search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா"

    இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் கியா கார்னிவல் சோதனை செய்யப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மல்டி-பர்ப்பஸ் வாகனமான கியா கிரான்ட் கார்னிவல் குர்கிராமில் சோதனை செய்யப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு போட்டியாக இருக்கும் புதிய MPV மாடல் இணையத்தில் கசிந்துள்ளது.

    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட பெரியதாக இருக்கும் கிரான்ட் கார்னிவல் 7, 8 மற்றும் 11 இருக்கைகளை கொண்ட ஆப்ஷன்களில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக இடவசதி கொண்டிருப்பதோடு பிரீமியமாகவும் இருக்கிறது. 
    இந்தியாவில் கியா கிரான்ட் கார்னிவல் மாடல் இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கு அடுத்த நிலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி gaadiwaadi.com

    கியா கிரான்ட் கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 199 பிஹெச்பி @3800 ஆர்பிஎம் மற்றும் 441 என்எம் டார்கியூ @1750-2750 ஆர்பிஎம் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் 3.3 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடலும் விற்பனை செய்யப்படுகிறது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் நிலையில், கியா தனது கிரான்ட் கார்னிவல் மாடலில் பொருத்த இன்ஜின்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்திய சந்தைக்கு ஏற்ற கிரான்ட் கார்னிவல் மாடலை மதிப்பிடும் பணிகளில் கியா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ×