலும், ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாக பயன்படுத்தும் வகையிலும் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் கால் வைப்பதற்காக 410மிமீ அளவில் இட வசதி தரப்பட்டுள்ளது. இங்கேயும் பயணிகள் பொருட்களை வைத்து செல்லலாம். 

    4மைகா 125 ஸ்கூட்டரில் 124.7சிசி SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 9.5 பிஎஸ் மற்றும் 9.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. 150 சிசி ஸ்கூட்டரில் 11.3 பிஎஸ் மற்றும் 12.25 என்எம் டார்க் திறனை பெறும் ஆற்றல் தரப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் தரப்பட்டுள்ளன.

    4மைகா ஸ்கூட்டர் அமைப்பு

    பிரேக் அமைப்பில் முன்பக்கத்தில் டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்ரம்மும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் -ம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 10-இன்ச் சக்கரங்களும், 100/90 என்ற அளவுகளில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் எடை கிட்டத்தட்ட 125 கிலோ ஆகும்.

    தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் மற்றும் ஹசார்ட் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    இந்த ஸ்கூட்டர் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இருப்பினும் இது இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் எதுவும் தரப்படவில்லை.

    இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள சில முக்கிய பைக்குகளையும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இப்போது காணலாம்.
    இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் ஆட்டோமொபைல் விற்பனை வேகம் எடுத்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு புதிய பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

    ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411: ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம் 411 பைக் இந்த ஆண்டு அறிமுகாகவுள்ளது. ஹிமாலயன் வகை பைக்கான இது வாங்கக்கூடிய விலையில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ராயல் என்ஃபீல்டு வகை பைக்குகளுடைய இன்ஜின் மற்றும் பிளார்ட்பார்மை இது கொண்டிருந்தாலும் லோவர்ட் சஸ்பென்ஷன் கிட் மற்றும் சிறிய முன்பக்க சக்கரங்கள் தரப்பட்டுள்ளன. 

    மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம்-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

    2022 கே.டி.எம் 390 அட்வென்சர்: இந்த ஆண்டு பஜாஜ் நிறுவனம் நிறைய வாகனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் முக்கியமான ஒன்று கே.டி.எம் 390 அட்வெஞ்சர். இந்த புதிய ஏடிவி வகை பைக் வெளிப்புற ஸ்டைலிங்குடன் வரும் என கூறப்படுகிறது. புதிய டூயல்- டோன் ட்ரிம்மை இந்த பைக் கொண்டுள்ளதாகவும், எப்போதுவேண்டுமானாலும் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    கே.டி.எம் ஆர்.சி390

    ராயல் என்பீல்ஃடு ஹண்டர் 350: ஸ்கிராம் 411-ஐ தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வகை பைக்கை அறிமுகம் செய்கிறது. இந்த பைக் மீட்டோர் 350 வகையை சார்ந்தது என்றாலும்  அதிகம் ஆஃப் ரோட் செல்லக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஜெனரேஷன் கே.டி.எம் ஆர்.சி390: ஆர்.சி 200 ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் கே.டி.எம்-ன் புதிய ஜெனரேஷன் ஆர்.சி 390 வெளியாகவுள்ளது. இதில் முழுதும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்டல் பேனல் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக் தற்போது உள்ள மாடலை விட சற்று விலை கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த புதிய பைக் ஹார்லி டேவிட்ஸனின் லைவ் ஒயர் பிராண்டின் கீழ் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
    ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் தனது லைவ் ஒயர் பிராண்டின் கீழ் புதிய மின்சார பைக் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு எஸ்2 டெல் மார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய எலக்ட்ரிக் பைக் மிடில் வெய்ட் பிரிவில் அடங்கும். இந்த மின்சார பைக் ஆரோ ஆர்கிடெக்ட்சர் என்ற அமைப்புடன் வருகிறது. இந்த அமைப்பில் பேட்டரி, இன்வெர்டர், சார்ஜர், ஸ்பீட் கண்ட்ரோலர் மற்றும் மோட்டார் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ஆரோ ஆர்கிடெக்ட்சர் அமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ள பேட்டரியில் 21,700 விதவிதமான சிலிண்டர் செல்கள் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற அமைப்பை தான் டெஸ்லா, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. 

    இந்த பைக் குறைந்த விலையில் அனைவராலும் வாங்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் பஜாஜ் சேடாக் விற்பனையில் உள்ளது.
    பஜாஜ் நிறுவனத்தின் சேடாக் இ-ஸ்கூட்டர் தற்போது புது டெல்லி, மும்பை கோவா ஆகிய மூன்று புதிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டு 8 முக்கிய நகரங்களில் சேடாக் இ.வி இ ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியது. இதன்பின் இந்த ஆண்டின் முதல் 2 மாதங்களிலேயே புதிதாக 12 நகரங்களில் சேடாக்கிற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தற்போது இந்தியாவில் மொத்தம் 20 நகரங்களில் சேடாக் இ.வியின் விற்பனையில் உள்ளது.

    தற்போது பஜாஜ் சேடாக் இ-ஸ்கூட்டர் பதிவு செய்தவர்களுக்கு 4 முதல் 8 வாரத்திற்குள் ஸ்கூட்டர்கள் கிடைக்கும்.  வாடிக்கையாளர்கள் ஷோரூமில் அல்லது www.chetak.com என்ற இணையதளத்திலும் இந்த இ ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். 

    பஜாஜ் சேடக் இ-ஸ்கூட்டர்

    மேலும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புனேவில் புதிய மின்சார வாகன ஆலையை திறப்பதாக அறிவித்தது. இந்த உற்பத்தி ஆலையில் ரூ.300 கோடி முதலீடு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்தது. 

    இந்நிலையில் ஆட்டோமோட்டிவ் பிராண்ட் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக இந்த புதிய ஆலை உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையின் மூலம் ஆண்டுக்கு 5,00,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    இந்தியாவில் ஜனவரி மாதம் விற்கப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. 

    சில ஆண்டுகளாகவே ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் 1,43,234 யூனிட்கள் விற்கப்பட்டு ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தை பிடித்துள்ளது.

    கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மொத்த ஸ்கூட்டர்களில் 44.61 சதவீதம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரே ஆகும்.

    ஹோண்டா ஆக்டிவா

    2-வது இடத்தை டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. 43,476 யூனிட் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் கடந்த மாதம் விற்பனை ஆகியுள்ளது. இதை தொடர்ந்து 3-வது இடத்தில் சுஸுகியின் ஆக்ஸஸ் மாடல் 42,148 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    4-வது இடத்தில் ஹோண்டா டியோ 27,837 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. 5-வது இடத்தில் டிவிஎஸ் எண்டார்க் 21,120 யூனிட்களும்,  6-வது ஹீரோ பிளஷர்  13,195 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து 7-வது இடத்தில் 9,504 யூனிட்கள் விற்பனையில் சுஸுகி பர்க்மேனும், 8-வது இடத்தில் 7,030 யூனிட்கள் விற்பனையில் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களும் உள்ளன.

    9வது மற்றும் 10-வது இடங்களில் சுஸுகி அவெனிஸ் 6,314 யூனிட்களும், யமஹா ஃபேஸினோ 6,221 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன.
    இந்த பைக் பெரிதும் விற்கப்படாததே இந்த விலை குறைப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனம் சிபி500எக்ஸ் பைக்கை இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. அட்வென்ஜர் டூரர் ரக பைக்கான இதற்கு தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சிபி500எக்ஸ் பைக் அறிமுகமானபோது இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.6.87 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பைக்கின் விலை 1.07 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.5.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

    ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்

    சிபி500எக்ஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தாலும், பெரிதாக விற்பனை இல்லை. இதன் விலை அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹோண்டா சிபி500எக்ஸ் பைக்கில், 471.03 சிசி, நான்கு-ஸ்ட்ரோக், பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 47 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 43.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதன் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 17.7 லிட்டர்களாக உள்ளது. 
    புதிய பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    புனேவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை கவர்ச்சிகர விலையில் அறிமுகம் செய்து பின் சத்தமின்றி அவற்றின் விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது பஜாஜ் நிறுவனம் பல்சர் என்250, எஃப்250 பல்சர் மற்றும் டாமினர் 250, 400 பைக்குகளின் விலைகளை உயர்த்தியுள்ளது. 

    இதன்படி பல்சர் எஃப்250 சீரிஸ் விலை ரூ. 915 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்சர் என்250 விலையும் ரூ. 1180 உயர்த்துள்ளது. 

    இதையடுத்து புதிய பல்சர் எஃப்250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,40,915-ஆக உயர்ந்துள்ளது. பல்சர் என்250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,39,117-ஆக உயர்ந்துள்ளது. 

    பஜாஜ் டாமினர் 400

    இதேபோன்று பஜாஜ் டாமினர் 250-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.5000 உயர்த்தப்பட்டு ரூ.1.64 லட்சமாக உள்ளது. அதேபோன்று பஜாஜ் டாமினர் 400-ன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4,500 உயர்த்தப்பட்டு ரூ.2.17 லட்சமாக இருக்கிறது.

    புதிய பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 மாடல்களில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இத்துடன்  வழங்கப்பட்டுள்ளது.
    டிரையம்ப் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டிரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்தியது. விலை உயர்வின் படி டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடலின் புதிய விலை ரூ. 7.45 லட்சம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும். 

    இந்திய சந்தையில் விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. முன்னதாக டிரையம்ப் டிரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் ரூ. 6.95 லட்சம் எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய டிரைடெண்ட் 660 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

     டிரையம்ப் டிரைடெண்ட் 660

    டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடலில் 660சிசி, இன்-லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரெக்‌ஷனல் குயிக் ஷிஃப்டர் விரும்புவோர் பொருத்திக் கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்து கொள்ளும் வசதியுடன் டராக்‌ஷன் கண்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்கள் உள்ளன. இந்தியாவில் டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடல் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய யெஸ்டி பிராண்டு மாடல்களின வினியோக பணிகளை துவங்கியது.


    கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் யெஸ்டி பிராண்டில் மூன்று புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பின் ரி-எண்ட்ரி ஆகி இருக்கும் யெஸ்டி பிராண்டில் தற்போது அட்வென்ச்சர், ஸ்கிராம்ப்ளர் மற்றும் ரோட்ஸ்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இவற்றின் வினியோகம் தற்போது துவங்கி இருக்கிறது. 

    இந்தியாவில் புதிய யெஸ்டி மாடல்களின் விலை ரூ. 1.95 லட்சத்தில் துவங்கி ரூ. 2.19 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன. புதிய யெஸ்டி மாடல்கள் நாடு முழுக்க 300 விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

     யெஸ்டி மோட்டார்சைக்கிள்

    யெஸ்டி அட்வென்ச்சர், ரோட்ஸ்டர் மற்றும் ஸ்கிராம்ப்ளர் என மூன்று மாடல்களிலும் 334சிசி திறன் கொண்ட சிங்கில் சிலிண்டர் 4 ஸ்டிரோக் லிக்விட் கூல்டு டி.ஒ.ஹெச்.சி. என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ரோட்ஸ்டர் மாடலில் இந்த என்ஜின் 29.7 பி.எஸ். திறன், 29 நியூட்டன் மீட்டர் டார்க் இழவிசையை வெளிப்படுத்துகிறது. 

    யெஸ்டி அட்வென்ச்சர் மாடலில் இந்த என்ஜின் 30.2 பி.எஸ். திறன், 29.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    நெக்சு மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய பசிங்கா இ சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    இந்திய நிறுவனமான நெக்சு மொபிலிட்டி புதிதாக இ சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பசிங்கா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை ரூ. 49,445 என துவங்கி அதிகபட்சம் ரூ. 51,525 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய பசிங்கா இ சைக்கிள் மாடல்கள் 100 கிலோமீட்டர் நீட்டிக்கப்பட்ட ரேன்ஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஒற்றை கழற்றக்கூடிய லி-அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மிக உறுதியான வடிவமைப்பு கொண்டிருக்கும் பசிங்கா மாடல்களில் அதிகபட்சம் 15 கிலோ எடையை கொண்டு செல்ல முடியும்.

      நெக்சு இ சைக்கிள் சலுகை

    பசிங்கா இ சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது. புதிய பசிங்கா மாடல்கள் பயனர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 

    இ சைக்கிள் மாடல்களை எளிய தவணையில் வாங்க நெக்சு மொபிலிட்டி நிறுவனம் செஸ்ட் மணி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் இ சைக்கிள் மாடல்களை வாங்கும் வழியை எளிமையாக்கும் வழிமுறைகளை நெக்சு அறிவித்து இருக்கிறது. 
    கவாசகி நிறுவனத்தின் சமீபத்திய இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் ஸ்பெஷல் எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    கவாசகி நிறுவனம் விரைவில் புதிய இசட்650ஆர்.எஸ். 50th ஆனிவர்சரி எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பை கவாசகி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. 

    ஏற்கனவே கவாசகி இசட்650ஆர்.எஸ். மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஸ்பெஷல் ஆனிவர்சரி எடிஷன் மாடலும் இந்தியாவில் அறிமுகமாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே இசட்650ஆர்.எஸ். ஆனிவர்சரி எடிஷன் மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இதே மாடல் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர கவாசகி முடிவு செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

     கவாசகி இசட்650ஆர்.எஸ்.

    கவாசகி நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க Z1 மோட்டார்சைக்கிள் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கவாசகி இசட்650ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் கேண்டி எமிரால்டு கிரீன் நிறம் மற்றும் கோல்டன் நிற அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. 

    கவாசகி இசட்650ஆர்.எஸ். ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 649சிசி, பேரலெல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    விலையை பொருத்தவரை புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை  நிர்ணயம் செய்யப்படலாம்.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ மாடலுக்கான வினியோக விவரங்களை அறிவித்து இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 20 ஆயிரம் செலுத்தி எஸ்1 ப்ரோ மாடலை முன்பதிவு செய்தவர்கள் ஜனவரி 21, 2022 அன்று ஸ்கூட்டருக்கான முழு தொகையை செலுத்தலாம் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான வினியோகம் இம்மாத இறுதியில் துவங்குகிறது. இந்த தகவலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

    ஸ்கூட்டர் மாடலின் வினியோகம் பலமுறை தாமதான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜனவரி 21, 2022 அன்று முழு தொகை செலுத்துவோருக்கு ஓலா எஸ்1 ப்ரோ மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத துவக்கத்திலோ வினியோகம் செய்யப்பட்டு விடும் என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    முதற்கட்ட விற்பனை நடைபெற்று வரும் நிலையில், இரு ஸ்கூட்டர்களுக்கான புதிய முன்பதிவு தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் டிசம்பர் மாத வாக்கில் ஓலா எஸ்1 ப்ரோ மாடலுக்கான வினியோகம் துவங்கியது. இதுவரை 4 ஆயிரம் எஸ்1 ப்ரோ யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது.
    ×