என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இரண்டு மாடல்களுக்கு கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் மற்றும் டைகர் 800 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
புதிய ஆப்ஷன் பெற விரும்புவோர் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டத்தை வாங்கிக் கொள்ள முடியும். இந்த ரெட்ரோபிட் அம்சம் டிரையம்ப் டைரக் 1200 மாடலுக்கு 2021 வாக்கில் வழங்கப்பட இருக்கிறது.
ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலம் பயனர்கள் கூகுளின் ‘turn-by-turn’ நேவிகேஷன் சிஸ்டம், கோப்ரோ கண்ட்ரோல் சிஸ்டம், மியூசிக் மற்றும் போன் கண்ட்ரோல், பைக் ஸ்டேட்டஸ் மாணிட்டரிங் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும்.
மை டிரையம்ப் ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. பயனர்கள் இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் இவி மாடலை இந்திய சந்தையில் தனது இரண்டாவது மாடலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் எம்ஜி இசட்எஸ் மாடல் துவக்க விலை ரூ. 20.88 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது இசட்எஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன்படி எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் மாடல் 2021ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் நிசான் கிக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட முற்றிலும் புதிய எம்பிவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் புதிய கியா எம்பிவி மாடல் இந்திய சந்தையில் 2022 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய எம்பிவி மாடல் கார்னிவல் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என தெரிகிறது. அளவில் புதிய கார் மஹிந்திரா மராசோ மாடலுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அளவில் இது மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கு நடுவில் இருக்கும் என தெரிகிறது.
மேலும் இந்த மாடல் ஏழு பேர் பயணிக்கும் இருக்கைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பில் இது கூர்மையான தோற்றம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் லைன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் டைகர் நோஸ் கிரில் வழங்கப்படும் என தெரிகிறது.
கியா நிறுவனத்தின் புதிய எம்பிவி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 115 பிஹெச்பி பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. இந்த எம்பிவி மாடல் பல்வேறு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 100 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்வேறு நவீன அம்சங்களுடன் புதிய பிளாட்டினா மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிளாட்டினா 100 கிக் ஸடார்ட் (கேஎஸ்) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இது பிளாட்டினா பிராண்டின் நிரூபிக்கப்பட்ட கம்போர்டெக் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது சவாரியின் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. புதிய பிளாட்டினா மோட்டார்சைக்கிள் ஸ்பிரிங் ஆன் ஸ்பிரிங் நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன் உடன் வருகிறது. இது நீண்ட சவாரிகளில் 15 சதவீதம் கூடுதல் வசதியை வழங்குகிறது.
புதிய மாடலில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், பாதுகாப்பான மற்றும் சச்சரவில்லாத சவாரிக்கு உறுதியளிக்கிறது. பிளாட்டினா 100 கேஎஸ் மோட்டார்சைக்கிள் காக்டெய்ல் ஒயின் ரெட் மற்றும் எபோனி பிளாக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கேஎஸ் மாடல் விலை ரூ. 51,667, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நாடு முழுக்க இயங்கி வரும் அனைத்து விற்பனையாளர்களிடமும் கிடைக்கும்.
2021 எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்யுவி மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பேஸ்லிப்ட் ஹெக்டார் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் என்ஜின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் வாகனமாக ஹெக்டார் எஸ்யுவி 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகமானது முதல் ஹெக்டார் மாடல் அதிக பிரபலமான எஸ்யுவி ஆக இருந்து வருகிறது. மேலும் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் எம்ஜி ஹெக்டார் இருந்து வருகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ரேபிட் மாடல் இந்த பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா எனும் பெயரை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரியுள்ளது. இது ஸ்கோடா நிறுவனத்தின் புதிய தலைமுறை ரேபிட் மாடலுக்கு சூட்டப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் 2021 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இதே மாடல் ரஷ்யாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் மாடல் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி வருகிறது.
இந்த மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது 114 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரின் வெளிப்புறம் பட்டர்பிளை கிரில், ஏரோ வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், டைமன்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஸ்கோடா ரேபிட் மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. புதிய ரேபிட் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் நான்காவது தலைமுறை ஆக்டேவியா மாடலையும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் ஹைப்ரிட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா தனது முதல் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனத்துக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இது டிபென்டர் P400e ஆகும். இது SE, HSE, X-Dynamic HSE, மற்றும் X என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விநியோகம் 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிகிறது.
புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் பிளக்-இன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 105-kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் 398 பிஹெச்பி பவர், 640 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.6 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 209 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
மஹிந்திரா நிறுவன வாகனங்களின் விலை இந்த தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன் படி விலை உயர்வு ஜனவரி 1, 2021 முதல் அமலாக இருக்கிறது. விலை உயர்வு பயணிகள் வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கும் பொருந்தும்.
உதிரிபாகங்கள் மற்றும் இதர உள்கட்டமைப்பு கட்டணம் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. வெவ்வேறு மாடல்களின் புதிய விலை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
கடந்த நிதியாண்டு வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் பல்வேறு சலுகைகள் மற்றும் கவர்ச்சிகர தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்தது. இதுதவிர டிசம்பர் 2020 முதல் ஆன்லைன் மூலம் விற்பனையாகும் அக்சஸரீக்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி வருகிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய வெளியீடு தாமதமாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக ஸ்வார்ட்பிளேன் 401 மற்றும் விட்பிளேன் 401 மாடல்கள் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இரு மாடல்களும் பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இரண்டு ஹஸ்க்வர்னா 401 மாடல்களும் கேடிஎம் 390 டியூக் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை டிரெலிஸ் பிரேமை சுற்றி சப்-பிரேம் மீது போல்ட் ஆன் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 43 பிஹெச்பி பவர், 37 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் டக்சன் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புத்தம் புதிய டக்சன் மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் 2021 மார்ச் முதல் மே மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சர்வதேச சந்தை விற்பனையில் அசத்தி வரும் ஹூண்டாய் டச்கன் பல்வேறு எலெக்ட்ரிக் பவர்டிரெயின்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. டக்சன் பிளக்-இன் வேரியண்ட்டில் சக்திவாய்ந்த பவர்டிரெயின் வழங்கப்படும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த சிஸ்டம் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ ஸ்மார்ட்ஸ்டிரீம் என்ஜின் சார்ந்த உருவாகிறது. இத்துடன் 66.9kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 304 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 13.8kWh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்படுகிறது.
என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றிணைந்து 258 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு தள்ளுபடி, சலுகை மற்றும் வருட இறுதி பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி தள்ளுபடி மற்றும் சலுகைகள் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3.06 லட்சம் வரை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 20,550 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களுக்கு முறையே ரூ. 56,760 மற்றும் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி மாடலுக்கு ரூ. 62,055 மதிப்பிலான சலுகைகளும், மராசோ எம்பிவி மாடலுக்கு ரூ. 41 ஆயிரம் வரையிலான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா எக்ஸ்யுவி300 மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
இறுதியில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நேரடி தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட் பலன்கள் என பலவிதங்களில் பிரித்து வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இது 2021 ஆண்டு ஆடி நிறுவனத்தின் முதல் வெளியீடாக ஏ4 பேஸ்லிப்ட் இருக்கும். இந்த கார் பி9 ஆடி 4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிட்-லைப் பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.
புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.






