என் மலர்
நீங்கள் தேடியது "மாடி தோட்டம்"
- மாடி தோட்டம் அமைக்க 50 சதவிதம் மானிய விலையில் மாடி தோட்ட தொகுப்பு வழங்க உள்ளனர்.
- 900 ரூபாய் மதிப்பிலான இடு பொருட்களை ரூ.50 மட்டும் செலுத்தி ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று கொள்ளலாம்.
தாரமங்கலம்:
தமிழக அரசின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க 50 சதவிதம் மானிய விலையில் மாடி தோட்ட தொகுப்பு வழங்க உள்ளனர், அதில் 6வகை காய்கறி விதைகள், 6 செடி வளர்ப்பு பைகள்,2 கிலோ தேங்காய் நார் கழிவு கட்டிகள், வேப்ப எண்ணைய்,600 கிராம் உயிர் உரம் உள்ளிட்ட 900 ரூபாய் மதிப்பிலான இடு பொருட்களை ரூ.50 மட்டும் செலுத்தி ஒரு நபர் 2 தொகுப்பு வரை பெற்று கொள்ளலாம், பயனாளிகள் ஆதார் அட்டை நகல்,2 போட்டோவுடன் வந்து பெற்று கொள்ளலாம் என்று தாரமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருத்திகா தேவி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- திருமலையப்பபுரத்தில் மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
- ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கடையம் வட்டாரம் 2023-24 கலைஞரின் திட்ட கிராமமான திருமலையப்ப புரத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் முன்னணி வீட்டு தோட்டம் செய்பவரான ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரை மற்றும் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் வட்டார தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பானுமதி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






