search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் விவசாயத்துக்கு அள்ளுவதாக கூறி விற்பனைக்கு எடுத்து செல்லப்படும் வண்டல் மண்- மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
    X

    ஆலங்குளத்தில் விவசாயத்துக்கு அள்ளுவதாக கூறி விற்பனைக்கு எடுத்து செல்லப்படும் வண்டல் மண்- மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

    • மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
    • விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

    ஆலங்குளம்:

    விவசாய மேம்பாட்டுக்காக குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து ள்ளது. இதற்கு மண் எடுக்கும் நபர் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும் அல்லது குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வரவேண்டும் என்ற விதி உள்ளது.

    அதேபோல் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு விவசா யிகள் இலவசமாக மண் எடுத்து செல்லலாம் எனவும் அரசு விதி வகுத்து ள்ளது.

    மேலும் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவல ர்களால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து மட்டுமே மண் வெட்ட வேண்டும். விதிகளை மீறுவோருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக வண்டல் மண் வெட்டி எடுத்துச் செல்லப்ப டும் நிலையில், அந்த வாகன ங்கள் எவ்வித விதிகளையும் பின்பற்றுவ தில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    தனி நபர் ஒருவர் உரிய அனுமதி பெற்றுள்ள நிலையில் சுமார் 15 ஜே.சி.பி. வாகனங்கள், சுமார் 100 டிராக்டர்களை கொண்டு அதிக அளவு வண்டல் மண் எடுக்கப்படுகிறது எனவும், அந்த வாகனங்கள் சாலை களில் அதிவேகத்தில் செல்லும்போது வண்டல் மண் கட்டிகள் சாலையில் விழுவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவிக்கி ன்றனர்.

    விவசாயத்திற்கு, மண்பா ண்டம் செய்ய, வீட்டு சொந்த உபயோ கத்திற்கு மட்டுமே பயன்படு த்தப்பட வேண்டிய மண், வர்த்தக ரீதியாக டிராக்டர் லோடு ஒன்று ரூ. 700 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை செய்யும் அரசியல் பிரமுகர்களுக்கு சில அதிகாரிகளும் உடந்தை யாக இருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு மண் எடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் தற்போது பொது ப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி த்துறை வசம் அனுமதி பெற்றாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே அதிக முறைகேடு உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கலெக்டர் நேரடி விசாரணை நடத்தி, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தகுதியான விவசாயிகள் மட்டுமே குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×