என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளம் காய்கறி சந்தையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் உயர் அழுத்த மின்கோபுரம்- ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்
ByTNLGanesh19 May 2023 2:05 PM IST
- ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தையல்நாயகி காய்கறி சந்தையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் உயர் மின்னழுத்த கோபுரத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் நெல்சன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சந்திரன், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தர், முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல் என்ற நெப்போலியன், மகளிர் அணி சரஸ்வதி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், ஒன்றிய பிரதிநிதி ஆதி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.
Next Story
×
X