என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றி அமைத்தது. இவற்றின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.

    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட், டிரைபர், கைகர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஜூன், 2021 அன்று அமலுக்கு வந்தது. 

    விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடலின் பேஸ் RXE வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது. இதன் புதிய விலை ரூ. 5.50 லட்சம் ஆகும். மற்ற வேரியண்ட்களான RXL, RXT, RXZ மற்றும் RXZ டூயல் டோன் விலை ரூ. 13,200 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

     ரெனால்ட் கைகர்

    ரெனால்ட் டஸ்டர் மாடல் விலை ரூ. 13,050 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வு டஸ்டர் மாடலின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் க்விட் மாடல் விலை ரூ. 13,900 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கைகர் மாடலின் விலை ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 3090 துவங்கி அதிகபட்சம் ரூ. 39030 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா H2R மாடல் மிரர் கோட் செய்யப்பட்ட மேட் ஸ்பார்க் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.


    கவாசகி இந்தியா வலைதளத்தில் 2021 நின்ஜா H2R மோட்டார்சைக்கிள் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த மாடல் விலை ரூ. 79.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பந்தய களத்தில் இயக்கக்கூடிய மாடல் ஆகும். இதன் முந்தைய மாடல் விலை ரூ. 75.80 லட்சம் ஆகும்.

    முந்தைய வெர்ஷனை விட புது மாடலின் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பை போன்றே இது ஏரோடைனமிக் விங்லெட்கள், ஒற்றை புறத்தில் ஸ்விங் ஆர்ம் கொண்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் மிரர் கோட் செய்யப்பட்ட மேட் ஸ்பார்க் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

     2021 கவாசகி நின்ஜா H2R

    இந்த மோட்டார்சைக்கிள் 998சிசி, இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் சூப்பர்சார்ஜர் உள்ளது. இது என்ஜின் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது. இவை என்ஜினை 305.7 பிஹெச்பி திறன், 165 என்எம் டார்க்கில் இயக்க வழி வகுக்கிறது.

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச், பை-டைரெக்ஷனல் குவிக்ஷிப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளை அதிவேகமாக இயக்கும் போது சிறப்பாக கட்டுப்படுத்த தேவையான அதிநவீன அம்சங்கள் இந்த மாடலில் உள்ளது.
    ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.


    இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் பொது மக்களுக்கு உதவும் வகையில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

    அந்த வகையில் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் சார்பில் மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் நிரப்பப்படுகிறது.

     ரிலையன்ஸ் மொபிலிட்டி

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்நிறுவனம் கொரோனா சார்ந்த அவசர சேவையை வழங்கும் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கியது. இந்த சேவையை ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நாடு முழுக்க வழங்கியது.

    `மும்பையில் ரிலையன்ஸ் மொபிலிட்டி எரிபொருள் விற்பனை மையங்கள் நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது,' என ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    1888 பிஹெச்பி பவர் கொண்ட ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் உற்பத்தி துவங்கியது.

    ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலின் உற்பத்தி துவங்கியுள்ளது. ரிமேக் நிவெரா மாடல் 1888 பிஹெச்பி பவர், 2360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் காரின் நான்கு சக்கரங்களுக்கு தனித்தனியாக திறன் வழங்குகின்றன.

     ரிமேக் நிவெரா

    பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை போன்று இல்லாமல், இந்த காரில் உள்ள மோட்டார்கள் வித்தியாசமாக இருக்கின்றன. முன்புற சக்கரங்களில் உள்ள மோட்டார்கள் 670 பிஹெச்பி பவர், 560 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பின்புற மோட்டார்கள் 1206 பிஹெச்பி பவர், 1800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    முற்றிலும் வித்தியாசமான பவர்டிரெயின் ரிமேக் நிவெரா மாடலை ரியர்-வீல் டிரைவ் வாகனத்தை இயக்குவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.97 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 412 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.  
    எம்ஜி மோட்டார் நிறுவனம் சர்வதேச சந்தையில் எம்ஜி6 எக்ஸ்பவர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் எம்ஜி 6 எக்ஸ்பவர் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புது மாடல் அகலமான பாடி, ஏரோடைனமிக் பாடி கிட் கொண்டிருக்கிறது. இது ரேசிங் டிசைன் கொண்டுள்ளது.

     எம்ஜி6 எக்ஸ்பவர்

    எம்ஜி6 எக்ஸ்பவர் மாடலில் 305பிஎஸ் பவர் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த காரில் 480 என்எம் டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் எட்டிவிடும். இந்த என்ஜினுடன் 10 ஸ்பீடு EDU 2nd Gen எலெக்ட்ரிக் டிரைவ் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பிரேக்கிங்கிற்கு ரேசிங் கிரேடு 920E 6 பிஸ்டன் கொண்ட கேலிப்பர்கள் உள்ளது. இது 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் காரை 33 மீட்டர்களில் நிறுத்திவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பிரேக்குகளுடன் மிஷலின் பைலட் ஸ்போர்ட் CUP2 ரப்பர்கள் உள்ளது. இது காரை அதிவேகத்தில் ஓட்டும் போது சிறப்பாக கண்ட்ரோல் செய்ய உதவுகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் கார் சர்வீஸ்க்கு இதை மட்டும் செய்தாலே போதும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வாகன சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பவர்கள் வலைதளம் அல்லது ஸ்மார்ட்போன் செயலி மூலம் கார் சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும். 

     பிஎம்டபிள்யூ கார்

    சர்வீஸ் முன்பதிவில் துவங்கி, பணம் செலுத்துவது வரை அனைத்து சேவைகளையும் கான்டாக்ட்லெஸ் முறையில் பிஎம்டபிள்யூ மாற்றி இருக்கிறது. பிஎம்டபிள்யூ வலைதளத்தில் லாக் இன் செய்து எந்த தேதியில் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும்.

    பிஎம்டபிள்யூ ஒன் செயலி மூலமாகவும் கார் சர்வீஸ் செய்ய முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. செயலியில் மெக்கானிக்குகள் கார் சர்வீஸ் செய்யப்படும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவர்.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்பீடு ட்வின் மாடல் விவரங்கள் அதன் இந்திய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது இந்திய வலைதளத்தில் ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் விவரங்களை பதிவேற்றம் செய்து இரருக்கிறது. விலை தவிர மோட்டார்சைக்கிளின் அனைத்து விவரங்களும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

     2021 டிரையம்ப் ஸ்பீடு ட்வின்

    அதன்படி புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் ஒற்றை வேரியண்டில், மூன்றுவித நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஜெட் பிளாக், ரெட் ஹாப்பர் மற்றும் மேட் ஸ்டாம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ரெட் ஹாப்பர் மற்றும் மேட் ஸ்டாம் கிரே நிறங்களை விட ஜெட் பிளாக் மாடல் விலை குறைவாக இருக்கும் என தெரிகிறது.

    டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மாடலில் 1200சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்படுகிறது. இது 98.6 பிஹெச்பி பவர், 112 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் லிட்டருக்கு 19.60 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.
    மஹிந்திரா நிறுவனம் புதிய கார் வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆட்டோமொபைல் துறையில் சரிந்த வாகன விற்பனையை வேகப்படுத்தி மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில் உள்ளது.

    மஹிந்திரா வாகனங்கள் விலையை குறைப்பது மட்டுமின்றி வாகனம் வாங்கும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் வகையில் இருக்கிறது. புது சலுகைகளில்  'Own Now and Pay after 90 days' சலுகையும் ஒன்று. இது மஹிந்திராவின் பல்வேறு மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. 

     மஹிந்திரா கார்

    இதில் வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் எந்த மாடலையும்  மாத தவணையில் வாங்கிக் கொண்டு அதற்கான தவணையை 90 நாட்களுக்கு பின் செலுத்த துவங்கலாம். இந்த சலுகை கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

    புது மஹிந்திரா கார் வாங்குவோர் முடிந்தால் அவர்களின் அருகாமையில் உள்ள விற்பனை மையங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைன் தளம் மூலமாகவும் புது கார் வாங்கலாம்.
    கொரோனாவைரஸ் தொற்று பரவல் காரணமாக உற்பத்தி ஆலை பணி திட்டத்தை மாற்றிய ஹூண்டாய்.


    ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் மூன்றாவது ஷிப்ட் பணிகளை நிறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 31 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை மூன்றாவது ஷிப்ட் பணிகளை ஹூண்டாய் நிறுத்தி உள்ளது.

     ஹூண்டாய் கார்

    ஒரு ஷிப்ட் பணிகளை நிறுத்துவதன் மூலம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்றாலும், இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்க முடியும். முன்னதாக சென்னை உற்பத்தி ஆலை ஒரு வார காலத்திற்கு முழுமையாக மூடப்பட்டு இருந்தது. 

    ஊரடங்கு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலையை மூடின. ஆலையை மூடியதால் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தங்களின் முழு ஆக்சிஜனையும் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கின.
    லம்போர்கினி நிறுவனம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த சூப்பர்கார் மாடலை இந்தியா கொண்டுவருகிறது.

    லம்போர்கினி நிறுவனம் ஹரிகேன் இவோ ஸ்பைடர் மாடலை சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. புதிய ஹரிகேன் இவோ ஸ்பைடர் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த சூப்பர்கார் ஆர்டபிள்யூடி கூப் மாடலை போன்ற காஸ்மெடிக் அம்சங்கள் மற்றும் என்ஜின் கொண்டுள்ளது.

     லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர்

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ரியர்-வீல் டிரைவ் ஸ்பைடர் மாடல் முன்புற ஸ்ப்லிட்டர், வெர்டிக்கல் பின்கள், பெரிய முன்புற ஏர் டேம்கள் உள்ளன. பின்புற பம்ப்பர் ஹை கிளாஸ் பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்பைடர் மாடலில் உள்ள டாப் ரூப் 17 நொடிகளில் திறந்துவிடும். இதனை கார் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போதும் இயக்க முடியும்.  

    இந்த சூப்பர்கார் 5.2 லிட்டர் வி10 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 610 பிஹெச்பி பவர் கொண்டுள்ளது. இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 324 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர எஸ்யுவி மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேபக் GLS600 ஆடம்பர எஸ்யுவி மாடலை இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. GLS600 மெர்சிடிஸ் மேபக் சீரிசில் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். முன்னதாக 2019 வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகின் மற்ற சந்தைகளில் இது விற்பனை செய்யப்படுகிறது.

     மெர்சிடிஸ் மேபக் GLS600

    மேபக் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது GLS600 மேபக் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. GLS600 மேபக் பிஸ்போக் அம்சங்கள், உள்புறம் ஆடம்பர அம்சங்கள் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. வெளிப்புறத்தில் உள்ள ட்ரிம் பீஸ்கள் குரோம் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    மெர்சிடிஸ் மேபக் GLS600 மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 550 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் இகியூ பூஸ்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் கொண்டுள்ளது. இது 249 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமும் செய்ய திட்டமிட்டு உள்ளது. புது மாடல்களில் மல்டிஸ்டிராடா வி4 மாடலும் ஒன்று. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மல்டிஸ்டிராடா வி4 ஜூன் மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    மல்டிஸ்டிராடா வி4 மட்டுமின்றி டுகாட்டி நிறுவனம் டையவெல் 1260 மற்றும் பேனிகேல் வி4 மாடல்களையும் இம்மாதமே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மல்டிஸ்டிராடா வி4 மாடல் - ஸ்டான்டர்டு, வி4எஸ் மற்றும் வி4 எஸ் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4

    பேனிகேல் வி4 மாடலில் வழங்கப்பட்ட என்ஜின் புது மல்டிஸ்டிராடா வி4 மாடலிலும் வழங்கப்படுகிறது. எனினும், இந்த என்ஜின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளுக்கு ஏற்ற டியூனிங் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி வி4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், டுகாட்டி ஷிப்ட் பை-டைரெக்ஷன் குவிக் ஷிப்டர் வழங்கப்பட்டு உள்ளது.
    ×