search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமலையப்பபுரம்-கோவிந்தபேரியில் ரூ. 2.48 கோடி மதிப்பில் சாலைபணி தொடக்க விழா
    X

    திருமலையப்பபுரம்-கோவிந்தபேரியில் ரூ. 2.48 கோடி மதிப்பில் சாலைபணி தொடக்க விழா

    • சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததால் கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
    • புதிய சாலை பணிக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் யூனியன் திருமலையப்பபுரம் ஊராட்சி விலக்கு பகுதியிலிருந்து கோவிந்தபேரி செல்லும் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் தார் சாலை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் மேல் ஆகிறது. இந்த சாலை பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் பள்ளங்களாக காணப் பட்டது.

    இதனால் பல கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதனையடுத்து கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டது.

    இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமலை யப்பபுரம் -கோவிந்தபேரி செல்லும் புதிய சாலை பணிக்கு ரூ.2 கோடியே 48 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கடையம் யூனியன் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ரவணசமுத்திரம் இமாம் காஜா மைதீன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீராசமுத்திரம் ஜீனத் பர்வீன் யாகூப், திருமலையப்பபுரம் மாரியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ரவணசமுத்திரம் ராமலட்சுமி, மந்தியூர் ராகவேந்திரன், கோவிந்தபேரி இசேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மணி கண்டன், வார்டு உறுப்பி னர்கள் முகமது யக்யா, ஜமீலா மற்றும் சிவா, சிங்க குட்டி, மந்தியூர் முருகன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான், செந்தில், வெள்ளத்துரை, அரசு, ரவி , பேச்சி அண்ணாதுரை , காளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×