search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயிலை வாரம் 2 முறை இயக்க வேண்டும்-ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை
    X

    எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயிலை வாரம் 2 முறை இயக்க வேண்டும்-ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

    • அம்ருத் பாரத் ரெயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை சேர்க்க வேண்டும்.
    • செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடை அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:-

    அம்ருத் பாரத்

    அடுத்த கட்ட அம்ருத் பாரத் ரெயில் நிலைய முன்னேற்ற திட்டத்தில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை சேர்க்க வேண்டும். செங்கோட்டை - சென்னை இடையேயான பொதிகை அதிவேக ரெயிலுக்கு (12662) சென்னை மாம்பலத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பிட்லைன் வசதி செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாகவும், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், நெல்லை வழியாகவும் பிற மாநில ங்களுக்கு புதிய ரெயி ல்களை இயக்க முடியும்.

    செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போதுள்ள 4 நடைமேடைகளோடு புதிதாக 5-வது நடைமேடை அமைக்க வேண்டும். இங்குள்ள கணினி முன்பதிவு மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை, தென்காசி ரெயில் நிலைய நடை மேடைகளில் லிப்ட்டு களை அமைக்க ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டும் இன்ற ளவும் நிறுவப்ப டவில்லை. அவற்றை விரைவில் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    நிரந்தர ரெயில்களாக

    தற்போது இயங்கி கொண்டிருக்கும் வாராந்திர ரெயில்களான நெல்லை - மேட்டுப்பாளையம், தென்காசி வழியாக இயக்கப்படும் நெல்லை- தாம்பரம் ரெயில்களை நிரந்தர ரெயில்களாக்க வேண்டும். எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம் வழியாக வேளாங் கண்ணிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ரெயிலை வாரம் இரு முறை நிரந்தரமாக இயக்க வேண்டும்.

    தற்போது 12 பெட்டிகளோடு ஓடும் செங்கோட்டை - மயிலாடுதுறை, மயிலாடு துறை - செங்கோட்டை முன்பதிவில்லாத விரைவு ரெயில்களில் கூடுதலாக 2 முன்பதி வில்லாத பெட்டி களையும், 2 முன்பதிவுடைய 2-ம் வகுப்பு பெட்டி களையும் இணைக்க வேண்டும். கொல்லம் - புனலூர் - செங்கோட்டை பாதையில் பயணிகள் ரெயில்கள் 14 பெட்டி களுடன் மட்டுமே ஓடு கின்றன. அதனை விரைவில் 18 பெட்டி களுடன் இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×