என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
மினி இந்தியா நிறுவனத்தின் கூப்பர் எல்க்ட்ரிக் மாடல் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
மினி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து 2021 மினி கூப்பர் எஸ்.இ. மாடல் முன்பதிவு துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் மினி இந்தியா வலைதளத்தில் புதிய கூப்பர் எஸ்.இ. மாடலை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
முன்னதாக மினி கூப்பர் எஸ்.இ. மாடல் 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் அதன் ஐ.சி.இ. மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எஸ்.இ. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய இ பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மூன்று கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலில் 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 181 பி.ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
மாருதி சுசுகியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடல் லத்தீன் என்கேப் சோதனையில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுசுகி பலேனோ மாடல் லத்தீன் என்கேப் சோதனையில் ஒரு நட்சத்திர குறியீடையும் பெறவில்லை. இந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடல் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பயணிக்கும் போது முறையே 20.03 சதவீதமும், 17.06 சதவீத புள்ளிகளையே பெற்றது.
சமீபத்தில் லத்தீன் என்கேப் தனது பரிசோதனை விதிகளை மாற்றி அமைத்தது. இதனால், இந்த சோதனையில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது. புதிய விதிகள் குளோபல் என்கேப் பின்பற்றும் விதிமுறைகளை விட கடுமையானவை ஆகும்.

பாதுகாப்பை பொருத்தவரை மாருதி பலேனோ மாடல் முன்புற ஏர்பேக் மட்டுமே கொண்டிருக்கிறது. பின்புறம் பெல்ட் லோட் லிமிட்டர் மற்றும் பெல்ட் பிரீ-டென்சனர் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் ஓட்டுனரின் தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது.
லத்தீன் என்கேப் சோதனையில் பங்கேற்ற மாருதி பலேனோ மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. எனினும், இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மழைக்காலத்தில் வாகனம் பழுதாகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அதனை அவ்வப்போது பராமரிப்பது அவசியம் ஆகும். வாகனங்களை சரியான காலஇடைவெளியில் பராமரித்தால் தான் வாகனம் சீராக இயங்கும். வாகன பராமரித்தல் மற்றும் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பின் போது கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மழைக்காலத்தில் வாகனத்தில் அதிக அளவு மண் சேரும் வாய்ப்பு உள்ளது. இதை கவனிக்க தவறினால் வண்டியில் துரு ஏறும். எனவே இதை தவிர்க்க மட்கார்டின் உள்பக்கம் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

மழை நேரத்தில் வெளியே சென்று வந்தவுடன் தண்ணீரால் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு துணியால் துடைக்க வேண்டும். வண்டியை மழை தண்ணீர் விழாத இடங்களில் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். மழை காலம் முடிந்ததும் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும்.
செயின் லூப்ரிகேசன் செய்யப்பட வேண்டும். அனைத்து கேபிள்களும் சுத்தம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் கிரீஸ், ஆயில் இட வேண்டும். 10 நாட்களுக்கு மேல் வெளியூர் செல்வதாக இருந்தாலும் வண்டியை உபயோகப்படுத்தாமல் இருக்கும் நிலை ஏற்படும் போது வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். பெட்ரோலை மூட வேண்டும்.
மேலும் என்ஜினை ஓட விட்டு கார்ப்பரேட்டரை காலி செய்ய வேண்டும். டயர்கள் இரண்டும் தரையை தொடாத நிலையில் வண்டியை நிறுத்த வேண்டும். கேன்வாஸ் கொண்டு வண்டியை முழுவதுமாக மூடி வைக்க வேண்டும். மீண்டும் வண்டியை உபயோகத்துக்கு எடுக்கும் போது உடனே ஓட்டி செல்லக்கூடாது. வண்டியை ஸ்டார்ட் செய்து 10 நிமிடம் ஐடில் நிலையில் ஓட விட வேண்டும்.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் ஒரே மாதத்தில் விற்றுத்தீர்ந்தது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது டைகுன் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவு ஒரே மாதத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ரூ. 10.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே டைகுன் மாடலை வாங்க சுமார் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அதன்பின் ஒவ்வொரு நாளும் சுமார் 250-க்கும் அதிக முன்பதிவுகளை டைகுன் கார் பெற்று வருகிறது. முன்பதிவில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் டைகுன் மாடலில் 1 லிட்டர், 3 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை முறையே 115 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க், 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
டாடா பவர் நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை நிறுவி இருக்கிறது. இத்துடன் நாடு முழுக்க சுமார் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவி இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு கணிசமான அளவு அதிகரிக்கும்.
நாடு முழுக்க 180 நகரங்களில் டாடா பவர் சார்ஜிங் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள், ரீடெயில் அவுட்லெட்கள், பொது இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் டாடா பவர் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இ.வி. மற்றும் டிகோர் இ.வி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் அடுத்த 18 மாதங்களில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் ரூ. 7,500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.
கோமகி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய குரூயிசர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகிறது.
கோமகி எலெக்ட்ரிக் வெஹிகில்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் ஜனவரி 2022 வாக்கில் அறிமுகமாகிறது.
இந்தியாவில் பேட்டரி திறன் கொண்ட வாகனங்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோமகி நிறுவனம் தனது ஐந்தாவது எலெக்ட்ரிக் வாகனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வரும் கோமகி நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் பைக் மட்டும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களையும் கோமகி இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இ-பைக்-கோ நிறுவனத்தின் ரக்கட் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இ-பைக்-கோ நிறுவனம் தனது ரக்கட் எலெக்ட்ரிக் பைக் ஒரு லட்சம் முன்பதிவுகளை பெற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் அறிமுகமாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. முன்பதிவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்து இருப்பதாக இ-பைக்-கோ அறிவித்தது.
இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே உறுதியான எலெக்ட்ரிக் பைக் இது ஆகும். இந்திய விற்பனையை மேலும் சில நகரங்களுக்கு நீட்டிக்க இ-பைக்-கோ திட்டமிட்டு உள்ளது. ரக்கட் மாடலுக்கென முக்கிய விற்பனையாளர்களை மூன்று மாநிலங்களில் இ-பைக்-கோ தேர்வு செய்து இருக்கிறது. இத்துடன் 22 விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரும் மாதங்களில் மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் கிடைக்கும் என இ-பைக்-கோ எதிர்பார்க்கிறது. தீபாவளிக்கென இ-பைக்-கோ ரக்கட் மாடல் - ரெட், புளூ, பிளாக் மற்றும் ரக்கட் ஸ்பெஷல் எடிஷன் என நான்கு புதிய நிறங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கார் பயன்படுத்துவோர் அதன் எரிபொருள் செலவீனத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் எரிபொருள் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க துவங்கியுள்ளனர். சிலர் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனங்களில் மைலேஜை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சிக்கனமாக பணம் செலவழிக்கவும் கார் உபயோகிப்பவர்கள் மைலேஜ் அதிகம் தரும் கார்களை தான் விரும்புகின்றனர். கார் வாங்கும்போது சிறந்த மைலேஜ் தரும் கார் வாங்குவது அவசியம். அதிகம் செலவழித்து கார் வாங்கும் போது, அதனை சீராக பராமரித்தால் தான் அதன் மைலேஜ் சிறப்பாக இருக்கும். இதற்கு காரை சிறந்த முறையில் கையாள்வது அவசியம் ஆகும். காரின் மைலேஜ் அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
கார் வாங்கும்போது அதிக மைலேஜ் தரும் காரை தேர்ந்தெடுப்பது அவசியம். விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை அதன் மூலம் நமது தினசரி பயன்பாட்டு செலவை குறைக்க முடியும்.
கார் பராமரிப்பு சிறந்த கலை. பராமரிப்பில்லாத கார் அதிகமான எரிபொருளை செலவழிக்கும்.

காரின் ஏர்பில்டர் சுத்தமாக இருந்தால் சிறந்த மைலேஜ் பெறலாம். பில்டர் மாற்ற வேண்டியிருந்தால் மாற்றுவது அவசியம். ஸ்பார்க் பிளக் நல்லதாக இருக்க வேண்டும். அதிகமான தேய்மானம் உள்ள டயர்கள், ஓடும் திறனை குறைக்கும். அதனால் இழுவை திறன் குறையும். எனவே, சிறந்த டயர்களை பயன்படுத்த வேண்டும்.
கார் ஓட்டும்போது அடிக்கடி பிரேக் பிடித்து ஓட்டுவதால் அதிகமான எரிபொருள் இழப்பு ஏற்படும். எனவே, டிராபிக் ஜாம் மற்றும் அதிக நெருக்கடியான சாலைகளில் கவனமாக ஓட்ட வேண்டும்.
கைகளில் இயக்கும் கியர்களை மாற்றும்போது அதிகமாக அழுத்தம் கொடுத்து ஆக்சிலேட்டரை அழுத்த கூடாது. மென்மையாக அழுத்தி இலகுவாக கியரை மாற்ற வேண்டும். இதனால், எரிபொருள் இழப்பு ஏற்படாது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இவை அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
சிறப்பு சலுகைகளின் படி யமஹா 125சிசி பிரிவில் கிடைக்கும் பசினோ 125 எப்.ஐ., ரே இசட் ஆர் 125 எப்.ஐ., ரே இசட் ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. போன்ற மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் தற்போது ஆர்.15 வி4 (155சிசி) ஏ.பி.எஸ்., எம்.டி.15 (155சிசி) ஏ.பி.எஸ். புளூ கோர் தொழில்நுட்பம், எப்.இசட். 25 249சிசி (ஏ.பி.எஸ்.), எப்.இசட். எஸ் எப்.ஐ. 149சிசி ஏ.பி.எஸ்., எப்.இசட். எப்.ஐ. 149சிசி ஏ.பி.எஸ்., எப்.இசட். எக்ஸ் 149சிசி ஏ.பி.எஸ்., ஏரோக்ஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடல் முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன.
எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய எம்ஜி ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. முன்பதிவு துவங்கிய 20 நிமிடங்களில் முதற்கட்ட யூனிட்கள் விற்றுத்தீர்ந்தன. இந்தியாவில் எம்ஜி ஆஸ்டர் விலை ரூ. 9.78 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17.38 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய எம்ஜி ஆஸ்டர் மாடலில் டூயல்டோன் டேஷ்போர்டு, பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏ.ஐ. பெர்சனல் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. 6 ஏர்பேக் கொண்டிருக்கும் ஆஸ்டர் மாடலில் இ.எஸ்.சி., ஏ.பி.எஸ்., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ஹில் டிசெண்ட் கண்ட்ரோல், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல், 4 டிஸ்க் பிரேக், பார்கிங் சென்சார்கள், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், செக்யூரிட்டி அலாரம் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எம்ஜி ஆஸ்டர் மாடல் 108.5 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 138 பி.ஹெச்.பி. திறன், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கும் 1.3 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனம் புதிதாக உருவாக்கி வரும் ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் 350சிசி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஏ.டி.வி.350 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே பெயருக்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது.
ஹோண்டா அட்வென்ச்சர் ஸ்கூட்டர் பிரிவில் புதிய மாடலாக ஹோண்டா ஏ.டி.வி. இணைகிறது. தற்போது ஹோண்டா நிறுவனம் 745சிசி எக்ஸ்.ஏ.டி.வி. மற்றும் ஏ.டி.வி. 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஐரோப்பாவில் ஏ.டி.வி.350 பெயரை பயன்படுத்த ஹோண்டா நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் இணையத்தில் வலம்வருகின்றன. இந்த ஆவணங்களின்படி புதிய ஸ்கூட்டர் ஹோண்டா போர்சா 350 மேக்சி ஸ்கூட்டரை தழுவி உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய ஹோண்டா ஏ.டி.வி.350 ஸ்கூட்டரில் 330சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 29 பி.ஹெச்.பி. திறன் வழங்கும்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது.
தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான பாக்ஸ்கான் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
பாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியூ யங்-வே இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக பாக்ஸ்கான் நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் வாகனங்களை அறிமுகம் செய்தது.

பாக்ஸ்கான் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளிலும் அதன்பின் மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும். ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளர்களுடன் மறைமுகமாக கூட்டணி அமைக்கவும் பாக்ஸ்கான் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.






