என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க ஹைப்பர்சார்ஜர்களை நிறுவும் பணிகளை துவங்கி இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களின் வினியோக பணிகளை சமீபத்தில் துவங்கியது. வினியோகம் துவங்கியதை தொடர்ந்து நாடு முழுக்க ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் அமைக்கும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் தீவிரப்படுத்தி இருக்கிறது. 

    முதற்கட்டமாக நாட்டின் பெரும்பாலான நகரங்கலில், ஹைப்பர்சார்ஜர்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்குள் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் மையங்களை நிறுவ ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவப்படும் ஹைப்பர்சார்ஜர்கள் 6 முதல் 8 வாரங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    புதிய சார்ஜிங் மையங்கள் குடியிருப்புகள் மற்றும் பி.பி.சி.எல். பெட்ரோல் பங்க்களில் நிறுவப்படுகிறது. சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பி.பி.சி.எல். நிறுவனத்துடனான கூட்டணியை முறைப்படுத்த இருக்கிறது. முதல் ஆறு மாதங்களுக்கு சார்ஜிங் மையங்கள் இலவசமாக செயல்பட இருக்கிறது. அதன்பின் படிப்படியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட இருக்கின்றன. 
    சமூக வலைதளத்தில் உடல் ஊனமுற்றவரின் வீடியோ பார்த்து, உடனடியாக அவருக்கு உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


    இரு கை மற்றும் கால்கள் இல்லாத நபர், மாடிஃபை செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை மிக நேர்த்தியாக இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. வைரல் வீடியோவை தனது டைம்லைனில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஊனமுற்றவரின் திறமையை பார்த்து வியந்துள்ளார். 

    மேலும் அவரின் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டி அவருக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். இதுபற்றிய தகவலை ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    'இதனை இன்று எனது டைம்லைனில் பார்த்தேன். இது எவ்வளவு பழையது என்றோ, எங்கிருந்து வந்ததோ என தெரியாது. ஆனால் இந்த நபரின் செயலால் பூரித்துப் போனேன்,' என தெரிவித்துள்ளார். மேலும் தனது நிறுவன அதிகாரியிடம் இவருக்கு தகுந்த வேலை வழங்கவும் உத்தரவிட்டார். 

    இவரது டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், 'இவரை தேடி வருகிறோம். இவர் நமக்கு மிகவும் பயனுள்ள சொத்து. உண்மையான சூப்பர்ஹீரோ,' என பதில் அளித்தது. 

    ஹூவாய் நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த புதிய கார் மாடலை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஹூவாய் தனது இரண்டாவது கார் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஐடோ எம்5 பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்.யு.வி. மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் முன்பதிவில் ஐந்தே நாட்களில் 6 ஆயிரம் யூனிட்களை கடந்தது.

    புதிய ஹூவாய் ஐடோ எம்5 மாடல் ஒன்று அல்லது இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வழங்கப்படுகிறது. இதன் ரியர்-வீல் டிரைவ் வெர்ஷன் 204 பி.ஹெச்.பி. திறன், 4-வீல் டிரைவ் வெர்ஷன் 224 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இதன் 4-வீல் டிரைவ் ஒட்டுமொத்தமாக 428 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும். 

     ஹூவாய் ஐடோ எம்5

    இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 125 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 40 கிலோவாட் ஹவர் பேட்டரியை சார்ஜ் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்கள் புதிய நிறத்தில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களை வெல்வெட் கிரீன் நிறத்தில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார்களில் பிளாக் ரைனோ பேட்ஜ்கள் பொருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

    புதிய வெல்வெட் கிரீன் நிற வேரியண்ட் லிமிடெட் எடிஷனாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் உள்புறமும் டூயல் டோன் ஷேட் வழங்கப்படும் என தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டாடா ஹேரியர்

    இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 
    ஒகாயா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    ஒகாயா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒகாயா ஃபாஸ்ட் என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 இ.வி. எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 89,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஒகாயா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. 

    ஒகாயா ஃபாஸ்ட்

    ஒகாயா ஃபாஸ்ட் மாடலில் 4.4 கிலோவாட் லித்தியம் ஃபாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பயன்பாட்டிற்கு ஏற்றவாரு இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒகாயா ஃபாஸ்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் 2021 ஸ்பெக்டர் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    செப்டம்பர் மாத வாக்கில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் காரை உருவாக்க முடிவு செய்தது. இந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி 2023 வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் காணப்படுகின்றன. இந்த காரின் கிரில் அளவில் பெரியதாக காட்சியளிக்கின்றது.

     ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 700 ஹெச்.பி. திறன், 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பேக் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

    ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்ட பேட்டரியுடன் நெக்சான் இ.வி. அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா நெக்சான் இ.வி. மாடல் விரைவில் 40 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வேரியண்ட் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலுடன் சேர்த்து விற்பனையாகும். 

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாக நெக்சான் இ.வி. இருக்கிறது. இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. மாடல் 70 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போதைய நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3 பேஸ் மேகனட் சின்க்ரோனஸ் மோட்டார் உள்ளது. 

     டாடா நெக்சான் இ.வி.

    இவை இந்த காருக்கு 127.23 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும். புதிய பேட்டரி பேக் நெக்சான் இ.வி. மாடலை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கும். கூடுதல் ரேன்ஜ் மட்டுமின்றி காரில் 100 கிலோ எடையை கூடுதலாக எடுத்து செல்ல முடியும்.
    மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.


    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசில்லா போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தொடர் வரவேற்பு காரணமாக மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன முதலீட்டில் பத்து சதவீத தொகையை தனது லாஸ்ட்-மைல் மொபிலிட்டி பிரிவில் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் மஹிந்திரா எலெக்ட்ரிக் உற்பத்தி திறனை இருமடங்கு அதிகரித்து மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட குவாட்ரிசைக்கிள் பிரிவில் மொத்தம் ஆறு புதிய வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

     மஹிந்திரா

    அடுத்த நிதியாண்டில் 14-இல் இருந்து 15 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து 2023 நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க மஹிந்திரா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எனினும், தற்போதுள்ள செமிகண்டக்டர் குறைபாடு எதிர்காலத்தில் மேலும் மோசமடையாமல் இருக்க வேண்டும். 

    இந்த நிதியாண்டு மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் லாஸ்ட் மைல் மொபிலிட்டி பிரிவில் 7 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
    ஒன் மோட்டோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    பிரிட்டன் நாட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒன் மோட்டோ இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் எலெக்டா என அழைக்கப்படுகிறது. இ.வி. இந்தியா எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் மோட்டோ எலெக்டா விலை ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், வளைந்த ஃபூட்போர்டு செக்‌ஷன், அழகாக காட்சியளிக்கும் வட்ட வடிவ பாடி பேனல்கள் உள்ளன. தோற்றத்தில் இந்த மாடல் வெஸ்பா போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒன் மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து ஜியோ-பென்சிங், ப்ளூடூத், ஐ.ஓ.டி., மெயின்டனன்ஸ் அலெர்ட் மற்றும் கம்யூடிங் பிஹேவியர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

     ஒன் மோட்டோ எலெக்டா

    இந்த ஸ்கூட்டரில் 72வோல்ட் 45ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி நான்கு மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.


    ஒகினவா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒகினவா குறைந்த விலை மற்றும் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

     ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஒரு லட்சம் யூனிட்களில் 60 முதல் 70 சதவீத யூனிட்கள் ஐ பிரைஸ் பிளஸ் மற்றும் பிரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இரு ஸ்கூட்டர்களும் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை மணிக்கு அதிகபட்சம் 58 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. 

    ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாடு முழுக்க 400-க்கும் அதிக விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய ஒகினவா திட்டமிட்டுள்ளது. இதில் பாதி தொகை முதல் ஆண்டிலேயே முதலீடு செய்யப்படுகிறது. 

    யெஸ்டி பிராண்டின் ரோட்கிங் மாடல் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    யெஸ்டி நிறுவனம் சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான பணிகளை துவங்கியது. தற்போது ரோட்கிங் அட்வென்ச்சர் மாடல் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என யெஸ்டி அறிவித்தது. முன்னதாக யெஸ்டி நிறுவன மோட்டார்சைக்கிள் படங்கள் இணையத்தில் வெளியாகின.

    புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

     யெஸ்டி ரோட்கிங்

    யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஓலா எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் மேலும் சில நகரங்களில் துவங்க இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகத்தை மேலும் சில நகரங்களுக்கு நீட்டிக்க இருக்கிறது. தற்போது பெங்களூரு மற்றும் சென்னை என இரு நகரங்களில் மட்டும் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

    தற்போதைய தகவல்களின்படி மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் விசாகபட்டினம் போன்ற நகரங்களில் அடுத்த வாரம் முதல் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் துவங்குகிறது. இந்தியாவில் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய பெங்களூரு மற்றும் சென்னையில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ×