search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஜாகுவார் எப் பேஸ்
    X
    ஜாகுவார் எப் பேஸ்

    2021 ஜாகுவார் எப் பேஸ் முன்பதிவு துவக்கம்

    ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எப் பேஸ் மாடலுக்கான இந்திய வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் தனது எப் பேஸ் மாடலின் மிட்-லைப் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் வினியோகம் மே மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. 

    புதிய எஸ்யுவி மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களும் ஆர்-டைனமிக் எஸ் வேரியண்டில் வழங்கப்படுகிறது. 2021 ஜாகுவார் எப் பேஸ் மாடலில் இரட்டை ஜெ வடிவ எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கிறது. முன்புற கிரில் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கிறது. 

     ஜாகுவார் எப் பேஸ்

    முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் சிறு மாற்றம் செய்யப்பட்டு, எல்இடி டெயில் லேம்ப்கள் முந்தைய மாடலில் இருந்தை விட மெல்லியதாக இருக்கின்றன. இவை அனைத்தும் காருக்கு அதிநவீன தோற்றத்தை வழங்குகின்றன. உள்புற கேபின் முழுக்க டிஜிட்டல் காக்பிட் உள்ளது. இதில் 11.4 இன்ச் வளைந்த கிளாஸ் ஹெச்டி டச்-ஸ்கிரீன் பிவி ப்ரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

    புதிய எப் பேஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து மாடல்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் AWD  ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
    Next Story
    ×