search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆடி
    X
    ஆடி

    புதிய ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி துவக்கம்

    ஆடி நிறுவனத்தின் புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இதன் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் தனது ஏ4 பேஸ்லிப்ட் மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்த கார் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் இது 2021 ஆண்டு ஆடி நிறுவனத்தின் முதல் வெளியீடாக ஏ4 பேஸ்லிப்ட் இருக்கும். இந்த கார் பி9 ஆடி 4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிட்-லைப் பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.

    புதிய ஏ4 பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புறம், உள்புறங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி மேம்பட்ட முன்புற பம்ப்பர், கிரில், புதிய மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், புது டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    இந்த காரில் 2.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. அறிமுகமானதும் ஆடி ஏ4 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸஇ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

    Next Story
    ×