என் மலர்
- வெங்கடேசன் வயர்மேனாக பணியாற்றி வருகிறார்.
- மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக வெங்கடேசன் வங்கிக்கு சென்றார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பரணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45). இவர் பாளை பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ரூ. 2 லட்சம் அபேஸ்
இவர் ஆலங்குளம் பகுதியில் ஒரு இடம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நேற்று தனது மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக ஆலங்குளத்தில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கிக்கு அவர் சென்றார். அங்கு நகையை அடகு வைத்துவிட்டு ரூ. 2 லட்சம் பணத்தை பெற்றார்.
பின்னர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, ஆலங்குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து சக ஊழியர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அஙகு வைத்து பெட்டியை திறந்து பார்த்தபோது அவரது பணத்தை காணவில்லை.
சி.சி.டி.வி. காட்சிகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வெங்கடசேன் பணம் எடுத்து வந்த வங்கி முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வங்கியின் முன்பு சிலர் நின்று கொண்டு பணம் எடுத்து செல்பவர்களை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்து காணப்படும் இந்த பகுதியில் மேற்கொண்டு திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமலையப்பபுரத்தில் மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
- ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கடையம் வட்டாரம் 2023-24 கலைஞரின் திட்ட கிராமமான திருமலையப்ப புரத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் முன்னணி வீட்டு தோட்டம் செய்பவரான ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரை மற்றும் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் வட்டார தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பானுமதி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ராணுவவீரரான சுரேஷ் இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- பாத்திரங்களை ஆலங்குளத்தில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் விற்றது விசாரணையில் தெரியவந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது31). ராணுவவீரரான இவர் இரட்டை கொலை வழக்கில் கைதாகி தூத்துக் குடி பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருட்டு
இவரது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. சம்பவத்தன்று அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சுரேசின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் (32) என்பவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது
கைது
அலெக்சின் சகோதரர் பிரதீப் குமார், அவரது நண்பர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், இந்திரஜித் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பாத்திரங்களை ஆலங் குளத்தில் ஒரு பாத்திரக் கடையில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பனவடலிசத்திரம் அருகே நாய் ஒன்று வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்து குதறியது.
- வெறிநாய்க்கடித்து காயம் அடைந்த 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வெறி நாய் அலைந்து திரிந்து 50-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளையும் கடித்துக் குதறியது. இதனால் இப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
பனவடலிசத்திரம் அருகே உள்ள சிவகாமியாபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்து குதறியது. அதன் பின் மருதங்கிணறு பகுதியில் 5 பேரை கடித்தது. ஆராய்ச்சிபட்டியில் 3 மாடுகளையும், ஆயாள்பட்டி பகுதியில் 16 மாடுகளையும் கடித்தது. அதன் பின் குருக்கள்பட்டிக்கு சென்றது. அப்போது அங்கு பால் வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த பலரைகடித்து குதறியது.
இதில் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த பாப்பா (45), தாயாத்தாள் (75), முத்தத்தாள் (75), தனலட்சுமி (35), அன்னத்தாய் (55), ராஜ்குமார் (52), வேலுச்சாமி (70), அய்யம்மாள் (42), வெள்ளத்துரை (57) மற்றும் 7 வயது சிறுமி, சின்னகோவிலான்குளத்தை சேர்ந்த மாணிக்கத்தாய் (50), தர்மத்தூரணியை சேர்ந்த மாரிச்சாமி (55), பார்வதி (50) மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர்களை வெறிநாய் கடித்தது. வெறிநாய்க்கடித்து காயம் அடைந்த 14 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அதிக பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
தொடர்ந்து அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெறிநாய் பிடிபடும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து சங்கரன்கோவில் தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகரிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மேல் சிகிச்சைதேவைப்படும் சூழ்நிலையில் எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். அப்போது மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ராமநதி அணை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
- காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் நேரில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 14 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் விவசாயம் சார்ந்த மக்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ராமநதி அணை அருகில் சூச்சமுடையார் கோவிலுக்கு தென்புறம் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இக்கிணற்றில் விசை பம்புகள் மூலம் மோட்டார்கள் இயக்கப்பட்டு பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோட்டார்களை இயக்க மின்சாரம் பழைய மின்மாற்றி மூலம் சீரின்றி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்கவும், கடையத்திலிருந்து கிழமேலாக மின்தடத்தை கொண்டு வந்து , புதிய மின்மாற்றி அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேன்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை பெற்ற கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார்.
- ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூனார் முருகன், தென்காசி தெற்கு மாவட்ட மக்கள் தேச கட்சி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தார். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் சுபாஷ் வரவேற்று பேசினார்.
தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் பரமசிவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அப்துல் நசீர், நகர் மன்ற உறுப்பினர் ஷேக் முகமது, மக்கள் தேச கட்சி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜாராம், தேவகுமாரி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பசாமி, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் சகாயம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் டெய்சி ராணி, போஸ் பாண்டி, முத்துராஜா, கார்த்திக் விஜய், ஜான்சன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரின்ஸ் ரூபன் நன்றி கூறினார்.
- குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக சலீம் அவற்றை பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
- கைது செய்யப்பட்ட சலீமிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் கூலக்கடை பஜார் பகுதியில் உள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ள பாண்டி மற்றும் போலீசார் சரவணகுமார், அன்பரசன், சிவப்பிரகாஷ் ஆகியோர் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த தொழிலாளி சலீம் (வயது 43) என்பதும், அவர் குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக அவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 50 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் ரூ.41 ஆயிரம் ஆகும்.
- அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஒன்றியம் அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் அருண கிரி சாமி வரவேற்று பேசினார். தொடர்ந்து வடக்கு மாவட்ட செய லாளர் ராஜா எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் கணேச புஷ்பா, அரிய நாயகிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் காசி சிவகுருநாதன், கிளை செயலாளர் ராமகி ருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பா ளர் உதயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலமுருகன், சின்னதுரை, கிளை செயலாளர் மதியழகன், முத்துசாமி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா நன்றி கூறினார்.
- சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- புதிய சாலை பணிக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
கடையம்:
கடையம் யூனியன் திருமலையப்பபுரம் ஊராட்சி விலக்கு பகுதியிலிருந்து கோவிந்தபேரி செல்லும் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் தார் சாலை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் மேல் ஆகிறது. இந்த சாலை பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் பள்ளங்களாக காணப் பட்டது.
இதனால் பல கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதனையடுத்து கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமலை யப்பபுரம் -கோவிந்தபேரி செல்லும் புதிய சாலை பணிக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரவணசமுத்திரம் இமாம் காஜா மைதீன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப், திருமலையப்பபுரம் மாரியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ரவணசமுத்திரம் ராமலட்சுமி, மந்தியூர் ராகவேந்திரன், கோவிந்தபேரி இசேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மணி கண்டன், வார்டு உறுப்பி னர்கள் முகமது யக்யா, ஜமீலா மற்றும் சிவா, சிங்க குட்டி, மந்தியூர் முருகன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான், செந்தில், வெள்ளத்துரை, அரசு, ரவி , பேச்சி அண்ணாதுரை , காளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில, பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
- நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் தெற்கு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய தி.மு.க. சார்பில் குருக்கள்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாக முகவர்கள் கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மேலநீலிதநல்லூர் தெற்கு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெற்றிவிஜயன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், புனிதா, ராஜதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மேலநீலிதநல்லூர் ஒருங்கி ணைந்த ஒன்றிய தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், அவை தலைவர்கள், ஒன்றிய துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக புகார் எழுந்தது.
- உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
செங்கோட்டை:
குற்றால அருவிகளுக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் உள்ள நெய் அருவி மற்றும் தனியார் அருவிகளுக்கு செல்ல ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குண்டாறு அணைப்பகுதிக்கு மேலே உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டுகளை மர்ம நபர்கள் அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளை தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட அந்த கதவை மர்ம நபர்கள் அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், உத்தரவை மீறி நுழைந்த நபர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- தென்மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடை பெறுகிறது.
- மாநாட்டிற்கு இளைஞர் அணியினரை அதிக அளவில் அழைத்து செல்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சுரண்டை:
தென்காசி தெற்கு மாவட்ட தி.முக. இளை ஞரணி ஆலோசனை கூட்டம் சுரண்டையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் நடந்தது.
மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல் காதர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணா ராஜா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி மாவட்ட தி.மு.க. சார்பிலும், மாவட்ட இளை ஞரணி சார்பிலும் அவரது உருவப்ப டத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
தலைமை கழகத்தால் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பாளராக நியமிக்க ப்பட்ட ஜெய பாலனுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாழ்த்து தெரி விப்பது, தென்மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பா ளர்கள் கூட்டம் ராம நாதபுரத்தில் நடை பெறுகிறது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவதை முன்னிட்டு மாவட்ட கழக ஒத்துழைப்போடு ஒன்றிய, நகர, பேரூர் கழக செய லாளர் ஒத்துழைப்போடு வாக்குச்சாவடி பொறுப் பாளர்களை மேற்படி கூட்டத்திற்கு அழைத்துச் செல்வது, வருகிற டிசம்பர் மாதம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடத்த அனுமதி வழங்கிய தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்தும், மேற்படி மாநாட்டிற்கு இளைஞரணி செயலாளரின் அறிவுறு த்தலின்படி மாநாட்டிற்கு இளைஞர் அணியினரை அதிக அளவில் அழைத்து செல்வது, இல்லம் தேடி உறுப்பி னர் சேர்க்கையை ஒன்றிய, நகர, பேரூர் உள்பட அனைத்து இடங்க ளிலும் மேலும் அதிகப் படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் இளைஞர் அணி துணை அமைப் பாளர்கள் சிவக்குமார் ஐவேந்திரன்கிருஷ்ணராஜ் சுப்பிரமணியன் முகமது அப்துல் ரஹீம் மற்றும் பகுத்தறிவு பேரவை ஆறு முகம் வக்கீல் சக்தி சுப்பிர மணியன் நன்றி கூறினார்.







