search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கார் மைலேஜ் அதிகரிக்க இதை செய்தால் போதும்

    கார் பயன்படுத்துவோர் அதன் எரிபொருள் செலவீனத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்தியாவில் எரிபொருள் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில், பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க துவங்கியுள்ளனர். சிலர் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனங்களில் மைலேஜை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
     
    எரிபொருள் விலை உயர்வு மற்றும் சிக்கனமாக பணம் செலவழிக்கவும் கார் உபயோகிப்பவர்கள் மைலேஜ் அதிகம் தரும் கார்களை தான் விரும்புகின்றனர். கார் வாங்கும்போது சிறந்த மைலேஜ் தரும் கார் வாங்குவது அவசியம். அதிகம் செலவழித்து கார் வாங்கும் போது, அதனை சீராக பராமரித்தால் தான் அதன் மைலேஜ் சிறப்பாக இருக்கும். இதற்கு காரை சிறந்த முறையில் கையாள்வது அவசியம் ஆகும். காரின் மைலேஜ் அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

    கார் வாங்கும்போது அதிக மைலேஜ் தரும் காரை தேர்ந்தெடுப்பது அவசியம். விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை அதன் மூலம் நமது தினசரி பயன்பாட்டு செலவை குறைக்க முடியும்.
     கார் பராமரிப்பு சிறந்த கலை. பராமரிப்பில்லாத கார் அதிகமான எரிபொருளை செலவழிக்கும். 

     கோப்புப்படம்

    காரின் ஏர்பில்டர் சுத்தமாக இருந்தால் சிறந்த மைலேஜ் பெறலாம். பில்டர் மாற்ற வேண்டியிருந்தால் மாற்றுவது அவசியம். ஸ்பார்க் பிளக் நல்லதாக இருக்க வேண்டும். அதிகமான தேய்மானம் உள்ள டயர்கள், ஓடும் திறனை குறைக்கும். அதனால் இழுவை திறன் குறையும். எனவே, சிறந்த டயர்களை பயன்படுத்த வேண்டும்.

    கார் ஓட்டும்போது அடிக்கடி பிரேக் பிடித்து ஓட்டுவதால் அதிகமான எரிபொருள் இழப்பு ஏற்படும். எனவே, டிராபிக் ஜாம் மற்றும் அதிக நெருக்கடியான சாலைகளில் கவனமாக ஓட்ட வேண்டும்.
     கைகளில் இயக்கும் கியர்களை மாற்றும்போது அதிகமாக அழுத்தம் கொடுத்து ஆக்சிலேட்டரை அழுத்த கூடாது. மென்மையாக அழுத்தி இலகுவாக கியரை மாற்ற வேண்டும். இதனால், எரிபொருள் இழப்பு ஏற்படாது.

    Next Story
    ×