என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
      • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தையல்நாயகி காய்கறி சந்தையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் உயர் மின்னழுத்த கோபுரத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் நெல்சன் வரவேற்று பேசினார்.

      நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சந்திரன், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தர், முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல் என்ற நெப்போலியன், மகளிர் அணி சரஸ்வதி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், ஒன்றிய பிரதிநிதி ஆதி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

      • செல்லையா அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
      • சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று செல்லையா உடலை மீட்டனர்.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பெரியகுளத்தில் கருமடையூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா (வயது80). இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

      இது குறித்து பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டு பள்ளி நண்பர்களுடன் கலந்துரையாடினர்.
      • தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-ம்ஆண்டு படித்த முன்னாள் மாணவ ர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி ஆலங்குளம்-துத்திகுளம் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

      50 முன்னாள் மாணவர்கள்

      நிகழ்ச்சிக்கு டெல்லி ஐ.ஐ.டி. கணிதவியல் துறை பேராசிரியர் டாக்டர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். பேராசிரியர் லட்சுமண பாண்டியன், கோவை சித்த மருத்துவர் சண்முக பாண்டி யன், ஆசிரியர் சாமுவேல், விவசாயி மகிழம்பூ, சென்னை மாநகரா ட்சி நடுநிலைப்பள்ளி தலை மை ஆசிரியை கலா சாந்தகு மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாண வர் ஜேம்ஸ் வரவேற்றார்.

      நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் பள்ளி நண்பர்களுடன் பழைய நினைவுகளையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் பகிர்ந்து கலந்துரை யாடினர். மேலும் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிய ர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.

      நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்களாக தர்மராஜ், கலா சாந்தகுமாரி, மகேஷ், நாதன், ஜேம்ஸ், நமச்சிவாயம், லட்சுமண பாண்டியன் ஆகியோர் செயல்பட்டனர்.

      • அம்ருத் பாரத் ரெயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை சேர்க்க வேண்டும்.
      • செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அமைக்க வேண்டும்.

      நெல்லை:

      செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:-

      அம்ருத் பாரத்

      அடுத்த கட்ட அம்ருத் பாரத் ரெயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை சேர்க்க வேண்டும். செங்கோட்டை - சென்னை இடையேயான பொதிகை அதிவேக ரெயிலுக்கு (12662) சென்னை மாம்பலத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பிட்லைன் வசதி செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாகவும், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், நெல்லை வழியாகவும் பிற மாநில ங்களுக்கு புதிய ரெயி ல்களை இயக்க முடியும்.

      செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போதுள்ள 4 நடைமேடைகளோடு புதிதாக 5-வது நடைமேடை அமைக்க வேண்டும். இங்குள்ள கணினி முன்பதிவு மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலைய நடை மேடைகளில் லிப்ட்டு களை அமைக்க ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டும் இன்ற ளவும் நிறுவப்ப டவில்லை. அவற்றை விரைவில் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

      நிரந்தர ரெயில்களாக

      தற்போது இயங்கி கொண்டிருக்கும் வாராந்திர ரெயில்களான நெல்லை - மேட்டுப்பாளையம், தென்காசி வழியாக இயக்கப்படும் நெல்லை- தாம்பரம் ரெயில்களை நிரந்தர ரெயில்களாக்க வேண்டும். எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங் கண்ணிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரெயிலை வாரம் இரு முறை நிரந்தரமாக இயக்க வேண்டும்.

      தற்போது 12 பெட்டிகளோடு ஓடும் செங்கோட்டை - மயிலாடுதுறை, மயிலாடு துறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரெயில்களில் கூடுதலாக 2 முன்பதி வில்லாத பெட்டி களையும், 2 முன்பதிவுடைய 2-ம் வகுப்பு பெட்டி களையும் இணைக்க வேண்டும். கொல்லம் - புனலூர் - செங்கோட்டை பாதையில் பயணிகள் ரெயில்கள் 14 பெட்டி களுடன் மட்டுமே ஓடு கின்றன. அதனை விரைவில் 18 பெட்டி களுடன் இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

      • மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
      • விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

      ஆலங்குளம்:

      விவசாய மேம்பாட்டுக்காக குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்கு மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரவேண்டும் என்ற விதி உள்ளது.

      அதேபோல் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு விவசா யிகள் இலவசமாக மண் எடுத்து செல்லலாம் எனவும் அரசு விதி வகுத்து ள்ளது.

      மேலும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்களால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்ட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

      ஆனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக வண்டல் மண் வெட்டி எடுத்துச் செல்லப்ப டும் நிலையில், அந்த வாகன ங்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றுவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

      தனி நபர் ஒருவர் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் சுமார் 15 ஜே.சி.பி. வாகனங்கள், சுமார் 100 டிராக்டர்களை கொண்டு அதிக அளவு வண்டல் மண் எடுக்கப்படுகிறது எனவும், அந்த வாகனங்கள் சாலை களில் அதிவேகத்தில் செல்லும்போது வண்டல் மண் கட்டிகள் சாலையில் விழுவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கி ன்றனர்.

      விவசாயத்திற்கு, மண்பா ண்டம் செய்ய, வீட்டு சொந்த உபயோ கத்திற்கு மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டிய மண், வர்த்தக ரீதியாக டிராக்டர் லோடு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை செய்யும் அரசியல் பிரமுகர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக இருப்பதாக கூறப்படுகிறது.

      கடந்த ஆண்டு மண் எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பொது ப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை வசம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே அதிக முறைகேடு உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

      எனவே கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தகுதியான விவசாயிகள் மட்டுமே குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 

      • வினோத் கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
      • சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது.

      கடையநல்லூர்:

      கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் காசிதர்மத்தில் இருந்து கடையநல்லூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

      ஆட்டோ கவிழ்ந்து விபத்து

      மேட்டுப்பள்ளி வாசல் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ இறங்கியது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த வினோத் சாலையில் தவறி விழுந்தார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து அவர் மீது விழுந்தது. இதில் வினோத் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

      இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

      மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • விழாவில் சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
      • 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பகவத்கீதை இலவசமாக வழங்கப்பட்டது.

      கடையம்:

      கடையம் அருகே உள்ள மயிலப்பபுரம் பெரியம்மன் கோவிலில் இந்து சமய பண்பாட்டு வகுப்பு 15 நாட்கள் நடைபெற்றது. விழாவில் இந்து சமய பண்பாடு குறித்து விளக்கப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சியாக சிறுவர்-சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், சந்திரசேகர், வெங்கடாம்பட்டி ஊராட்சி தலைவர் சாருகலாரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

      விழாவில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பகவத்கீதை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மதிய உணவு வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருமால், அசோக், முத்துகுமார், கொடியரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

      • மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது.
      • செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன பெட்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.

      செங்கோட்டை:

      செங்கோட்டை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு வசதிகளோடு அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த வர்களின் உடல்களை வைக்க பயன்படும் குளிர்சாதன பெட்டி இல்லாத நிலை நிலவி வந்தது. இதனையடுத்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் வேண்டு கோளுக்கிணங்க தொழிலதிபர் காந்தி செல்வின் என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்பில் குளிர்சாதன பெட்டியை வாங்கி தென்காசி மாவட்ட சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதாவிடம், செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.

      பின்னர் சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறும்போது, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த குளிர்சாதன வைப்பறை விரைவில் அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அறிவுடை நம்பி, மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

      • வ.உ.சி. மைதானத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
      • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

      நெல்லை:

      நெல்லை மாநகர பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக பாளை வ.உ.சி. மைதானம் விளங்கி வருகிறது. இந்த மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

      இங்கு ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழும் வகையில் அம்ருத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

      இதில் மாலை நேரங்களில் பாளை பகுதியில் உள்ள முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து பொழுது போக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இங்குள்ள சறுக்குகள், ஊஞ்சல்கள் உள்ளிட்டவற்றில் அவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

      ரூ. 14 கோடியில்....

      இதுதவிர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடியில் வ.உ.சி. மைதானம் புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கும் ஏராளமானவர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

      மேலும் விளையாட்டு வீரர்களும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்லும் நிலையில் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

      கழிப்பிட வசதி

      இவ்வாறு வருபவர்களின் அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிக்காக மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குழாய்கள் உள்ளன. மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

      இங்குள்ள கழிப்பறைகள் பெரும்பாலும் பூட்டிக் கிடப்பதாகவும், இதனால் மைதானத்திற்கு வரும் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைவதாகவும் ஏராளமானோர் புகார் கூறி வருகின்றனர். இதேபோல் சிலநேரங்களில் அங்குள்ள குடிநீர் தொட்டியில் குழாயை திறந்தால் தண்ணீர் வருவதில்லை என்றும், இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

      இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக வ. உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

      • 32 இடங்களில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
      • கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

      களக்காடு:

      களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெ டுக்கு பணி நடந்தது.

      யானைகள் கணக்கெடுக்கும் பணி

      அதன்பின் யானைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) தொடங்கி, 19-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

      களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனசரகங்களில் 32 இடங்களில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் யானைகளை நேரில் காண்பது, அவைகள் எச்சங்களை சேகரித்தல், நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட 3 முறைகளில் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

      அதனை தொடர்ந்து சூழலியலாளர் ஸ்ரீதரன் கணக்கெடுப்பு குழு வினருக்கு கணக்கெடுப்பது பற்றியும், சேகரிக்கப்படும் புள்ளி விபரங்களை செல்போனில் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார்.

      முகாமில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள் சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

      அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின் களக்காடு மலையில் வாழும் யானைகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

      • இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார்.
      • வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

      நெல்லை:

      நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வசந்த் (வயது 22). செண்டை மேள இசைக் கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வசந்த் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தை மீட்டு நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் வசந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று வசந்த் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த, கொள்கை பிடிப்புள்ள கட்சி தொண்டர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.
      • நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

      நெல்லை:

      நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை வடக்கு ஒன்றியம் அரியகுளம் ஊராட்சியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாளை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயண பெருமாள் கலந்து கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறும்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த, கொள்கை பிடிப்புள்ள கட்சி தொண்டர்களை, பூத் கமிட்டி நிர்வாகிகளாகவும், கிளை கமிட்டியில் நிர்வாகிகளாக நியமித்து, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலர ஒவ்வொரு தொண்டர்களும் முனைப்புடன் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

      கூட்டத்தில் ஊராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி அமைப்பதற்கான நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

      இதில் ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மகளிர் அணியினர், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

      ×