என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் 2021 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 2021 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 67.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கூப் மாடல் 5 சீரிஸ் போன்ற ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மூன்று பவர்டிரெயின் ஆப்ஷன்கள், மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ காரை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 1.50 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ட்வீக் செய்யப்பட்டு கம்பீர தோற்றம் பெற்று இருக்கிறது. இதில் உள்ள அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், புதிய டூயல் எல் வடிவ டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.

புதிய 6 சீரிஸ் ஜிடி மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 255 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 188 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் 3.0 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 261 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 77.90 லட்சம் ஆகும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பல்சர் சீரிஸ் மாடல்களின் விலையை திடீரென மாற்றியமைத்து இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் தனது மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. அந்த வகையில் விலை உயர்த்துவதில் ஹோண்டா, யமஹா மற்றும் ஹீரோ நிறுவனங்களுடன் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் இணைந்துள்ளது.
விலை உயர்வின் படி பல்சர் 125 மற்றும் பல்சர் 150 மாடல்கள் ரூ. 1,747 உயர்த்தப்பட்டு இருக்கின்றன. பஜாஜ் பல்சர் மாடல்கள் புதிய விலை விவரம் கீழே காணலாம்.

பல்சர் 125 டிரம் மாடல் புது விலை ரூ. 73,363
பல்சர் 125 டிஸ்க் மாடல் புது விலை ரூ. 79,693
பல்சர் 125 ஸ்ப்லிட் சீட் டிரம் மாடல் புது விலை ரூ. 76,045
பல்சர் 125 ஸ்ப்லிட் சீட் டிஸ்க் மாடல் புது விலை ரூ. 82,989
பல்சர் 150 நியோன் மாடல் புது விலை ரூ. 95,872
பல்சர் 150 மாடல் புது விலை ரூ. 1,01,818
பல்சர் 150 ட்வின் டிஸ்க் மாடல் புது விலை ரூ. 1,04,651
பல்சர் 180 மாடல் புது விலை ரூ. 1,09,651
பல்சர் 220எப் மாடல் புது விலை ரூ. 1,28,250
பல்சர் என்எஸ்160 மாடல் புது விலை ரூ. 1,11,834
பல்சர் என்எஸ்200 மாடல் புது விலை ரூ. 1,35,226
இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் சீரிசில் புதிதாக 250சிசி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் இரு கார் மாடல்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இன்னோ க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. வேரியண்டிற்கு ஏற்ப இரு மாடல்களின் விலை ரூ. 27 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 72 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருககிறது. கிளான்சா, யாரிஸ், அர்பன் குரூயிசர் போன்ற டொயோட்டா மாடல்களின் விலை தற்போது உயர்த்தப்படவில்லை.
இன்னோவா க்ரிஸ்டாவின் அனைத்து வேரியண்ட்களும் விலை உயர்வில் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி G+ MT 7 மற்றும் 8 சீட் வேரியண்ட் அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பார்ச்சூனர் மாடலின் விலை ரூ. 36 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் மாடலான லெஜண்டர் ரூ. 72 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் டொயோட்டா நிறுவனம் முன்னணி கார் உற்பத்தியாளராக அறியப்படுகிறது. இந்தியாவில் ஏழாவது பெரும் நிறுவனமாக டொயோட்டா இருக்கிறது. வாகன விற்பனையில் டொயோட்டா சர்வதேச சந்தையில் முன்னணியில் இருக்கிறது. இந்திய சந்தையில் பல்வேறு பிரிவுகளில் டொயோட்டா பல மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
எனினும், டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்கள் பிரீமியம் பிரிவை சார்ந்தவையாக இருக்கின்றன. டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இன்னோவா இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் இன்னோவா க்ரிஸ்டா 5743 யூனிட்கள் விற்பனையானது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு 7 சீட் எஸ்யுவி அல்காசர் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
ஆட்டோமொபைல் சந்தையில் 2021 ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 7 சீட் எஸ்யுவியாக அல்காசர் இருக்கிறது. கடந்த மாதம் அல்காசர் மாடலின் வரைபடங்களை ஹூண்டாய் வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த காரின் அம்சங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலின் வீல்பேஸ் 2760 எம்எம் ஆக இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் 2.0 லிட்டர் பெட்ரோல், யு2 1.5 விஜிடி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 155 பிஹெச்பி மற்றும் 112 பிஹெச்பி திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முந்தைய தலைமுறை என்ஜினை விட புதிய என்ஜின் 7 பிஹெச்பி கூடுதல் திறன் மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் அல்காசர் மாடல் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் 2021 ஆக்டேவியா மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் 2021 புத்தாண்டை குஷக் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து துவங்கியது. தற்போது ஸ்கோடா தனது நான்காவது தலைமுறை ஆக்டேவியா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலின் முதல் யூனிட் ஔரங்காபாத் நகரில் உள்ள ஸ்கோடா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
புதிய ஆக்டேவியா மாடல் மேம்பட்ட மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், டூயல் எல் வடிவ டிஆர்எல்கள், முன்புற பம்ப்பரில் மெல்லிய குரோம் ஸ்ட்ரிப் போன்றவை உள்ளன. புதிய மாடல் முந்தைய வேரியண்டை விட நீளமாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது.

இதில் உள்ள புதிய ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள் காருக்கு அழகிய தோற்றத்தை வழங்குகிறது. உள்புறம் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பெரிய மிதக்கும் வகையிலான தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் 2-ஸ்போக் ஸ்டீரிங் வீல், ஸ்கிரால் பட்டன்கள், எல்இடி ஆம்பியன்ட் லைட்டிங், லெதர் இருக்கைகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் புது மாடலில் உள்ளன. 2021 ஆக்டேவியா மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அதிம் எதிர்பார்க்கப்பட்ட சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் வெளியிடப்பட்டது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மாடலாக சி5 ஏர்கிராஸ் மிட்-சைஸ் எஸ்யுவி-யை வெளியிட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 29.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 174 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் இரண்டு வேரியண்ட் மற்றும் ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் போக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கவாசகி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.
கவாசகி நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தலான தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி வல்கன் எஸ், வெர்சிஸ் 650, டபிள்யூ800 மற்றும் நின்ஜா 1000 எஸ்எக்ஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. இவை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நாடு முழுக்க அனைத்து கவாசகி விற்பனையாளர்களிடமும் வழங்கப்படுகிறது.

சலுகை விவரங்கள்
இந்தியாவில் ரூ. 6.04 லட்சம் விலையில் கிடைக்கும் வல்கன் எஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரமும், ரூ. 7.08 லட்சம் விலையில் கிடைக்கும் வெர்சிஸ் 650 மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், ரூ. 11.29 லட்சம் விலையில் கிடைக்கும் டபிள்யூ800 மற்றும் நின்ஜா 1000எக்எக்ஸ் மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவை தவிர ஆப்-ரோடு மாடல்களான கேஎல்எக்ஸ் 110, கேஎல்எக்ஸ்140 மற்றும் கேஎக்ஸ்100 போன்ற மாடல்களுக்கு முறையே ரூ. 30 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய லோகோவை சர்வதேச சந்தையில் வெளியிட்டது. தற்போது இந்த லோகோ இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை புது டீசர் மூலம் கியா தெரிவித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஜனவரி 6 ஆம் தேதி புது லோகோ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இது ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகமாகிறது. தற்போதைய லோகோவை சுற்றி சிவப்பு நிற அவுட்லைன் உள்ளது. புதிய லோகோ சில்வர் நிறம் கொண்டிருக்கிறது. புதிய கார் வெளியாகும் போது காரின் நிறத்தையே லோகோவில் பயன்படுத்த கியா முடிவு செய்துள்ளது.

இதேபோன்ற வழிமுறையை பிஎம்டபிள்யூ ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் கார்களுக்கு பிரத்யேக தோற்றத்தை வழங்க முடியும். செல்டோஸ் கிராவிட்டி எடிஷன் காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் கியா சொனெட் மாடலும் புதிய லோகோவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எப் பேஸ் மாடலுக்கான இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது எப் பேஸ் மாடலின் மிட்-லைப் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் வினியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய எஸ்யுவி மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களும் ஆர்-டைனமிக் எஸ் வேரியண்டில் வழங்கப்படுகிறது. 2021 ஜாகுவார் எப் பேஸ் மாடலில் இரட்டை ஜெ வடிவ எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கிறது. முன்புற கிரில் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கிறது.

முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் சிறு மாற்றம் செய்யப்பட்டு, எல்இடி டெயில் லேம்ப்கள் முந்தைய மாடலில் இருந்தை விட மெல்லியதாக இருக்கின்றன. இவை அனைத்தும் காருக்கு அதிநவீன தோற்றத்தை வழங்குகின்றன. உள்புற கேபின் முழுக்க டிஜிட்டல் காக்பிட் உள்ளது. இதில் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் ஹெச்டி டச்-ஸ்கிரீன் பிவி ப்ரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
புதிய எப் பேஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து மாடல்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் AWD ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மூன்று மாடல்கள், ஒரு சிகேடி மாடல் கொண்டு ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
2015 ஆம் ஆண்டு முதல் தலைமுறை கிரெட்டா மாடலை கொண்டு இந்த பயணம் துவங்கியது. இது ஹூண்டாய் எஸ்யுவி மாடல்களில் அதிக யூனிட்கள் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு வென்யூ சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் போதே ஹூண்டாய் நிறுவனம் எஸ்யுவி மாடல்கள் விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்துவிட்டது. இதே ஆண்டில் ஹூண்டாய் தனது கோனா எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது.
தற்போது எஸ்யுவி மாடல்களில் பத்து லட்சம் யூனிட்களை கடந்து இருக்கும் நிலையில், ஹூண்டாய் வென்யூ, கிரெட்டா, டக்சன் மற்றும் கோனா எலெக்ட்ரிக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. கோனா எலெக்ட்ரிக் தவிர மற்ற அனைத்து மாடல்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. கோனா எலெக்ட்ரிக் சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
டிரையம்ப் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய டிரைடென்ட் 660 மாடலை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 6.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது.
டிரைடென்ட் 660 மாடலில் ப்ளூடூத் மாட்யூல் வசதியுடன் கூடிய டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு செயல்படும். மேலும் கூடுதல் தொகைக்கு கோப்ரோ கேமரா கண்ட்ரோல் செய்வதற்கான வசதியும் இந்த மாடலுடன் வழங்கப்படுகிறது.

புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மாதாந்திர விற்பனை இதுவரை இல்லாத வகையில் 500 சதவீத வளர்ச்சியை கடந்த மாதம் பதிவு செய்தது. இந்த வளர்ச்சிக்கு டாடா நிறுவனத்தின் அனைத்து பயணிகள் கார் மாடல்களும் பங்களித்து இருக்கின்றன. இதில் டாடா நெக்சான் இவி மாடலும் ஒன்று.
தற்போது நெக்சான் இவி விற்பனையில் 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமான 14 மாதங்களில் இந்த இலக்கை நெக்சான் இவி எட்டியுள்ளது. புதிய மைல்கல் மட்டுமின்றி மாதாந்திர விற்பனையில் நெக்சான் இவி அதிக யூனிட்களை பதிவு செய்துள்ளது.

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 64 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் நெக்சான் இவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறைந்த விலை, அதிக டிரைவிங் ரேன்ஜ் போன்ற காரணங்களால் இந்த எஸ்யுவி தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.






